நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25
SUNDAY JULY 15, 2012

Print

 
சமூகத்தின் நன்மை கருதியே அரசுடன் இணைந்தது மு.கா

தனித்தா, தமிழ் கூட்டமைப்புடனா, அரசுடனா? இழுபறிக்கு முற்று;

சமூகத்தின் நன்மை கருதியே அரசுடன் இணைந்தது மு.கா

அரசுக்குள் இருந்துகொண்டே தமது பலத்தை நிரூபிக்கப் போவதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதி பதியுடனும் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த ஆகி யோருடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் திருப்தி கண்டதனாலேயே அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தோ மென அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் வாரமஞ்சரிக்கு தெரிவித்தார்.

கிழக்கு தேர்தலில் மு.கா போட்டியிடுவது தொடர் பில் அக்கட்சிக்கு பல்வேறு தெரிவுகள் (லிptions) இருந்தன. தனித்துப் போட்டியிட வேண்டுமெனவும் அரசுடன் இணைந்து போட்டியிட வேண்டுமெனவும் தமிழ்க் கூட்டமைப்பில் சேர்ந்து போட்டி யிடவேண்டுமெனவும் பொதுச்சின்னத்தில் களமிறங்க வேண்டுமெனவும் வலுவான பல்வேறு கோரிக்கைகள் எழுந்திருந்தன. எனினும் முஸ்லிம் சமூகத்தின் அபிலா ஷைகளை சீர்தூக்கிப் பார்த்து இந்த முடிவை மேற்கொண்டோம். தேர்தல் தொடர்பில் அரசுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட வுள்ளோம். அரசுக்குள் இருந்து கொண்டே மு.கா தனது பலத்தை நிரூபிக்கும். அத்துடன் எமது கட்சி சார்பில் களத்தில் இறங்கும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற உழைப்போம் என அவர் குறிப்பிட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லிம் காங்கிரஸ¤க்கும் அரசுக்குமிடையில் பரஸ்பரம் நம்பகத்தன்மையை கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இருதரப்பாருக்குமிடையே நிலவி வரும் அவநம்பிக்கை போக்கப்பட வேண்டியுள்ளது எனவும் ஹக்கீம் தெரி வித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் தமக்கு இருந்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அரசுடன் இணைந்து போட்டியிடவுள்ள முகாவுக்கு அம்பாறை மாவட்டத்தில் ஆறு வேட்பாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான நேர்முகப்பரீட்சைகள் நேற்று கொழும்பு தாருஸ்ஸலமாவில் நடைபெற்றன. நேர்முகப் பரீட்சைகளில் சமூகமளிக்க பலர் ஆர்வம் கொண்டிருந்ததை அங்கு காண முடிந்தது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]