புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஆறு வருட சேவைகள்

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஆறு வருட சேவைகள்

''கல்விக் கண் திறப்போம்...

கற்போருக்கு கரம் கொடுப்போம்''

ஞிமார் பத்து அங்கத்தினர்களைக் கொண்டு கொழும்பு செட்டியார் தெருவில் ஆரம்பிக்கப்பட்ட மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் இன்று நாடளாவிய ரீதியில் 944 அங்கத்தினர்களைக் கொண்டு பரந்தளவில் செயற்பட்டு வருகின்றது.

26-08-2006 ஆம் ஆண்டு மலையகத்தைச் சேர்ந்த கொழும்பு செட்டியார் தெருவில் தொழில் புரியும் இளைஞர்களின் எண்ணத்தில் உருவான சிந்தனையைக் கொண்டு இம்மன்றத்தை எவ்வித ஆடம்பரமும் இன்றி அமைதியான வழியில் ஆரம்பித்தார்கள்.

மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஒன்றை ஏற்படுத்த வேண்டுமாயின் அதற்கான சிறந்த பணியாக கல்வியை மலையக சமூகத்தினர் மத்தியில் இழுத்துச் செல்ல வேண்டும் இந்திய தமிழ் நாட்டுக் கிராமங்களி லிருந்து இந்நாட்டுக்கு வெள்ளையர்களால் அழைத்து வரப்பட்ட எமது பரம்பரையின் வரலாறு இரு நூற்றாண்டுகளை தொட்டுப் பார்க்க இன்னும் ஒரு சில ஆண்டுகளே உள்ளன.

இந்நிலையில் ஹிசிரி ஜிழிதினிஹிரிஞிஷி திஷிஷிலிவியிதிஹியிலினி லிபி விரிவீழிலினி 1854- 1954 என்ற ஆங்கில நூலில் எமது மூதாதையர்களை கூலிகள் விலிலிழியிரிஷி என்ற வசனத்தில் கொச்சைப்படுத்தி உள்ளது. அதே போன்று ‘தெனும மினும’ என்ற சிங்கள நூலில் 1839 ஆம் ஆண்டு இந்நாட்டின் பயிர்ச்செய்கை கைத்தொழிலுக்காக இந்தியத் தமிழ் கூலக்காரர்கள் 2432 பேர் முதன் முதலாக கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூலிகள் என்பது அடிமைகளை குறிப்பதாகும். இவ்வாறான நிலை இன்றும் நிலவுகிறது. மலையக மக்களாகிய நாம் இந்நாட்டில் அந்நியர்கள் அல்ல. இந்நாட்டிற்கு அந்நிய செலாவணியை தேடித்தருபவர்கள். இவ்வாறான நிலையிலிருந்து நாம் மாற்றம் பெற கல்வித் துறையில் ஆழமாக கால் பதிக்க வேண்டும். அதற்கான சிந்தனையின் வெளிப்பாடே மலையகக் கல்வி அபிவிருத்தியின் தோற்றமாகும்.

1922 ஆம் ஆண்டு இத்தாலிய சமுதாயம் தனது எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை இழந்தது. மன உறுதிநிலையும் பார்வையையும் இழந்தது. நாம் இயலாத மனிதர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையால் வாடியது. முசோலினி வந்தார். உலக அரங்கில் இத்தாலியை ஏனைய நாடுகளுடன் சரிவர பெற உயர்த்தினார். அதே போன்று கூலிகள் என்ற தாழ்வு மனப்பான்மையிலிருந்து எமது சமுதாயம் வெளிவர வேண்டும். அதற்கான முதல்படி மலையகக் கல்வி சமூகத்தை கல்வித்துறையின் திறமையாக செயல்பட வைப்பதே.

பொருளாதார ரீதியாக என்றுமே தாக்கத்துள்ளாக்கப்படும். மலையக சமுதாயம் கல்வியில் வீழ்ச்சியை எட்டாதவகையில் ஊக்கமளிக்க மலையகத்தைச் சேர்ந்த வர்த்தக சமூகம் ஆலயங்களுக்கு செலவு செய்வதை கைவிட்டு தன் சமூகம் சார்ந்த கல்வித்துறைக்கு கைகொடுக்க முன்வர வேண்டும். அண்மையில் கொழும்பு கதிரேசன் கல்யாண மண்டபத்தில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் இடம்பெற்றது. 2011 ஆம் ஆண்டில் இம் மன்றம் மலையகக் கல்வித் தரத்தை உயர்த்த மன்றம் மேற்கொண்ட பணிகளை தெளிவுபடுத்தியது.

