புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 
இலங்கைக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் துருக்கி!

இலங்கைக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் துருக்கி!

ஜனாதிபதிக்கு அஸ்வர் எம்.பி. விளக்கம்

நேட்டோ நாடுகளின் உறுப்பு நாடான துருக்கி என்றும் இலங்கைக்கு ஆதரவு தெரி வித்து வந்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். இது குறித்து நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடினார்.

சென்ற வருடம் துருக்கி நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட ஜனாதிபதியுடன் அஸ்வர் எம்.பி. தூதுக் குழுவில் இடம்பெற்றார்.

தற்போதைய ஜெனீவா பிரச்சினை சம்பந்தமாக துருக்கி நாட்டின் அதனை எடுப்பதற்கு துருக்கி நாட்டின் தூதுவராக நியமனம் பெற்ற திருமதி பாரதி மனோ விஜேரத்ன அவர்களோடும் தொடர்பு கொண்டு நேற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.

துருக்கி ஒரு நேட்டோ நாடாக இருந் தாலும் துருக்கி நாட்டு ஜனாதிபதி உமர்குல் அவர்களுக்கும் எமது ஜனாதி பதிக்கும் நெருக்கிய நட்பு நிலவி வருவ தாகவும் ஜெனீவா மனித உரிமைகள் 0மகா நாட்டில் துருக்கிக்கு வாக்குரிமை பெற்ற நாடாக இலாவிட்டாலும் உரிமை பெற்ற முஸ்லிம் நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகள் மீதும் தமது செல்வாக்கை பிரயோகித்து இலங்கைக்கு ஆதரவு திரட்டுவதற்கு துருக்கிய நாட்டின் உதவிகளைப் பெற இலங்கை ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மேலும் அவர் கூறினார்.

இலங்கையின் முதல் தூதுவராக திருமதி பாரதி மனோவிஜயரத்ன ஏப்ரல் மாதம் நடுப் பகுதியில் துருக்கிக்கு பதவிபெற்று செல்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.