கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25
SUNDAY MARCH 18, 2012

Print

 
‘கூட்டாண்மை எரிபொருள் நிரப்பு அட்டை’ அறிமுகப்படுத்துகிறது லங்கா ஐ.ஓ.சி

‘கூட்டாண்மை எரிபொருள் நிரப்பு அட்டை’ அறிமுகப்படுத்துகிறது லங்கா ஐ.ஓ.சி

இலங்கையில் முதன் முதலாக கூட்டாண்மை எரிபொருள் நிரப்பு அட்டை (Corporate Fuel Card) மற்றும் ‘எக்ஸ்ட்ரா பிரீமியம் யூரோ 3’ (Xtra Premium Euro 3) எரிபொருள் ஆகியவற்றை கொழும்பு 7 இல் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி.யின் சிறப்புரிமை பெற்ற ‘பீலிக்ஸ் பெரேரா’ சில்லறை விற்பனை நிலையத்தில் வைத்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா அறிமுகம் செய்து வைத்தார்.

டயலொக் நிறுவனத்துடனான கூட்டு முயற்சி ஒன்றின் அடிப்படையில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமானது இந்த புதிய ‘கூட்டாண்மை எரிபொருள் நிரப்பு அட்டை’யினை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடெங்கிலும் காணப்படும் தெரிவு செய்யப்பட்ட லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து, எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு கூட்டாண்மை நிறுவனங்களுக்கு இந்த அட்டை விநியோகிக்கப்படும்.

டயலொக் நிறுவனத்தினால் வழங்கப்படும் இணையத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீர்வின் ஊடாக, கூட்டான்மை நிறுவனங்கள் தமது வசதிக்கு ஏற்றாற் போல் ஒவ்வொரு தனிப்பட்ட அட்டைகளுக்கும் வேறுபட்ட கடன் எல்லைகளை நிர்ணயித்துக் கெள்ளலாம். தனிப்பட்ட ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் செலவுக்கான மீள் கொடுப்பனவு செயற்பாடுகளை மேற்கொள்ளும் விடயத்தில் இது நிறுவனங்களுக்கு உதவியாக அமையும் அதேவேளை, எரிபொருள் பாவனையின் அளவினை கண்காணிக்க செய்வதற்கு இது உதவுவதுடன், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு நேரடியாகவே கொடுப்பனவு கொடுத்துத் தீர்க்கும் வசதியையும் வழங்குகின்றது.

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்துடன் உபாய ரீதியிலான பங்காளித்துவம் ஒன்றில் இணைந்து கொண்டுள்ள டயலொக் நிறுவனமானது, அனைத்து கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் லங்கா ஐ.ஓ.சி.யின் விநியோகஸ்தர்களுக்கு இணையத்தை அடிப்படையாகக் கொண்டியங்கும் இடைத்தொடர்பாடல் வசதியை வழங்குவதற்கு மேலதிகமாக சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களிற்கு அவசியமான வன்பொருள் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]