கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25
SUNDAY MARCH 18, 2012

Print

 
இனப்பிரச்சினை தீர்வுக்கு ஐ.நா.விடம் உறுதிப்பாட்டைக் கோரும் TNA

இனப்பிரச்சினை தீர்வுக்கு ஐ.நா.விடம் உறுதிப்பாட்டைக் கோரும் TNA

அரசை வலியுறுத்துமாறு சம்பந்தன் வேண்டுதல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேசிய இனப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வலியுறுத்த வேண்டுமென சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்ட காலமாக தமிழ் மக்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு காத் திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படுவதனை மனித உரிமைப் பேரவை உறுதி செய்ய வேண்டுமென கோரியுள்ளார். யுத்தத்தின் பின்னர் நாட் டில் சமாதானத்தை நிலைநாட்ட கிட்டி யுள்ள சந்தர்ப்பம் நழுவிக் கொண்டிருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் மீளவும் ஏற்படுவதனை தடுப்பதற்கு மனித உரிமைப் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]