கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25
SUNDAY MARCH 18, 2012

Print

 
நரிமலை (Fox Hill) எரிமலையாக மாறிய நாள்

நரிமலை (Fox Hill) எரிமலையாக மாறிய நாள்
 

எல்லோரும் சரி சமம் - ஒரு பாடசாலை மாணவர்களைப் போன்று ஒரே வித ‘ரீ‘ஷர்ட் அணிந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் எம். பி. மார்கள்.

தியத்தலாவ மலைசூழ் அழகு கிராமம் வனப்புக்கு வனப்பு சேர்க்கும் இயற்கை எழிலின் மொத்த உருவம் இக்கிராமம்.

யாரோ ஒருவர் சொன்னார்: சுவர்க்கத்தின் ஒரு துண்டு பிய்த்தெடுத்து பூமியில் வீசப்பட்டது. அதுதான் தியத்தலாவ...! என்பேன்.

உள்ளத்தை கொள்ளைகொள்ளும் இந்த சுவர்க்க பூமியில் தான் - சுவர்ண பூமியில் தான் மூன்று நாட்கள் தங்கி இருக்கும் அறிய சந்தர்ப்பம் எமக்கு கிட்டியது. அம்மூன்று நாட்களும் தடபுடலான அரசியலை மறந்து விட்டு 150 பேருடன் தனிமையைக் காண விழைந்தோம். அதுவொரு அபூர்வ அனுபவம்.

சென்ற மார்ச் மாதம் 2, 3, 4ம் திகதிகளில்தான் நாம் அனுபவித்த இந்த இனிமையான மூன்று நாட்கள்.

‘கேக்’ மீது ஐஸ்தூவிய மாதிரி

தியத்தலாவ எமக்கு புதிதல்ல. ஆனால் இந்த மூன்று நாட்கள் அங்கே கழிந்தது புதுமையாகத்தான் இருந்தது. புதிய அனுபவங்களைப் பெற்றோம் - புதிய பாடங்களை கற்றோம்.

செயலமர்வில் ஒரு வினாவுக்கு பதிலளிக்கிறார் ஜனாதிபதி

இங்கு குளிர்காய வந்த 150 பேர் களுடன் நாட்டின் முதல் பிரஜை - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் வந்து கலந்து கொண்டது கேக் மீது ஐஸ் தூவியது போன்று “ஜசிங் கேக்” (Icing the Cake) அனைவருக்கும் குதூகலகத்தை தந்தது.

எமது பாராளுமன்ற அரச தரப்பு உறுப்பினர்கள் அனைவரும்தான் இந்த குதூகலிப்பின் இன்பத்தை அடைந்தனர்.

மூன்று நாட்கள் செயலமர்வு இத்தனை நாட்களாக பாராளுமன்றத்தில் நாம் கற்றுக் கொண்ட பாடங்களில் மீள் பரிசீலனை இங்கே மீள் பரீட்சை (Revising lesson) எடுக்கப்பட்டது.

பாராளுமன்ற நடைமுறை சம்பிர தாயங்கள் போன்றவற்றின் மீது மீண்டும் கவனம் செலுத்தப்பட்டு இத்தனை நாட்களாக விட்ட பிழைகளை நாம் இங்கு சற்று திரும்பி பார்க்க ஏதுவாகியது. அத்தோடு புதுப் பாடங்களையும் கற்றுக் கொண்டோம்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் ஒரு உப குழு கூட்டம்

பல நூல்களையும், தஸ்தாவேஜுகளை யும் பாராளுமன்ற பிரசுரங்களையும் ஒரு பையில் போட்டு செயல் அமர்வு மண்டபத்துக்கு செல்லும் போதும் வெளியே வரும் போதும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சர் கள் அனைவரும் பாடசாலை மாணவர் களைப் போன்றே காட்சியளித்தனர்.

எமது பயணம் - ape gamana Our March என்று இந்த பாராளுமன்ற பாடசாலைக்கு மகுடம் சூட்டப்பட்ட தென்பது மிகவும் பொருத்தமாகவே தென்பட்டது.

மஹிந்த சிந்தனையின் நடைப் பயணம் இந்த அபூர்வ பாடசாலையின் மூன்று சுவர்களில் மூன்று மொழிகளில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த சுவைமிக்க சுவர் ஒலித்ததை இங்கே வடித்துத் தருகிறேன் - சற்று வாசித்துப் பாருங்கள்:

“தேசத்திற்கான பயணத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

நாட்டு மக்களுடனேயே எமது பயணம் அமைதல் வேண்டும்.

