நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20
SUNDAY OCTOBER 07, 2012

Print

 
நாட்டின் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்கும் தொழிற்கற்கைகளுக்கான சர்வதேச கல்லூரி ICPS

நாட்டின் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்கும் தொழிற்கற்கைகளுக்கான சர்வதேச கல்லூரி ICPS

அட்டாளைச்சேனை, தொழிற்கற்கைகளுக்கான சர்வதேச கல்லூரி ICPS (International College of Professional Studies) பாடசாலை மாணவர்களுக்கும், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கும் கல்வி மற்றும் கற்கை நெறிகளை நடாத்தி நாட்டின் தேசிய அபிவிருத்திக்கு மகத்தான பங்களிப்பு நல்கி வருகின்றது.

இலக்கம் 06, பிரதான வீதி, சுள்ளியர் பூங்கா, அட்டாளைச்சேனை எனும் முகவரியில் இயங்கிவரும் தொழிற்கற்கைகளுக்கான சர்வதேச கல்லூரி முன்பள்ளிக்கல்வி, ஆங்கிலம், தமிழ், சிங்களம், அரபு மொழி வகுப்புக்கள், கணனி தொழில்நுட்பம், தாதி சான்றிதழ் கற்கை நெறி, ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சி, தரம் 06 முதல் 11 வரையிலான மாணவர்கள் மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளுடன் பொதுக்கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கல்வியிலும் ஆர்வங் காட்டி வருகின்றது.

2012 சர்வதேச தாதியர் தினத்தில் இக்கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட தாதி சான்றிதழ் கற்கை நெறி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரி அக்கரைப்பற்று ஜீனியஸ் தனியார் வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய இக்கற்கைநெறியில் நாடளாவிய ரீதியிலுள்ள 18 இளைஞர் யுவதிகள் பங்குகொண்டு தமக்குரிய சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.

கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளரும், அக்கரைப்பற்று வர்த்தகர்கள் சங்கத் தலைவருமான எம்.எம்.எம்.லியாகத் அலி, பணிப்பாளர் டாக்டர் ரி.ஆர்.எஸ்.ரி.ஆர் றஜாப், அதிபர் ஏ.அப்துல் அkல், நிருவாக முகாமையாளர் எம்.கே.அன்சார் உள்ளிட்ட பணிப்பாளர் சபை பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு சரியான வழிகாட்டலை வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. நாடளாவிய ரீதியில் தாதி சான்றிதழ் கற்கை நெறியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகள் சான்றிதழ் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட நிலையில் 02ஆவது 03ஆவது தொகுதி தாதி சான்றிதழ் கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இக்கல்லூரிக்கு பாடசாலை மாணவர்கள், மற்றும் இளைஞர் யுவதிகள் தேசிய ரீதியில் வழங்கி வரும் ஒத்துழைப்பு கல்லூரியின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வெளிக்காட்டுவதாக முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எம்.எம்.லியாகத் அலி கருத்து வெளியிட்டார்.

தாதி சான்றிதழ் கற்கை நெறியை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. உதுமாலெப்பை தாதி சான்றிதழ் கற்கை நெறி மூலம் இக்கல்லூரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாகவும், நாட்டின் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்கி உள்ளதாகவும், இதுபோன்று நாட்டுக்கு பயன்மிக்க கற்கை நெறிகளை இக்கல்லூரி தொடர்ந்து வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

(ஐ.எல்.எம்.றிஸான் அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]