நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20
SUNDAY OCTOBER 07, 2012

Print

 
கோல்டன் கீ ஆஸ்பத்திரிக்கு புதிய ஆலோசனைக் குழு நியமனம்

கோல்டன் கீ ஆஸ்பத்திரிக்கு புதிய ஆலோசனைக் குழு நியமனம்

கண் மற்றும் காது, மூக்கு, தொண்டை என்பவற்றுக்கு சிறப்பு சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய கோல்டன் கீ ஆஸ்பத்திரிக்கு தலைசிறந்த தொழில்சார் நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைச் சபையொன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியின் சிறந்த நிர்வாகம் மற்றும் மேலதிக அபிவிருத்தி என்பவற்றைக் கருத்திற்கொண்டு மருத்துவத் துறை சார்ந்தவர்களையும் உள்ளடக்கியதாக இந்த புதிய ஆலோசனை சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி அறிவித்துள்ளது.

இந்த அலோசனை சபையின் தலைவராக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட போராசிரியர் ரொஹான் ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். டொக்டர் சாலிய பத்திரண, டொக்டர் செளமிய பரணவிதாண, டொக்டர் தில்ருவணி ஆர்யசிங்க, ஆஸ்பத்திரியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி நிரஞ்ஜன் சில்வா ஆகியோர் இந்த ஆலோசனை சபையின் ஏனைய உறுப்பினர்களாவர்.

இலங்கையில் கண், காது,மூக்கு, தொண்டை என்பவற்றுக்கு விஷேட நிபுணத்துவ சிகிச்சைகளை வழங்கக் கூடிய நவீன வசதிகளைக் கொண்ட ஒரேயொரு தனியார் ஆஸ்பத்திரி கோல்டன் கீ ஆஸ்பத்திரியாகும். என்று கூறினார். ஆஸ்பத்திரியின் பிரதம செயற்பாட்டு அதிகாரியும் ஆலோசனை சபையின் உறுப்பினருமான நிரஞ்ஜன் சில்வா. எனவே இங்குள்ள வளங்களின் மூலம் நோயாளிகள் உச்சக்கட்ட பலனைப் பெற்றுக் கொள்ளும் வகையில் வைத்திய நிபுணர்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும் என்று அவர் மேலும் கூறினார்.

ஆலோசனைக் குழுவின் தலைவர் டொக்டர் ரொஹான் ஜயசேகர மனித பரம்பரை அலகுகள் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளதோடு மருத்துவக் கல்வித்துறையில் 38 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்டவர்.

ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான நிரஞ்ஜன் சில்வா 2010 அக்டோபரில் கோல்டன் கீ ஆஸ்பத்திரியில் இணைந்து கொண்டவர். இலங்கை கடற்படையில் 22 வருடங்கள் பணியாற்றிய இவர் இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் , இத்தாலி ஆகிய நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றுள்ளதோடு தாய்லாந்து, சைப்பிரஸ் ஆகிய நாடுகளில் பல மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார்.

கண் மற்றும் காது, மூக்கு, தொண்டை என்பவற்றுக்கு சிறப்பு சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய கோல்டன் கீ ஆஸ்பத்திரி கண் தொடர்பான சகல நோய்களையும் கண்டறிந்து அவற்றுக்குத் தேவையான சிகிச்சைகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளக் கூடிய நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட ஒரேயொரு தனியார் ஆஸ்பத்திரியாகும்.

குளுகோமா மற்றும் சிறுவர்கள் தொடர்பான கண் ஒழுங்கீனங்கள் என்பவற்றுக்கும் இங்கு விரிவான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இந்த வகை பிரச்சினைகளுக்கு 24 மணி நேரமும் விஷேட சிகிச்சைகளை வழங்கக் கூடிய ஓர் ஆஸ்பத்திரியாகவும் இது காணப்படுகின்றது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]