நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20
SUNDAY OCTOBER 07, 2012

Print

 
கல்லடி பயணத்தின் ஓர் அரிய அனுபவம்

பாட்டிக்கு 29 வயது, தாய்க்கு 15 வயது, மகனுக்கு 1 வயது

கல்லடி பயணத்தின் ஓர் அரிய அனுபவம்

வெப்பக் காற்றானது எமது உடல் வெப்பத்தை தணிக்கின்றது என எனக்கு பொய் சொல்ல முடியாது. அந்த வெப்பக் காற்றை விடவும் ஒரு வித உஷ்ணத்தால் என் இதய துடிப்பு அதிகரித்துள்ளதாக எனக்குத் தோன்றுகின்றது. உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது 29 வயதுடைய ஒரு பாட்டியை சந்தித்திருக்கிaர்களா? 13-14 வயதுடைய ஒரு சிறிய பிள்ளை மற்றுமொரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஒரு தாய் என்ற ஸ்தானத்தில் இருப்பதை கண்டிருக்கிaர்களா?

நாம் அந்தக் காட்சியைக் கண்ட துர்ப்பாக்கியசாலிகள். நான் இப்போது இருப்பது திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சலம் பற்று பிரதேச சபை செயலாளர் பிரிவிலுள்ள கல்லடி மற்றும் புன்னையடி என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு தமிழ் கிராமத்தில. 1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெரும் தானியக் களஞ்சியமாக இருந்த இந்த பிரதேசம் புலிகளின் மா வீரர் கிராமங்களாக அறிமுகப்படுத்திய நாள் முதல் மிக வறிய மக்கள் வாழும் பிரதேசமாக உள்ளது.

அவர்கள் படிக்கும் பாடசாலைக்கு கொண்டு செல்லும் மேசை, கதிரைகள், கற்றல் உபகரணங்கள், பிள்ளைகளின் உணவு, இவை மட்டுமன்றி இந்த வறிய மக்கள் கடலுக்குச் சென்று பிடிக்கும் மீனுக்கும் வரி செலுத்த வேண்டியிருந்தது. வறிய மக்கள் வாழும் ஒரு கிராமமாகவே இது இருக்கின்றது. முன்னர் கூறிய மா வீரர் கிராமம் என்ற பெயரைக் கூட கேட்பது அருவருப்பாகவே உள்ளது.

கிழிந்த உடையணிந்த தூசி படிந்த உடம்பைக் கொண்டு மிகத் துன்பத்தோடு வாழும் அவர்களின் கதையை இப்போது நீங்களும் கேட்கலாம. அதற்கு முன் மற்றுமொரு விடயமும் உங்களுக்கு கூற வேண்டும். இப்பிரதேசம் முதல் நூற்றாண்டு தொடக்கம் ஒரு தானியக் களஞ்சியமாக மிகவும் செழிப்பாக இருந்தது. தானிய வங்கிகள் கூட இருந்ததாக கூறும் ஏடுகளினால் வெளிப்படும் பாஷான பப்பத விகாரை காணப்பட்டதும் இந்தக் கல்லடியில் தான். அதே சமயம் புலிகளின் கிழக்கு வானொலி ஒலிபரப்பு நடைபெற்றது இங்கேதான. 120 அடி உயரமுடைய புலிகளின் வானொலி ஒலிபரப்பின் கம்பம் காணப்பட்டதும் இங்கு தான். இங்கு காணப்படும் கடற்படை முகாமின் கம்பியின் வேலிக்கப்பால் இருந்து சாப்பாடு, சாப்பாடு என்று அப்பாவி தமிழ் பிள்ளைகளுக்கு உணவுக்கு ஏதாவது தருமாறு அதிகாரிகளை கஷ்டப்படுத்தியது ஏன்? அவர்களுக்குத் தேவைப்படும் குடிநீரை அரசாங்கம் மூலம் கொடுக்கப்படுவதோடு அனைத்து மானியங்களும் பெற்றுக்கொடுப்பது கடற்படையினர் மூலமாகும். அரசாங்கம் பெரும்பாலான நடவடிக்கைகளை எடுத்தாலும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள அவர்களிடையே இருந்த சில சக்திகள் இன்னும் தடையாக அமைகின்றது.

