கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25
SUNDAY MARCH 18, 2012

Print

 
தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயம் பற்றிய கட்டுரையில் தவறான தகவல்கள்

பாடசாலை முன்னேற்றத்தை முடக்கும் முகவரி தெரியாத ஒருவரின் சதி :

தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயம் பற்றிய கட்டுரையில் தவறான தகவல்கள்

11.03.12 ஞாயிற்றுக்கிழமை வெளியான தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையில் வெளிவந்த செய்தி எந்தவித ஆதாரமற்ற பாடசாலையின் பெயரை களங்கப்படுத்தும் செய்தியாகவுள்ளது.

அதிபரைப் பற்றிய பிழையான தகவல்

முன்னாள் அதிபர் இடமாற்றம் பெற்று சென்றதால் அதிபர் தரம் பெற்ற அதிபர் 01.08.2011 இல் இருந்து இப்பாடசாலையை பொறுப்பேற்று தனது கடமையை செவ்வனே செய்து வருகிறார்.

கடந்த காலங்களை விட தற்போது இப்பாடசாலையில் தரம் 5 புலமைப் பரீட்சை க.பொ.த. சா/த, உ/த என்பவற் றில் பெறுபேறுகள் அதிகரித்துள்ளன.

மாணவர்களின் ஒழுக்கத்தில் அதிபர், ஆசிரியர்கள் கவனம் செலுத்தி பாடசாலையை ஒழுக்க விதிகளுக்கமைய மாணவர்கள் வழிநடத்தப்படுகின்றார்கள்.

நீங்கள் குறிப்பிட்ட தகவலின்படி ஜனவரி மாதம் உயர்தர மாணவர்களுக்கு பாடங்கள் கிரமமாக நடைபெறவில்லை. காரணம், ஆசிரியர் இடமாற்றம் நடைபெற்று அதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

தற்போது ஆசிரியர் இருவர் நியமிக்கப்பட்டிருப்பதால் அது சீர் செய்யப்பட்டுள்ளது.

தற்போது பரீட்சை பெறுபேறுகளை உயர்த்துவதற்காக தரம் 5, 11ம் வகுப்புகளுக்கான மேலதிக வகுப்புகள் நடைபெறுகின்றன.

சுற்றாடல் சம்பந்தமாக 14.02.2012 ஆம் திகதி அன்று மேலதிகாரிகளினால் பார்வையிடப்பட்டு மேலதிகமான விடயங்களையும் கூறினார்கள். அவர்களின் ஊடாக நீங்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

பாடசாலையின் உயர்விற்கான மேலதிக வகுப்புகளுடன் மேலும் பல விடயங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெளதிக வளங்கள்

கணனிப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள் ளது. மாணவர்களுக்கான நான்கு மலசல கூடம் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக இரண்டு தண்ணீர் தாங்கிகள் பொருத்தப் பட்டுள்ளன. பழைய விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலையில் மாணவர் தொகைக்கேற்ப தளபாடங்கள், இடவசதி இன்மையோடு ஆய்வுகூட வசதிகள் போன்றன குறைவாகவுள்ளன.

கடந்த ஏழு வருடங்களாக இப்பாடசாலையில் சிற்றுண்டிச்சாலை நடத்தப்படவில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்Zர்கள்.

எனவே, இவ்வாறான பாரிய குறைபாடு களுடனும் நல்ல பெயரையும் சிறந்த பெறுபேறுகளையும் பெற்று வருகின்ற இவ்வேளையில் உங்களின் ஆதாரமற்ற செய்தி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் கள், நலன்விரும்பிகள், மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது. அத்துடன் இப்பாடசாலையின் வளர்ச்சியில் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதை அறியத்தருவதோடு இதற்கான சரியான தீர்வினை பொறுப்பான பத்திரிகை என்ற வகையில் உங்களின் செய்தியின் ஊடாக எதிர்பார்க்கின்றோம்.

அதிபர் ஆசிரியர்கள்

நு/பாரதி த.ம.வி. தலவாக்கலை

குறிப்பு:

இந்தப் பாடசாலை விவகாரமாக வெளியான கட்டுரையில் குறிப்பிடப் பட்ட விடயங்களின் உண்மைத் தன்மை பற்றிய ஆதாரங்களை நாம் திரட்டுகிறோம். இது பற்றி சம்பந்தப்பட்ட மேலதிகாரி களின் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன் தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டிருப்போம் என்பதைத் தெரிவித் துக் கொள்கிறோம். இப்பாடசாலை பற்றித் தவறான தகவல்கள் வெளியாகியிருக்குமாயின், உண்மையைக் கண்டறியும் வரை (தற்போதைக்கு) வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தப் பாடசாலை தொடர்பான உண்மையான தகவல்கள் தெரிந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மற்றும் மாணவர்கள் கீழுள்ள முகவரிக்கு தம்மை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் எமக்கு அனுப்பி வைக்கலாம்.

பிரதம ஆசிரியர்,
தினகரன் வாரமஞ்சரி
லேக் ஹவுஸ், கொழும்பு - 10,
தொலைநகல் : 0112429295,
மின்னஞ்சல் :
[email protected]


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]