நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20
SUNDAY OCTOBER 07, 2012

Print

 
‘கிழக்கு வெளுத்ததடி!

‘கிழக்கு வெளுத்ததடி!

உலக ஆசிரிய தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் எங்கள் நல்லாசிரியர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்!

ஆசிரியத்துவம் என்பது தொழிலன்று. அஃது ஒரு சேவை. ஆனால், இன்று அது ஒரு தொழிலாகவும் மாறியிருக்கிறது. பணம் உழைக்கும் ஒரு பொறிமுறையாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. அதேநேரம் எதிர் காலச் சந்ததியினரின் கல்விக் கண்க ளைத் திறந்துவிடும் பணியைச் சேவையாகக் கருதி தம்மை அர்ப்பணித்துள்ளவர்களும் இருக்கிறார்கள். அதனால்தான் அந்தப் பெருந்தகைகளை கெளரவப்படுத்து முகமாக ஆசிரிய தினம் கொண்டாடப்படு கிறது. ஒவ்வொரு நாட்டிலும் தமது செழிப்பிற்காகப் பங்களிப்புச் செய்தவர்களுக் காக வெவ்வேறு தினங்களில் இந்தத் தினத்தை ஒவ்வொரு மேதையின் பெயரிலும் கொண்டாடுகின்றார்கள் நமது அயல்நாடான இந்தியாவின் உப ஜனாதிபதியாகவிருந்த டாக்டர் சர்வாபள்ளி இராதாகிருஷ்ணன் சிறந்த ஓர் ஆசிரியராகவும் பணியாற்றி யிருக்கிறார். அதனால், அவரின் வேண்டு கோளுக்கிணங்க, அவருடைய பிறந்த தினமான செப்டம்பர் மாதம் ஐந்தாந்திகதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

நமது நாட்டில் இந்தப் புனிதப் பணி அப்பழுக்கில்லாமல் முன்னெடுக்கப்பட்டா லும் தமிழ்மொழி மூலக் கல்வியில் சீரழிந்த நிலையே காணப்படுகிறது. இது மலையகப்பகுதியில்தான் கூடுதலாக இருக்கிறது என்று நினைத்தால் அது பிழை என்பது கிழக்கு மாகாணத்திற்குச் சென்றதும் புரிகிறது கூடுதலாக.

‘ஆற அமர’ மலையகத்திற்கு மட்டுமா? இந்தப் பகுதிகளுக்கு கிடையாதா? என்று எதிர்பார்ப்புடன் கிழக்கில் கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை! வடக்கு, கிழக்கு மலையகம் என எந்தப் பகுதியில் தமிழ்க் கல்வியில் சீரழிவு, குளறுபடி, நெறிப்பிறழ்வு காணப்படுகிறதோ அதனை வெளிக்கொணர ‘ஆற அமர காத்திருக்கிறோம். அதேநேரம் வெறுமனே கல்வித்துறை மட்டுமன்றி ஏனைய துறைகள் தொடர்பாகவும் பல்சுவை தகவல்களைத் தாங்கியதாகவும் ‘ஆற அமர’ வெளிவருவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். குறுகிய வரம்பை உடைத்துக்கொண்டு வெளியில் சிறகடித்துப் பறக்காமல் தூய காற்றைச் சுவாசிக்க முடியாது என்பதை உங்களுக்குச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை.

ஆனால், நமது தமிழ்க் கல்வித்துறையில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் தமது வரம்பை மீறி தடம்மாறிச் செல்கிறார்கள் என்பதை அறிய வேதனையாக இருக்கிறது. இந்த முறை ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியானதன் பின்பு பாடசாலைகளில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் விசித்திரமாக உள்ளது. ஆழ ஊடுருவித் துருவிப் பார்த்தால் வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியானவை.

