கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25
SUNDAY MARCH 18, 2012

Print

 
'பஞ்சபுராண தோத்திரத் திரட்டு' வெளியீட்டு விழா

'பஞ்சபுராண தோத்திரத் திரட்டு' வெளியீட்டு விழா

லேக்ஹவுஸ் இந்து மன்றம் சைவப் புலவர், கலாபூஷணம் சு.செல்லத்துரையினால் தொகுக்கப்பட்ட “பஞ்சபுராண தோத்திரத் திரட்டு” நூலை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியிட்டுவைத்தது.

இவ்விழாவில் லேக்ஹவுஸ் ஆசிரியப் பீடப்பணிப்பாளர் சீலரட்ண செனரத் மற்றும் இந்து கலாசார திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்திநாவுக்கரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். மேலும் நூல் பற்றிய கருத்துரையை ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் கலாநிதி குமாரசுவாமி சோமசுந்தரம் வழங்கினார். இத்துடன் திருமதி வாசுகி முகுந்தனின் மாணவிகளால் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருமதி. வாசுகி சிவகுமார் நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பாக சுந்தரத்தமிழில் தொகுத்து வழங்கினார்.

பஞ்சபுராணம் என்பது “தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம்” ஆகியவற்றை உள்ளடக்கியது. தேவாரம் ஆனது திருநாவுக்கரசு நாயனார், சுந்தர மூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர் ஆகியோரால் அருளப்பட்டது. “திருவாசகம்” மாணிக்கவாசக சுவாமிகளால் அருளப்பட்டது. “திருவிசைப்பா, திருப்பல்லாண்டு” ஆகியவை சேந்தனாரால் அருளப்பட்டது. “திருப்புராணம்” சேக்கிழாரால் அருளப்பட்டது.

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]