நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25
SUNDAY JULY 15, 2012

Print

 
தந்;தையர் நாடென்ற போதினிலே…...

தந்;தையர் நாடென்ற போதினிலே…...

இலங்கையின் பாராளுமன்ற விவகார அமைச்சின் துணை ஆராய்ச்சி; அலுவலராகப் பணியாற்றும் இவருக்கு கடல் கடந்த இந்திய விவகார அமைச்சின் முக்கிய முன்முயற்சியான 'இந்தியாவை அறியுங்கள்' 20 ஆவது செயற்றிட்டத்தில் பங்குபற்றும் வாய்ப்புக் கிடை த்தது. இச்செயற்திட்டத்தின் மூலம் அவருக்குக் கிடைத்த அனு பவமே இக்கட்டுரை…

நான் இலங்கைப் பெண் ணாக இருந்தபோதும் இந்தியாவில் வேர்க ளைக் கொண்டவள். அந்தக் கலாசாரத்திலேயே வளர்க்கப் பட்டவள். ஆனால் இந்தியா என் மேல் ஏற்படுத்திய பாதிப்பு அத் துணை உவப்பானதாக இல்லை. ஆதற்குக் காரணம் உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகங்களி னூடாக இந்தியா பற்றி நான் அறிந்து கொண்டவை தான். இந்தியத் திரைப்படங்களைப் பார்ப்பேன். எப்போதாவது இந்தி யர்களைச் சந்திப்பேன் .அதுவும் தமிழ்நாட்டவர்களை. 20 ஆவது 'இந்தியாவை அறிந்து கொள் ளங்கள்'; செயற்திட்டத்துக்கு நன்றி கள். இந்திய பற்றிய பார்வை யையே இது மாற்றியிருக்கிறது. எனது மூதாதையர்களின் , எனது வேர்களின் நாட்டைப்பற்றிய பய பக்தியை மரியாதையை அது தான் என்னுள் ஏற்படுத்தியது.

மிகவும் புராதனமான ஆனால் எல்லா நவீன சிந்தனைகளுக்கு வழிவிடுகின்ற, இத்துணை அற் புதமான ஒரு கலாசாரத்தில் நானும் பங்கு வகிக்கின்றேன் என்பது என்னை மிகவும் பெரு மை கொள்ளச் செய்கின்றது.

எவருடனும் இலகுவில் பழக்கும் வழக்கம் கொண்டவ ளல்ல நான். கூச்ச சுபாவங் கொண்டவளாதலால், 20 ஆவது 'இந்தியாவை அறிந்து கொள்ளு ங்கள்;" செயற்திட்டத்தில் என்னை இணைந்து கொள்ளுமாறு எனது தந்தை யோசனை கூறியபோது நான் பெரிதாக ஆர்வங் காட்ட வில்லை. போதிய மொழி ஆளுமை எனக்கில்லாதது மாத் திரமல்ல, நவீன உலகுடனான பரிச்சயமும் மட்டுப்படுத்;தப்பட்ட தாகவேயிருந்தது ஆதலால் உலகின் பல்வேறு பாகங்களைச் சேர்ந்த 'கும்பலொ'ன்றுடன் எவ் வாறு நான் மூன்று வாரங்களைக் கழிக்கப்போகின்றேன் என்ற கவலை எனக்கு இருந்தது.

நான் போக மாட்டேன் என்று அடம் பிடித்தேன். ஆனால் எனது தந்தையார் தான் பிடிவாதமாக என்னை அனுப்பினார். இன்று அவருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் அவரின் ஆதரவில்லாமல் இருந்திருந் ;தால், இந்தியாவின் அதிசயங் களை அள்ளிப்பருகும் ஆர்வங் கொண்ட ஒரு குழுவினருடன் இணையும் சந்தர்ப்பத்தை நான் இழந்திருப்பேன். என்றென்றும் மறக்க முடியாத எனது பயணம் இதோ ஆரம்பமா கின்றது…..

