புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 

உள்ளுர்ப் பாடசாலைகளுக்கு வலுவ+ட்டும் ஈஸி

உள்ளுர்ப் பாடசாலைகளுக்கு வலுவ+ட்டும் ஈஸி

ஈஸி ஸ்லிம்டொப் மற்றும், உலகின் மிகச் சிறிய கணனியான ஈஸி ஸ்லிம் டொப் ஸ்மார்ட் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம், கணனிப் புரட்சி மேற்கொண்ட இலங்கையின் ஒரேயொரு கணனி உற்பத்தி நிறுவனமான ஈஸி, சில தினங்களுக்கு முன்னர் கண்டி திரித்துவக் கல்லூரிக்கு அதன் இரண்டாவது கணனிக் கூடத்துக்கான கணனிகளை நிறுவியதை அடுத்து தனது புதிய கணனி நிறுவல் பணிகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தது.

தமது ஈஸி கணனிகளைப் பயன்படுத்தும் திரித்துவக் கல்லூரி மாணவர்கள்

திரித்துவக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவுக்கு தமது பிரதான மீள் விற்பனையாளர்கள் பிறவுன்ஸ் பி.எல்.சி.யினூடாக 50 கணனிகளை நிறுவியதன் மூலம் 2010 ஆம் ஆண்டில் ஈஸி, முதலாவது கணனித் தொகுதியை வழங்கியிருந்தது. இக்கல்லூரியின் மேற் பிரிவுக்கு கணனிக் கூடமொன்றை நிறுவுவதற்காக நடத்தப்பட்ட ஏலத்தை பல தொடரான புத்தாய்வுத் திட்டங்கள் மூலம் ஈஸி வென்றெடுத்தது.

அடுத்த தலைமுறைக்கான கணனி ஆய்வு கூடமாகக் கருதப்படும் இதன் தேவைகளை அறிந்து வடிவமைப்பதில் உதவியதோடு, அனுசரணையும் வழங்கியவர்கள் 1987 ஆம் ஆண்டின் பழைய மாணவர்கள் ஆவர். ஈஸி கணனிகளின் அங்கீகாரமளி க்கப்பட்ட மீள் விற்பனையாளர்களான டெக்ரோன் கோர்பரேசன், இத்திட்டத்துக்கு மைக்ரோ சொப்ட் விண்டோஸின் அனுமதிப்பத்திரம் கொண்ட 40 ஒப்டிமாக்ஸ் கணனிகள், ஆசிரியர்களுக்கான வகுப்பறை முகாமைத்துவ மென்பொருள் கொண்ட முழு வலைப்பின்னல் கட்டமைப்பு என்பனவற்றை வழங்குவதோடு, டெக்ரோனின் அனுபவம் மிக்க, திறமை வாய்ந்த பொறியியலாளர்கள், இத்திட்டம் வெற்றிகரமாக அமைய தேவையான ஆதரவினை வழங்கினர்.

புரட்சிகரமான மிகச் சிறிய கட்டுப்படியான விலையிலான ஈஸி ஸ்லிம் டொப் கணனிகள் மூலம் இலங்கை சந்தையில் ஈஸி அறிமுகமானது, சாதாரண கணனிகளாலும் பார்க்க 60 வீதமான மின் சக்தியைச் சேமிக்கின்றது. இது மிகத் திறன் வாய்ந்த கணனிகள் தேவைப்படுவோருக்கு, ஒப்டிமாக்ஸ் கணனியை அறிமுகப்படுத்தியது. உச்ச செயற்பாட்டுப் பயனைப் பெற விரும்புவோருக்காக ஈஸி அல்டிமேட்டையும் அறிமுகப்படுத்தியது.

திரித்துவக் கல்லூரியை தன் அதிநவீன கணனிகளால் வலுவூட்டியது போல, நாட்டிலுள்ள பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் வலுவூட்ட ஈஸி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நாடளாவிய ரீதியில் மாணவர்கள் தகவல் தொழில்நுட்ப அறிவினைப் பெறக்கூடியதாகவிருப்பர்.

தமது ஈஸி கணனிகளைப் பயன்படுத்தும் திரித்துவக் கல்லூரி மாணவர்கள்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.