புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 

மைக்ரோசொப்டின் பாடசாலை மட்டப் போட்டி வெற்றியாளர்களுக்கு கெளரவம்

மைக்ரோசொப்டின் பாடசாலை மட்டப் போட்டி வெற்றியாளர்களுக்கு கெளரவம்

3000 பட்டதாரி ஆசிரியர்களை அடுத்த மாதமளவில் நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்படும். அதில் ஆங்கிலப் பாடம் கற்பிப்பதற்கு 1000 பேர் தகவல் தொழில்நுட்பத்துக்கு 1000. பேர் கணிதத்துக்கு 1000 பேர் என ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக் கிடையில் நடைபெற்ற தகவல் தொழில் நுட்ப கணனி Innovative Teachers & Students Microsoft போட்டிகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கல்வியமைச்சினால் 2011ல் நடத்தப்பட்டது. 90 ஆயிரம் மாணவர்களும் 1000 பாடசாலைகளும் இப்போட்டிகளில் கலந்து கொண்டன.

இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, கல்வியமைச்சு மற்றும் மைக்ரோசொப்ட் சிறிலங்கா ஆகியன அனுசரணை வழங்கின. இதில் வெற்றியீட்டிய பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர் களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் பணப் பரிசில்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு கொழும்பு கலதாரி ஹோட்டலில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்றது.

அகில இலங்கை ரீதியில் முதல் பரிசையும் 5 மில்லியன் ரூபாவையும் கொழும்பு ரோயல் கல்லூரி பெற்றுக்கொண்டது.

அகில இலங்கை ரீதியில் 6வது இடத்தையும் சப்ரகமுவ மாகாணத்தில் முதலாம் இடத்தையும் ஹெம்மாதகம அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம் பெற்றுக்கொண்டது. இக்கல்லூரிக்கு 2.35 மில்லியன் வழங்கப்பட்டது.

அத்துடன் வடக்கில் புதூர் புட்டகல்லடி சிறிவிஷ்ணு வித்தியாலயம், உரும்பிராய் இந்துக் கல்லூரி, யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை, வவுனியா கிடச்சோரி கருவேம்பன் குலம் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய தமிழ் பாடசாலைகள் மட்டுமே வெற்றி பெற்று பரிசுகளை பெற்றுக்கொண்டன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.