செயலமர்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்

அவர்கள் எம்முடன் இருத்தல் வேண்டும். குறித்த இலக்கை நோக்கி வளமிகு நாட்டை நோக்கி திருப்தியுற்ற மக்களை நோக்கி எமது தாய் நாட்டை கொண்டு செல்ல வேண்டும். பயணம் இலகுவான தல்ல. பல தங்குமிடங்களும் ஓய்விடங்களும் உள்ளன எனினும் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

தொடர்ந்து பயணிக்க முடியும்.”

நாடாளுமன்ற உறுப்பினர்களான “மாணவர்கள்” அனைவரும் இதனை வாசித்து தெளிவு பெற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கென்றே விசேடமாக தயாரிக்கப்பட்ட (T.Shirt) டீசேர்ட் அணிந்து Fox என்று இலச்சினை குத்தப்பட்ட Golf தொப்பிகளையும் அணிந்திருந்தனர். எம்.பிக்கள் அனைவரையும் ஒரு விசேட சாராணர் பிரிவினர்களாக தோற்றமளிக்கச் செய்தனர்.

Fox மலையின் விளக்கம்

ஏனிந்த பொக்ஸ் (Fox) இதன் அர்த்தம்தான் என்ன? சற்று விளக்குவோம் - தெரிந்துகொள்வதும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.

வயலில் அறுவடைக்குப் பிறகு கட்டுச் சாதம் வழங்குவது போன்று ‘வதுல’ {மூz என்று மரக்கிளைகளின் கீழ் சாரம் - பெனியன் - தலைப்பாகை அணிந்து எம். பி. மார்களுக்கு பகலுணவு பரிமாறிய பணியாளர்களுடன் அஸ்வர் எம். பி, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் எம். கே. ராகுலன் ஆகியோர்.

ஊவா மாகாண பதுளை மாவட்டத் தில் சேர்ந்தது தியத்தலாவ இதுவொரு இராணுவத்தளம். இராணுவப் பயிற்சி முகாம்கூட இருபதாம் நூற்றாண்டு மலரும் போதே தியத்தலாவையில் இந்த புது மலர் பூத்தது.

அதன் வாசனையை நுகர்வதற்கு முதலில் அனுமதி பெற்றவர்கள் ஆபிரிக்கா தேசத்தைச் சேர்ந்த கருப்பர்கள். அதிலும் யுத்தக் கைதிகள் (Prisoners of Pow) அப்போது ஆங்கிலேய பெயர் (Anglowboir) ஆபிரிக்க கண்டத்தில் சீர்குழைக்க செய்தது. யுத்த முடிவில் கைதிகளாக சிறைபிடிக்கப் பட்ட ஐரோப்பிய - டச்சு போயர் சமூகத்தை (Eroup - Boer)

“போயர்” யுத்தத்தில் மகாத்மா காந்தி

1880 - 81 ஆண்டுகளில் பிரிட்டிஷா ருக்கு எதிராக தென்ஆபிரிக்க மக்கள் ‘போயர்’ (Boer) யுத்தத்தை ஆரம்பித் தனர். Boer என்பது டச்சு மொழியி லும், ஆபிரிக்கான் மொழியிலும் ‘விவசாயி’ என்பதாகும்.

1899/1902 ஆண்டுகளில் மீண்டும் இந்த விவசாயப் (Boer) புரட்சி வெடித்த பொழுது மகாத்மா காந்தியும் இதில் பங்கு கொண்டார். 1400 பேர் களைக் கொண்ட ஒரு படையை உருவாக்கினார். அது யுத்தம் புரியும் படையல்ல யுத்தத்தால் காயமடைந்தவர் களுக்கு சிகிச்சையளிக்கும் படையாகும். INDIAN Volunteer Ambulance Corps ‘இந்திய அம்புலன்ஸ் தொண்டர் படை’ என்பது இதன் பெயர்.

இந்த கால கட்டத்தில்தான் ஏகாதிபத்திய சுரண்டல் காரர்களின் கொடுமைகளை மோகனத்தாஸ் கரம்சந்த காஞ்சி (Moganaas Karamcada Gandhi) முதன் முதலில் உணரத் தலைப்பட்டார். இந்த அட்டூழியக் காரர்களுக்கு எதிராக இளம் அட்வகேட் காந்தி அன்றே தென்னாபிரிக்க நீதிமன்றங்களில் ஆஜராகி இந்தியர்களின் சார்பாக வழக்காடினார். வெற்றியும் கண்டார். நாடு திரும்பினார்; மகாத்மா ஆனார்!

(Comumunity) சேர்ந்த கைதிகள் அன்று தியத்தலாவ இராணுவ டவுன் (D. Army Garisson Town) என்ற இந்த இடத்திற்கு 500 க்கும் மேற்பட்ட கைதிகள் இங்கு கொண்டுவரப்பட்டனர்.

