கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25
SUNDAY MARCH 18, 2012

Print

 
சுயநல அரசியலுக்காக இன விரிசலுக்கு வித்திட வேண்டாம்

சுயநல அரசியலுக்காக இன விரிசலுக்கு வித்திட வேண்டாம்

அமிர்தலிங்கத்திற்கு மேயர் சாட்டை

பழுதடைந்த மின் குமிழ்கள் மாற்றுவதிலும் இன விகிதா சாரத்தை பேண வேண்டுமா? எங்கு இருள் சூழ்ந்து காணப்படுகின்றதோ அங்கு மின் குமிழ்கள் பொருத் தப்படும். இதில் எவ்வாறு பாகுபாடு காட்ட முடியும்? என்னைப் பல இடங்களில் புகழ்ந்து பாடிய அமிர்தலிங்கம் தற்போது ஏன் முரண்படுகின்றார் என்பதுதான் புரியாமல் இருக்கின்றது என்று கல்முனை மாநகர மேயர் ஸிராஸ் மீரா சாஹிப் தெரிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, எனது இறுதி மூச்சு இருக் கும் வரை கல்முனை மாநகரின் அபிவிருத் திக்காகவே பாடுபடுவேன். எனது அதி காரத்தின் மூலம் எந்த இனப் பாகுபாடும் பிரதேச வேறுபாடும் அற்ற ரீதியில் அபிவி ருத்திகளை மேற்கொள்ளவே முயற்சிக்கிறேன் என்பதற்கு இப்பிரதேச தமிழ் மக்களே சான்று. இவர்களைப் போன்ற சுயநல அரசியலுக்காக எமது பிரதேச மூவின மக்களையும் பலிக்கடாவாக்கி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

நான் தமிழ் மக்களுடன் கொண்டுள்ள அன்புக்கு ஆதாரம் அவர்களது பிரதேச அபிவிருத்திக்கான எனது முன்மொழிவு களாகும். கல்முனை மாநகரினை அபிவி ருத்தி செய்வதற்கு திட்டமிட்ட அடிப் படையில் நான் செயற்பட்டு வருகின்றேன்.

இதற்கு மாநகர சபை உறுப்பினர்களும் எனக்கு பக்க பலமாக இருக்கின்றது. வங்குரோத்து அரசியல்வாதிகள் என்மீது அபாண்டமான பழியினை சுமத்த முற்படுகின்றனர். இதனை கண்டு நான் பயந்து ஓடுபவன் அல்ல.

அரசியல் தெரியாமல் இந்த கதிரைக்கு நான் வரவில்லை. அரசியலுக்கு வந்து 45 நாட்களில் தேர்தலில் வெற்றியீட்டி 4 மாத காலத்துள் பாரிய முயற்சிகளை செய்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் என்மீது சேற்றை அள்ளி வீசுகின்றனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]