புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 
அரசிற்கு அபகீர்த்தி ஏற்படுத்த முனைந்த சதிமுயற்சி அம்பலம்

சனல் - 4 வீடியோ போலி என்பது உறுதி ;

அரசிற்கு அபகீர்த்தி ஏற்படுத்த முனைந்த சதிமுயற்சி அம்பலம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய

சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத் தினால், இலங்கையின் கொலைக்களங்கள் பாகம் 2 ‘தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்’ என்ற பெயருடன் வெளியிடப் பட்ட காணொளி போலியானது என இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தக் காணொளியானது இலங்கை அரசிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில், திட்டமிட்ட முறையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.

இதனுடைய போலித் தன்மையினை நிரூபிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமை ச்சு சில ஆவணப் படங்கள் மற்றும் புகைப் படங்களையும் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர் மானங்கள் வலுப்பெற வேண்டும் என்ற திட்டத்திலேயே இது வெளியிடப்பட் டுள்ளது. மூன்று தசாப்த காலமாக தமிbழ விடுதலைப் புலிகள் பாரியளவில் உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ள தாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் மீறப்பட்டிந்தால் அது தொடர்பில் நல் லிணக்க ஆணைக் குழுவிடம் முறைப்பாடு செய்திருக்க முடியும். ஆனால் சனல் 4 ஊடகமானது இலங்கைக்கு எதிராக செயற்படும் நோக்கில் போலியான தக வல்களை ஆதாரமின்றி பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.