1913 ஆம் ஆண்டில் (H.S.M.Fox) என்ற கப்பல் கிழக்கின் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. பழுதுபார்ப்பதற்கென பல நாட்கள் அங்கு தங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தியத்தலாவ இராணுவ முகாமில் ஒரு கடற்படை நிலையமும் (Naval Station) இருப்பதை கேட்டறிந்த கப்பலின் கெப்டன் தம் மாலுமிகளோடு விஜயம் செய்து கப்பல் பழுதுபார்த்து முடியும் வரை அங்கே தங்கியிருந்தார். தியத்தலாவையின் வனப்புமிக்க காட்சிகள் அவரது மனதையும் கொள்ளை கொண்டது. தாம் தங்கிய நாட்களின் ஞாபகார்த்த ஒரு நினைவு சின்னத்தை அங்கு விட்டுச் செல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார். எனவே தமது கப்பலின் பேரான (H.M.S.Fox) என்ற பெயரை இங்கு அழுத்தமாக விட்டுச் செல்ல தியத்தலாவையின் மிக உயர்ந்த மலையை தேர்ந்தெடுத்து அங்கே கூலாங் கற்களால் ஒரு உருவத்தை செதுக்கி H.M.S) (His Majesty service) மன்னரின் பணியில் என்ற மூன்று எழுத்துக்களை பொறித்துவிட்டுச் சென்றார்.

ஹப்புத்தலை நகரில் இருந்து பண்டாரவளை செல்லும் வழியாக இடதுபுற மலையின் (Fox) யின் வென்னிற உருவத்தை எவரும் பார்த்து பரவசமடைந்த வன்னமே பிரயாணம் செய்வர்.

பாராளுமன்ற வகுப்புக்களின் இறுதி தினத்தில் இராணுவத் தளபதி அளித்த இராப்போசன விருந்து இந்த மலை உச்சியின் திறந்த வெளியில்தான் அளிக்கப்பட்டது. 199 வருடங்கள் சென்றும் கூலாங் கற்களில் செதுக்கப்பட்ட (Fox) உருவம் இன்னும் மங்கிவிடவில்லை. இரவு வேளை என்பதினால் அந்த உருவத்தை சுற்றி இராணுவ வீரர்கள் மின்விளக்குகளால் அலங்கரித்திருந்தனர். மலை உச்சியின் ‘கும்’ இருட்டில் வெசாக் தின அலங்காரத்தைப் போன்று அது பிரகாசமாக பலிச்சிட்டது.

(Fox) மலை உச்சியில் நிலவிய குளிர் மிகக் கடுமையாக இருந்தது. இந்த குளிரின் பீடையிலிருந்து எம்மை காப்பாற்றுவதற்கு மிகவும் உயர்ந்து வளர்ந்த ‘பயின்’ (Pine Trees) மரங்கள் வெட்டி வந்து பெரும் நெருப்பை மூட்டியிருந்தனர் (Bonfire)

நரிமலையில் எரிமலையாக தீச்சுவாலையை வான் நோக்கி வீசியது.

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது

பயிற்சி முடிந்த பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆடிப்பாடி குதூகலித் தனர். வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா, அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன போன்றோர்கள் பாடல் கச்சேரியில் முதலிடங்களை எடுத்துக் கொண்டனர். டுயட் பாடல்களும் இடம்பெற்றன.

தென் இந்தியாவின் சிறந்த நடிகர் கலைக்குரிசில் சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்து தமிழகமெங்கும் புகழ்பெற்ற எமது நாட்டு தலை சிறந்த நடிகை மாலினி பொன்சேகா (இப்போது இவரும் ஒரு எம்.பி) சுதர்சினி ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை (முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளையின் மனைவி) ஆகியோரோடு அமைச்சர் ரெஜினோல் குறே இணைந்து டுயட் பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

கொலைவெறி, கொலைவெறி, கொலைவெறி டீ...

தமிழ் பாடல் ஒன்றை இப்போது பாட வேண்டும் என்று எம்.பிமார் அனைவரும் என்னை கேட்டுக் கொண்டனர். நானும் மேடையில் குதித்தேன்; ஒலிவாங்கியை கையில் எடுத்தேன்; பாடினேன். ‘Why this  கொலவெறி கொலவெறி கொலவெறி கொலவெறி டி........’

இராணுவ வீரர்களின் சங்கீத பிரிவு இப்பாட்டுக்கு அளித்த இசை மிகமிக இனிமையாக அமைந்தது. என்பாட்டுக்குத்தான் முதல் பரிசா?........ தெரியவில்லை.

ஆனால், பாடி முடிந்த இறுதியில் எம்.பிமார்கள் பலர் என்னை மட்டும்தான் தம் தோள்களில் வைத்து தூக்கிச் சென்று ஆரவாரம் புரிந்தனர்... என்பது மற்றும் உண்மைதான்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]