புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 

32 நாட்களாகத் தொடர்ந்த தொழிலாளர்களின் கொழுந்து போராட்டம் வெற்றி

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தலையீட்டையடுத்து

32 நாட்களாகத் தொடர்ந்த தொழிலாளர்களின் கொழுந்து போராட்டம் வெற்றி

மலையகத்தில் பொகவந்தலாவ பிரதேசத்தில் கடந்த 32 நாட்க ளாகத் தொடர்ந்த கொழுந்து போராட்டம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தலையீட்டையடுத்து முடிவுக்குக் கொண்டுவரப் பட்டுள்ளது. இதனால் பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அண்மையில் பொகவந்தலாவ பெருந் தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டத் தொழிலாளர்களின் வேலைப் பளு அதிகரிக்கப்பட்டதன் காரணமாகவே இப்பிரச்சினை தோன்றியுள்ளது.

கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கம்பனி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இப்பிரச்சினைக்கு முழுமையான வெற்றி கிடைத்துள்ளது. பின்னர் இதனை மக்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு பொகவந்தலாவையில் நடைபெற்றது. இதில் பெருந்திரளான தோட்ட மக்கள் கலந்து கொண்டதோடு, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மாலை, பொன்னாடை அணிவித்து அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் இ.தொ.கா. சிரேஷ்ட உபதலைவர் ஹரிச்சந்திரசேகர, மத்திய மாகாண கல்வியமைச்சர் அனுஷா சிவராஜா, மத்திய மாகாண சபை உறுப் பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், நிர்வாகச் செயலாளர் ஜீவானந்தராஜா, பொகந்தலாவ பிளாண்டேசன் கம்பனி பணிப்பாளர், உள்ளிட்ட தோட்ட அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

இது குறித்து இ.தொ.கா. விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பொகவந்தலாவ பிளான்டேசனுக்கு உரித்தான 11 தோட்டங்களில் தோட்ட நிருவாகங்களால் தோட்டத் தொழிலாளர்களின் வேலைப் பளு தன்னிச்சையாக அதிகரிக்கப்பட்ட மையால் 9500 தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து போராட்டத்தில் இறங்கி கடந்த 32 நாட்களாக ஈடுபட்டிருந்தனர்.

2002 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலா ளர்களின் சம்பள உயர்வுப் போராட்டம் அட்டன் மல்லியப்பூ சந்தியை அதிர வைத்தது போன்றே இந்த கொழுந்து போராட்டத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்த பெருமை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானைச் சாரும்.

2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 2012 ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதிகளில் குறித்த தோட்ட நிருவாகங்கள் 2 கிலோ கொழுந்தை மேலதிகமாக பறிக்க வேண்டுமென நிர்ப்பந்தம் விதித்திருந்தது. எவ்வாறாயி னும் தோட்ட நிர்வாகங்கள் இந்த விடயத்தில் கடும் போக்கை கொண்டிருந்ததனால் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து இப்பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

இ.தொ.கா. இவ்விடயத்தில் ஒரு முடிவு எட்டப்பட வேண்டுமென்பதில் உறுதியாக நின்றது. தொழிலாளர்களுக்கு இது வரையிலும் நாளாந்த கொழுந்து பறிப்புக் கேற்ற கொடுப்பனவை உடன் வழங்க இ.தொ.கா. கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுத்தது. இதன்படி இரு தரப்பிற்கும் ஏற்பட்ட சமரசப் பேச்சு வார்த்தையில் மொத்தம் 32 நாட்களுக்கான சம்பளத்தை ஏப்ரல் மாதம் முதல் மூன்று தடவைகள் சம்பளத்துடன் இணைத்து வழங்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஒருநாள் சம்பளத்திற்காக பறிக்கப்படும் கொழுந்தின் அளவை பழைய நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பது இ.தொ.கா.வின் நிலைப்பாடு.

இது கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டதாகும். பெப்ரவரி மாதம் 14ம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 15ம் திகதி வரையில் முழுச்சம்பளமும் வழங்கப்படும். எது எவ்வாறாயினும் ஒரு நாளைக்கு பறிக்கும் கொழுந்தின் நிறையை குறித்த தோட்டத்தின் மாதர் சங்க தலைவி, தோட்ட கமிட்டித் தலைவர், தோட்ட அதிகாரி ஆகியோர் தீர்மானிப்பார்கள் இது கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை இ.தொ.கா. நினைவு படுத்தியது. மலையக வரலாற்றில் ஒரு கொழுந்து போராட்டம் வெற்றி பெற்றது. இதுவே முதல் தடவை என்பது முக்கிய சான்றாகும்.

இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், உங்களை இதற்கு முன்னர் நான் கொட்ட கலையில் சந்தித்த போது நம்பிக்கையோடு இருங்கள் சொல்வதை கேளுங்கள் நிச்சயமாக பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவேன் என்று கூறினேன். அதன்படி இன்று உங்களின் பிரச்சினை தீர்க்கப் பட்டுள்ளது. இதற்கிடையில் பலர் பலவித மான கருத்துக்களை தெரிவித்தனர். அதனால் அவர்கள் சாதித்தது எதுவும் இல்லை. இலங்கை தொழிலாளர் காங்கி ரஸால் மாத்திரமே உங்கள் பிரச்சினையை தீர்க்க முடியும். இ.தொ.காவை நீங்கள் அனைவரும் நம்பினால் அது உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். இந்த கொழுந்து போராட்டத்தின் முடிவாக 14.02.2012 தொடக்கம் 15.03.2012 வரையிலான 32 வேலை நாட்களுக்கான முழு சம்பளமும் வழங்கப்படும் என்றார்.

தொடர்ந்து இ.தொ.கா. தலைவரும், பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் அவர்கள் உரையாற்றுகையில், “சொல்வதை தான் செய்வோம். செய்வதை தான் சொல்வோம்” என்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொள்கைக்கேற்ப உங்களது பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஸ்தாபனம் 78 ஆண்டுகால வர லாற்றை கொண்டது. இதில் எத்தனையோ போராட்டங்களை வென்றுள்ளது. அத்துடன் மலையக தோட்டத் தொழிலாளார்களின் பிரச்சினைகளை தீர்த்துள்ளது. இதற்கிடையில் நேற்று வந்தவர்கள் பலர் பல கருத்துக்களை கூறுகின்றனர். அவர்கள் இ.தொ.கா.வை விட சாதித்ததுதான் என்ன? நம்பிக்கை யுடன் எங்களோடு இருப்பவர்களுக்கு நாங்கள் என்றும் பாதுகாப்பாக இருப் போம் என்றார் அமைச்சர் தொண்டமான்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.