புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 
பிரதேச அபிவிருத்தியில் தமிழ்ப்பகுதி புறக்கணிப்பு

பிரதேச அபிவிருத்தியில் தமிழ்ப்பகுதி புறக்கணிப்பு

கல்முனை மேயர் மீது குற்றச்சாட்டு

பிரதேச அபிவிருத்தி நட வடிக்கைகளின் போது கல் முனை மாநகர மேயர் சிராஸ் மீரா சாஹிப் கல்முனை தமி ழ்ப் பிரதேசங்களை புறக்கணித்து வருவதாக மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் ஏ. அமிர்தலிங்கம் குற்றம் சாட் டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்முனை மாநகர சபையில் கட ந்த காலங்களில் பதவி வகித்த மேயர் கள் தமிழ்ப் பிரதேசத்தின் அபிவி ருத்தி நடவடிக்கைளில் நியாய மாக நடந்துகொண்டனர்.

குறிப்பாக முன்னாள் மேயர் மசூர் மெளலானா போன்றவர்கள் மிகவும் பெருந்தன்மையோடு செயற்பட்டனர். ஆனால் தற்போதைய மேயர் சிராஸ் மீராசாஹிப் கல்முனை தமிழ் பிர தேசங்களை அபிவிருத்தி செயற்பாடு களின் போது புறக்கணித்து வருகின் றார். உதாரணமாக, கல்முனை பிரதேசத்தில் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான தெரு மின் விளக்கு கள் பொருத்தப்பட்டுள்ளன.

எனினும் கல்முனைப் பிரதேசத் தில் மூன்றிலொரு பங்கினராக வசிக்கும் 2 இலட்சம் ரூபா பெறு மதியான தெரு மின் விளக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 25 ஆயிரம் ரூபா பெறுமதி யான மின் விளக்குகள் கூட தமிழ் பிரதேசங்களுக்கு வழங்கப்பட வில்லை.

முஸ்லிம் பகுதிகளில் மேற்கொள் ளப் படும் அபிவிருத்திகளைப் போன்று தமிழ் பிரதேசங்களுக்குரிய அபிவிருத்திப் பங்கினை வழங்க வேண்டும் என்றே கூறுகின்றேன்.

மேயர் சிராஸ் இவ்வாறு தொடர்ந்து தமிழ்ப் பிரதேசங்களை புறக்கணித்து வருவாரேயானால் மாநகர சபையில் அவருக்கு நாம் எவ்விதமான ஒத்து ழைப்புகளையும் வழங்க மாட்டோம். இவ்வாறு அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.