இவ் அங்கத்தினர்கள், செட்டியார் தெருவைச் சேர்ந்த மன்றத்தின் போஷகர்கள் மூலமாகவும் பெறப்பட்ட நிதியின் மூலம் பாராட்டத் தக்கவகையில் கடந்த ஆண்டில் மலையகத்தில் கல்விச் செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். இம்மன்றத்திற்கு அடித்தளமாகவும், பதவிக்கும், புகழுக்கும் ஆசைப்படாத வகையில் சிறப்பு வாய்ந்த செட்டியார் தெரு வர்த்தக பெருமக்கள் போஷகர்களாகக் கிடைத்தமை மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்திற்கு இறைவன் வழங்கிய பெரும் கொடையாகும்.

கடந்த ஆண்டில் எட்டியாந்தோட்டை டெக்கலஸ்ஸ பாரதி தமிழ் வத்தியாலயம், பேராதெனிய கண்டி தமிழ் மகா வித்தியாலயம், கேகாலை தெஹியோவிட்ட சபுமல் தமிழ் வித்தியாலயம், கம்பளை நோனாத் தோட்டம், (பேஸ் போல் மாணவர்கள்) அக்கரப்பத்தனை, ஹோல்புரூக் தமிழ் வித்தியாலயம், எல்பிட்டிய, ஹிகல்கந்த தமிழ் வித்தியாலயம், மத்துகம மலபொட தமிழ் வித்தியாலயம், உடபுசல்லாவ தொலஸ் தமிழ் வித்தியாலயம், ராகலை தமிழ் வித்தியாலயம், கலகா இராமகிருஷ்ணா தமிழ் வித்தியாலயம், மத்துகமை கலைமகள் தமிழ் வித்தியாலயம், கலஹா திருவள்ளுவர் தமிழ் வித்தியாலயம், எட்டியாந்தோட்டை சென்மேரிஸ் தமிழ் வித்தியாலயம், வத்தளை ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம், எட்டியாந்தோட்டை சென்ற் மேரிஸ் கல்லூரி, பண்டாரவளை டயரபா தமிழ் வித்தியாலயம், இரத்தினபுரி கீழ்பிரிவு அமுனுதென்று தமிழ் வித்தியாலயம், மஸ்கெலியா புளுபீல்ட் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு இம்மன்றம் உதவிகளை வழங்கியுள்ளது.

மேலே கூறப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு சுற்றுவேலி அமைக்கப்பட்டதுடன் தரைக்கு சீமெந்து போட்டுக் கொடுக்கப்பட்டது. கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை க. பொ. த. சாதாரண தரம், உயர்தர மாணவர்களு க்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. சுமார் 16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இவ் அரிய வேலைத் திட்டங்களுக்காக இம் மன்றம் செலவு செய்துள்ளது.

சிறுதுளி பெரும்வெள்ளம் என்பது போல சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட (மன்றத்தின்) கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று விரிவடைந்து வருகிறது. எம்மவர் கல்வியில் உயர்ந்திட எம்முடன் இணைவீர் என்ற நோக்கத்துடன் செயல்படும் இம்மன்றத்தின் கொள்கை வாசகம் கல்வி கண்திறப்போம் என்பதாகும்.

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் சேவையுடன் இணைந்து கொள்ள விரும்பும் சமூக சேவையாளர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் மன்றத்தோடு இணைந்து செயல்பட இம் மன்றம் அழைக்கின்றது. இம்மன்றம் தனது ஆறு வருட காலத்தில் மலையகக் கல்வி வளர்ச்சிக்கு பாரிய சேவையை வழங்கியுள்ளது.

இவ் ஆறுவருட காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் மாலைநேர வகுப்பாசிரியர்களுக்கான கொடுப்பனவுகள், தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்க ளுக்கான கொடுப்பனவுகள், கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கற்றல் உபகரணங்களை வழங்கல், கலைத்துறை, விளையாட்டுத்துறையை வளரச்செய்தல், முன்னோடிப் பரீட்சைகளை நடத்துதல், கல்விக் கருத்தரங்குகள், மலையக சமுதாயத்திற்கு விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்துதல் என கூன் விழுத்து போன மலையக சமுதாயத்தின் கல்வித் துறையை மேம்படுத்த தன்னால் இயன்ற சமூக சிந்தனை சேவைகளை வழங்கி வருகின்றது. திதாக மன்றத்தில் இணைய விரும்புவோர் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம், இல 74/1, செட்டியார் தெரு, கொழும்பு-11 என்ற முகவரியோடு தொடர்பு கொள்ளலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.