பரீட்சை நடப்பதற்கு முன்பு ஆசிரியர்களிடம் மேலதிக வகுப்பில் படிப்பதற்காக மாணவர்கள் ஐநூறு ரூபாவைச் செலுத்தவேண்டும். ஆனால் பாடசாலை முடிந்த பின்னர்தான் வகுப்பு நடைபெறும். அதற்குத்தான் ஐநூறு ரூபாய்! ஆசிரியர்கள் இப்படித்தான் அரும்பணியாற்றுகிறார்கள். ‘ஆறும் மணலும் நீண்டு கிடக்கும்’ பகுதியில் இது சகஜமாய் நடக்கிறது.

பரீட்சை முடிந்து பெறுபேறு வெளியா னதும் சிறப்பாகத் தேர்ச்சியடைந்த மாணவர்கள் பாடசாலைகளில் பாராட்டப்படுகிறார்கள். நல்ல விடயம் என்று நீங்களும் மனதாரப் பாராட்டிப் புகழ்வீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

கிழக்கில் விசேடமாக ‘பரண்சேனை’ ‘அந்தக் கரை பற்று’ ‘வேப்பந்தொழிற்சாலை யடி’ முதலான கல்வி வலயங்களில் அதிகாரிகள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்ற வேண்டும் என்கிறார்கள் பெற்றோர்கள். அப்போதாவது அவர்களுக்கு ஆசிரியர்கள் செய்யும் சேவை யாதெனப் புரியட்டும் என்பது அவர்களின் ஆதங்கம்.

ஐந்தாந்தர புலமைப் பரீட்சைக்குப் படிப்பதற்கு 500 ரூபாய் செலுத்தும் மாணவர்கள், பரீட்சையில் வெற்றி பெற்றதும் இன்னுமொரு பூஜ்ஜியத்தைக் கூடுதலாகச் செலுத்த வேண்டும். ஆமாம், பாடசாலையில் மாணவர்களைப் பாராட்டுவதென்றால் ஒரு மாணவர் தலா ஐயாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் பாராட்டு விழா கலகலப்பாக இருக்குமாம். இதில் சில பெற்றோர்களுக்கு வேண்டுமானால் உடன்பாடு இருக்கலாம். ஆனால், பெரும்பாலான பெற்றோர் இதற்கு மாறாகவே இருக்கிறார்கள். பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்குப் பெரும் கஷ்டப்பட்டோம்; பரீட்சையில் வெற்றி பெற்றதும் இது என்ன நியாயம் என்று கேட்கிறார்கள் அவர்கள். பாடசாலையில் வைத்து மேலதிகமாகக் கற்பிப்பதற்கு ஐநூறு ரூபாய் அறவிடுகிறார்கள். அந்தக் காலத்து வாத்திமார் இப்படியா செய்தார்கள்? என்று பொரிந்து தள்ளுகிறார்கள் கஷ்டப்படும் பெற்றோர். இன்னும் எத்தனையோ விடயங்கள் உண்டு; சொன்னால் இவர்களின் உண்மையான சாயம் வெளுக்கும் என்கிறார்கள் அவர்கள். சரி ஆற அமர அவற்றைத் துவைத்து எடுக்கலாம் என்று காத்திருக்கிறோம். நீங்களும் ஆற அமர பொறுத்திருங்கள். நீர்த்தேக்கம் பகுதியில் இன்னும் சுவாரஸ்யம் உண்டு. ஆசிரியர்மார் செய்யும் கோலத்தைக் கண்டுகொள்ளாமல் ‘ஆற அமர’ இருக்கிaர்கள். ஆசிரியைமார்தான் தவறுக்குக் காரணம் என்கிaர்கள் என்று ஓர் ஆசிரியை விசனப்பட்டுக் கொள்கிறார்.

ஆனால், ஆண்கள் தவறிழைத்தால் சம்பவம், பெண்களின் தவறுகள் சரித்திரமாகின்றன என்று சொல்வார்கள் அல்லவா! அதுதான் ஆசிரியைகளின் தவறுகள் மீள ஏற்படாதிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூடுதல் கரிசனை, அவ்வளவே!


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]