டெல்லிக்கு நான் செல்வது இதுவே முதல் முறை. என் இதயம் வேகவேகமாகத் துடி க்கத் தொடங்கியது. விமானம் இந்திரா காந்தி விமான நிலைய த்தைத் தொட்டதும், சுற்று முற்றும் பார்த்தேன். என் கண ;களை என்னாலேயே நம்ப முடியவில்லை. நான் இருப்பது இந்தியாவிலா அல்லது வேறு ஒரு மேற்குலகிலா? கட்டடக் கலையிலும் ஏனைய வசதிகளிலும் அந்த விமான நிலையம் ஏனைய சர்வதேச விமான நிலையங்களுக்கு ஒப்பானதாக, … நவீன இந்தியா எனக்குள் ஏற்படுத்திய முதற் பதிவு அது.

தொடர்ந்து வந்த நாட்களில், பல்வேறுபட்ட நிறுவனங்களின் தலைவர்கள் ஆட்சி முறைமைகள், உள்ளகப் பாதுகாப்பும் தயார்நிலையம். அரசியல் மற்றம் சுற்றாடல் பிரச்சினைகள், சினிமாவும் கலாசாரமும். பொரு ளாதாரம், வளப்பாதுகாப்பும் முகாமையும், முகிழ்ந்து வரும் முதலீடுகள் எனப் பல் வேறுபட்ட விடயங்கள் குறித்து எங்களு க்குத் தெளிவுபடத்தினார்கள். " உலகில் இளைஞர்களின் சனத் தொகை இந்தியாவிலேயே அதிகமானதாகவிருக்கிறது. இவ் விளைஞர்களின் சக்தி சரியாகப் பயன்படுத்தப்படுமானால் இந்தியா ஒரு வல்லரசாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை" என்று ஒருவர் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் எனக்கு சின் மையா சுவாமிகளின் பிரபலமான வாசகம் ஒன்று நினைவுக்கு வந ;தது. " இளைஞர்கள் எப்போதும் வேலைக்காகாதவர்கள் அல்லர். ஆனால் அவர்களது வளம் மிகக் குறைந்த அளவிலேயே பயன் படுத்தப்படுகின்றது.

இளைஞர்கள் கவனயீனமானவர்கள் அல்லர். ஆனால் அவர ;கள் கவனிக்கப்படுவது மிகவும் குறைவாக இருக்கின்றது." இந்த வாசகம் எத்துணை உண்மையானது.

இந்தியா எந்தளவுக்குக் கொடு த்து வைத்திருக்கிறது.

எங்களது குழுவை டெல்லி யின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான ஜமா பள்ளிவாசல், செங்கோட்டை. குதுப்மினார், அரவிந்தரின் ஆசிரமம், டெல்லி நூதனசாலைஇ யுடட ஐனெயை சுயனழை தூர்தர்'ன், கலாசார உறவுகளுக்கான இந்தியக் கவுன்ஸில், உலக விவகாரங ;களுக்கான இந்தியக் கவுன்ஸில் என எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றார்கள்.

வரலாறு, கலாசாரம். பாரம்பரியம், இசை, நடனம், சமகாலக் கலைகள், இலக்கியம், கைவினை என் எல்லாவற்றினதும் சங்கமமாக விளங்கும் ஒரு நாட்டைப் பற்றிய தேடலில் நானும் ஒருத்தியாகப் பங்கு கொண்டது உண்மையிலேயே எனக்கு மிகுந்த பெருமையைத் தருகின்றது. பாரத் என்பதன் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டபோது நான் இன்னும் ஆச்சரியப்பட்டேன். காரணம், பா என்றால், ஒளி என்று பொருள் படுகின்றது. ரத் என்றால் வெளிப்படுத்தல். பாரத் என்பது ஒளியை அல்லது ஞானத்தை வெளிப்படுத்துவது என்றாகின்றது. எங்கள் மூதாதையரைப் பற்றிக் கூற இதை விடவும் நல்ல வார்த்தை இருக்கக்கூடுமோ?

அடுத்து கைவினைப் பொருட்கள் செய்யப் பழக்கினார்கள் குட்டிக் குட்டி மண்சட்டிகள் செய்தேன் நான்.

