புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 

சினிபஜார்

சினிபஜார்

கேள்வி - பதில்

- வர்ஷினி

கே. பாபு,

வத்தளை.

கேள்: ‘ஜீவபூமி’ என்ற ஒரு படத்தில் சிவாஜி கணேசன் நடித்து அது வெளிவராமல் போனதாமே. இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா வர்ஷினி?

பதில்: சாண்டில்யன் எழுதிய ‘ஜீவபூமி’ நாவலை ஏ. பி. நாகராஜன் சினிமாவாக எடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். ரதன் சந்தர்வத் சனூம்பரர் என்ற ராஜபுத்திர வீரனாக சிவாஜியும், மேவார் நாட்டு இளவரசியாக சரோஜாதேவியும், மொகலாய மன்னர் இரண்டாம் அக்பர் சக்கரவர்த்தியாக நம்பியாரும் நடிக்க, படப்பிடிப்பும் தொடங்கியது.

படத்தின் ஸ்டில்களும் பத்திரிகைகளில் வெளியாகின. கே. வி. மகாதேவன்’ இசையில் இரண்டு பாடல்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சித்தூர்ராணி பத்மிணி’ படம் சரியாக ஓடாததால் கிட்டத்தட்ட அதே மாதிரியான கதைக்களத்தைக் கொண்ட ‘ஜீவபூமி’ படம் எடுத்த வரையில் கைவிடப்பட்டது. மனோரமா அறிமுகமானதும் இந்தப்படத்தில்தான். போதுமா இந்தத் தகவல்.

எஸ் கே. சிவா,

சிலாபம்

கே: நயனும், பிரபுதேவாவும் பிரிந்துவிட்டார்களே! இதுதான் உண்மைக் காதலா?

பதில்: காதலாவது கத்திரிக்காயாவது,சினிமா உலகில் இது எல்லாம் சகஜமப்பா. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா. மீண்டும் சம்புவுடன் இணையப் போகிறாராம் நயன்தாரா. என்ன காறித் துப்ப வேண்டும் போலிருக்கிறதா?

எம். கோபால்,

வத்தளை

கேள்: ‘அப்துல்லா’ என்ற ஒரு படத்தில் நாயகனாக சந்திரபாபு நடித்ததாக ஒரு தகவல் படித்தேன். அப்படி ஒரு படம் வெளிவந்ததா?

பதில்: இல்லை. ஆனால் சந்திரபாபு நடித்த ‘அப்துல்லா’ என்னும் பெயரில் சில நாட்கள் எடுக்கப்பட்ட படமே, பிறகு சிவாஜி, ஜெமினி கணேசன் நடிக்க ‘பாவமன்னிப்பு’ என மீண்டும் முதலில் இருந்து எடுக்கப்பட்டது.

எஸ். எம். பாரூக்,

மாவனல்ல

கேள்வி: வெண்ணிறை ஆடை மூர்த்தியும் ஒரு படத்துக்கு கதை எழுதியிருக்கிறாராமே. அது எந்தப்படம் என்று தெரியுமா வர்ஷினி?

பதில்: கமல் நடித்த அந்தப்படத்தின் பெயர் ‘மாலை சூடவா’

எஸ். சுதாகரன்

நீர்கொழும்பு

கேள்வி: அமலா பாலுக்கும் ஆட்டுப்பாலுக்கு என்ன வித்தியாசம்

பதில்: ஏன், என் வாயைக் கிளறுகிaர்கள்? நான் நல்லா இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?
 

ஆர். பாஸ்கரன்

ஜாஎல

கேள்வி: தனது உதவியாளர்களுக்கு புதிதாக ஏதோ கண்டிஷன் போட்டிருக்கிறாராமே இயக்குநர் மிஷ்கின். அது என்ன என்ற உங்களுக்குத் தெரியுமா?

பதில்: வருஷினிக்குத் தெரியாமல் திரை உலகில் எதுவும் நடக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா? அலுவலகத்திற்கு காலை வந்தவுடன் அவரை கட்டி அணைத்து பாசமுத்தம் தரவேண்டுமாம். இதுதான் மிஷ்கின் போட்டிருக்கும் புதிய கண்டிசன். குருவுக்கு செய்யும் மரியாதையாக இதை நினைத்து செய்கிறார்கள் உதவி இயக்குநர்கள்.
 

எஸ். சர்மிளா,

வவுனியா.

கேள்வி: இந்த வாரம் சொல்லுவதற்கு ஏதாவது ‘பஞ்ச்’ டயலாக் வைத்திருக்கிaர்களா வர்ஷினி?

பதில்: ‘கண்ணா, நீ இயங்கினா மனிதன், இயக்கப்பட்டால் பொம்மை. நீ மனிதனா இருந்தா சரித்திரம். பொம்மையாக இருந்தா தரித்திரம். ஹ.... ஹா... ஹா.... இது எப்படி இருக்கு...?

இந்தப் பகுதிக்கு கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி
 

சினிபஜார் கேள்வி- பதில்

தினகரன் வாரமஞ்சரி

லேக்ஹவுஸ்

கொழும்பு-10.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.