குணபால, ராஜா, சுவேத்ரநந்தி போன்றோரை நான் கல்லடி மாவடிச்சேனை பிரதேசத்தில் தான் சந்தித்தேன். மிகச் சிறியதோர் வீட்டில் வாழும் இந்த பெண் பிள்ளையின் வயது 15 ஆகும். அவள் மிகக் கஷ்டப்பட்டு 9 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறாள் மோட்டார் வெடிகளுக்கு மத்தியில் மென்மேலும் வறுமையில் இருந்து கொண்டு படிக்க அவளால் முடியவில்லை.

அவளின் பிள்ளைகளுக்கு வயது ஒன்றும் 2 மாதமுமாகும். புலிகள் இயக்கத்துக்கு அப்பாவி பிள்ளைகளை சேர்த்துக்கொள்ள போராளிகள் வந்த போது இத்தகைய பெண் பிள்ளைகள் காலத்துக்கு முன்னரே கர்ப்பிணியாக வேண்டிய நிலை ஏற்பட்டது. கர்ப்பிணிகளை இயக்கத்தில் சேர்த்துக்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது என்பதால் அதிலிருந்து மீள அவர்களுக்கிருந்த ஒரே மாற்aடு இதுவாகும். சுவேந்திரநந்திக்கும் இந்நிலை தான் ஏற்பட்டது.

கல்லடி புனித பூமியில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அலிஒலுவ பொலிஸின் அதிகாரி விஜேவிக்ரம அவர்கள் இந்த தேடலின் போது எம்மோடு இணைந்துகொண்டார். அவர் எமது தமிழ் - சிங்கள மொழி பெயர்ப்பை நல்லதம்பி கலைச்செல்வத்தோடு இணைந்து எமக்கு பெரும் ஒத்துழைப்பை வழங்கினார். கல்லடி புண்யாடி பிரதேச மக்கள் ஒரு சிங்கள வார்த்தை கூட தெரியாதவர்கள். எனவே இந்த மொழிபெயர்ப்பாளர் எமக்கு ஒரு பெரும் வளமாக இருந்தார். அவர் மூலம் இந்த பெண் பிள்ளையோடு பேசிய சில விடயங்களை இவ்வாறு எழுதுகிறேன். எனது தந்தையும் கடற்றொழிலைத் தான் செய்தார். மிகச் சிரமப்பட்டு பல நாட்கள் கடலில் சென்று பிடிக்கும் மீனில் ஒரு பகுதியை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். எங்களுக்கு மின்சாரம் இருக்கவில்லை. விளக்கு வெளிச்சத்தில் தான் படித்தோம். மண்ணெண்ணெய்க்குக் கூட நாம் அவர்களுக்கு வரி செலுத்தினோம். எமது கல்வி, எமது தமிழ் மரபுகள், எமது கலாசாரம் என்பவற்றை அவர்கள் அழித்தார்கள்.

நான் அதனால்தான் கடற்றொழிலையே நடத்தி வரும் ராஜாவை 13 ஆவது வயதில் திருமணம் செய்தேன். ஆனால் எமக்கு ஜீவியம் நடத்த ஒரு மார்க்கம் இருக்கவில்லை. எனது கணவருக்கு எந்த நாளும் வேலை இருக்கவில்லை. வேலைக்குச் சென்ற நாளுக்குக் கூட 30 ரூபாவைக் கூட தேடிக்கொள்ள முடியவில்லை. சுவேத்ரநந்தியின் தந்தை கடற்றொழிலை மட்டும் செய்யவில்லை. அவளின் தந்தை செல்லதம்பி குணபால கடலுக்குச் செல்ல முடியாத காலங்களில் கூலி வேலைக்குச் சென்றார். அவளின் தாய் செல்லத்தம்பி சுவாநந்தி (வயது 29 )யின் கடைசி பிள்ளையின் வயது 3 ஆகும். அதன்படி அவளின் மகள் சுவேத்ரநந்தியின் பிள்ளையை விட அவளின் கடைசிப் பிள்ளை 2 வயதால் மூப்பானவர்.