வாழ்வில் முதல் தடவையாக சித்தார் இசை கேட்கும் சந்தர்ப்பம் எனக்கு அங்குதான் கிடைத்தது. தப்லாவும் சித்தரும் இணைந்து வழங்கிய இசை சந்தோ'த்தின் உச்சிக்கே என்னைக் கொண்டு சென்றது. வேதாந்தம் பற்றிய விரிவுரைகள் அபாரம்.

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலைப் பார்க்கும் சந்தர்ப்பமும் எங்களுக்கு வழங்கப்பட்டது. உண்மைக்காதலின் சின்னமாய் அழகின் உறைவிடமாய். என்ன அழகு அது?

கோவாவில் உள்ள கிராமமொன்றுக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம். அங்குள்ளவர்களின் விருந்தோம்பல் பண்பு என்னை வெகுவாக ஈர்த்தது. அங்குள்ளவர்கள் எங்களுக்கு ஆடம்பரமான விருந்தொன்றையே படைத்தார்கள். கோவா வின் அனேக உணவுகள் தோற்றத்திலும் சுவையிலும் இலங்கையருடையதைப் போன்றவை. ஆவை மட் பாத்திரங்கிளிலேயே சமைக்கப்படுகின்றன. கோவாவின் முதலமைச்சர், ஆளுனர் , சபாநாயகர் ஆகியோரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டடியது. இந்தியாவின் உயர் கல்வி முறைமை, முத லீடுகள், மற்றும் இந்திய சமூகத்தின் மற்றும் கோவா மக்களின் பன்முகத் தன்மையை இதன்போது அறிந்து கொள்ளக்கூடியதாக விருந்தது.

வேர்னா கைத்தொழிற் பேட்டை, இந்தியா வில் தகவல் தொழில்நுட்பம் எந்தளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளதென்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகின்றது. இந்தியா தொழில்நுட்பத்துறையில் பாரிய அபிவிருத்தியடைந்துள்ள அதேவேளையில் தனது கலாசார அடையாளத்தையும் அதனால் பேண முடிந்திருக்கிறது.

கோவாவின் பழமையான பகுதிக்கு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். அங்குதான் நாம் ஆசியாவின் மிகப் பெரிய புராதன தேவாலயத்தைக் கண்டோம். போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்ட இத்தேவாலயத்தில் ஆராதனைகள் தமிழில் இடம்பெறுவது மற்றுமொரு ஆச்சரியம். திருநெல்வேலியில் இருந்து வரும் யாத்திரிகர்களுக்காக இப்படியானதொரு ஏற்பாடு. பின்னர் நாங்கள் மங்குவேஷ் ஆலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். ஜhமா மஸ்ஜpதுக்குப் போன போது ஏற்பட்ட அதே பரவசநிலை இங்கும் எனக்கு. அதுதான் இந்தியாவின் தனித்துவம். மக்கள் தங்கள் தங்கள் மதம், கலாசாரம், மொழி , பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்தாலும், தாம் இந்தியர்கள் என்பதில் ஒருமித்து நிற்கிறார்கள். கோவாப் பயணத்தில் மனதை ஈர்த்த மற்றுமொன்று மண்டோவி ஆற்றினூடான படகுப் பயணம்.

மறுநாள் டெல்லியில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். இஸ்கொன் மற்றும் அக்'hட்ரம் கோயில் களுக்குச் சென்றதை மறக்க முடியாது.

தேர்தல் ஆணையாளர் டில்லியின் ஆளுனர் ஆகியோரையும் சந்தித்தோம். ஜனாதிபதி மாளிகையைச் சுற்றிப் பார்த்த அனுபவம் மிகவும் சுவாரஸ்யமானது.

இவ்வாறானதொரு அற்பதமான பயணத்தில்; செல்ல எனக்கு வாய்ப்பளித்த ஆழுஐயு மற்றும் இலங்கையிலுள்ள இந்தியத் தூதுரகம் என்பனவற்றுக்கு நான் என்றும் நன்றிக்குரியவள்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]