3 வயதுடைய சின்னமாவும் 1 வயதுடைய மகளும் தூசியில் விளையாடிக்கொண்டிருக்கும் இந்தக் காட்சியானது எவ்வளவு உணர்வுபூர்வமானது தெரியுமா? இது மனிதத் தன்மையற்ற மனித நடவடிக்கைகளின் பெறுபேறல்லவா? புலிகள் அவர்களுக்குப் பெற்றுக்கொடுத்த சிறப்பு இதுவா? நான் அந்த பாட்டி செல்லதம்பி குணபால சுவாநந்தியோடு (வயது 29) மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு பேசினேன்.

எங்களுக்கு எவ்வித அரசியலும் தெரியாது ஐயா. எமக்கு நாட்டின் ஒரு துண்டும் தேவையில்லை. எமக்குத் தேவை என்னவென்றால் நன்றாக சாப்பிட்டு, உடுத்தி பிள்ளைகளோடு சந்தோஷமாக இருக்கவே ஆசைப்படுகிறோம். அவர்களுக்கு படிக்கவும் முடியாது போயிற்று. நான் திருமணம் செய்ததும் 13 வயதில் தான்.

அரசாங்கத்தால் கொடுப்பனவை மட்டும் தான் எங்களுக்குக் கிடைக்கின்றது. சுனாமி உதவி என்று சில வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து சில உதவிகள் கிடைத்த சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனாலும் எங்களால் ஒரு நாளைக்கு இருநூறு முன்னூறு ரூபாவால் சீவிக்க முடியுமா? எமக்கு சுய தொழில் வாய்ப்பொன்றை செய்ய உதவி செய்வீர்களானால் அது பெரும் நன்மை.

அவ்வாறு சொல்லும்போது அவளது விழிகளில் வழிந்தோடிய கண்ணீர் துளியொன்றையும் நான் கண்டேன். உண்மையில் இம்மக்களின் வாழ்க்கையில் சூரியன் சந்திரன் உதிப்பது எப்போது? அரசாங்கத்தால் எல்லாவற்றையும் செய்ய முடியாது. அவர்களை இன்னும் பிழிந்து கொண்டிருக்கும் சில மதம் சார்ந்த சக்திகள் அரசாங்கத்துக்கு உண்மையான நிலவரத்தை அறிந்து கொள்ள இடமளித்துள்ளதா என்பது சந்தேகத்துக்கிடமானதாகும்.

நான் அவர்களின் தூசி நிரம்பிய நகரத்திலிருந்து புண்யாடி கிராமத்தின் முக்கிய ஒரு பெரியவரொருவரோடு செல்கிறேன். புண்யாடி நாமகல் வித்தியாலயத்தின் ஒரு ஆசிரியரை சந்தித்தேன். அவர் பெயர் நல்லதம்பி கலைச்செல்வம். அவர் ஆரம்பத்திலிருந்தே எங்களோடு மொழிபெயர்ப்பில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.

எனது பிறப்பிடமும் கல்முனை தான். அன்று பெரும்பாலான படித்தவர்களை பலியெடுத்த மாவட்டங்கள் தான் திருகோணமலையும், யாழ்ப்பாணமும். இன்று அதன் மறுபுறம் தான் காணப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் தான் 30 வருட காலமாக எம்மை வருத்திய குரூர பயங்கரவாதம்.

இப்பகுதி மக்கள் அரசாங்கத்தை விரும்புகிறார்கள். சமாதானத்தை விரும்புகிறார்கள். ஆனால் அன்றிருந்த முதலமைச்சர் எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க நினைத்துக் கூட பார்க்கவில்லை. புதிய முதலமைச்சராவது இதுபற்றி யோசித்தால் நல்லது. 14-15 வயதுக்கிடையில் திருமணம் செய்வது, 50-60 வயதாகும் போது இப்பகுதி மக்கள் இறந்துபோவதை தடுக்க யாராவது உதவி செய்ய வேண்டும். இங்குள்ள மக்கள் நன்றியுள்ளவர்கள். அவர்கள் சாப்பாடுக்காக பிச்சை வாங்க விரும்பாதவர்கள். ஆனால் அவர்களுக்கு சம்பாதிக்க ஒரு வழியும் இல்லை.

மூலம்: உபாலி சமரசிங்க

தமிழில்: நிஷா ஆப்டீன்...-


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]