புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 

டிமோ அனுசரணையில் பல கண்காட்சிகள்

டிமோ அனுசரணையில் பல கண்காட்சிகள்

அநுராதபுரம் ஒயாமடுவவில் வெற்றிகரமாக இடம்பெற்ற தேசத்தின் மகுடம் கண்காட்சிக்கு மோட்டார் வாகன அனுசரணையாளராக டிமோ பங்களிப்புச் செய்திருந்தது. சுமார் 4,000 சதுர அடிக்கு மேற்பட்ட விஸ்தீரணத்தில் அமைந்த திடலில் தம்முடைய உலகின் மிகச் சிறந்த உற்பத்திகளை டிமோ அங்கு காட்சிப்படுத்தியது. அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பிரதான வாயிலுக்கு அண்மையிலும் விமான சேவைகள் அமைச்சின் காட்சிக்கூடத்திற்கு அருகிலும் விசேட அதிரடிப்படையின் காட்சிக் கூடத்திற்கு எதிராகவும் டிமோ காட்சியகம் அமைந் திருந்தது.

டிமோ அண்மையில் அறிமுகப்படுத்திய ‘டிமோ பட்டி’ கிராமப்புறத்திலிருந்து வருகை தந்த பார்வையாளர்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது. புதிய ரக டாட்டா நனோ கார் வகைகளும் காட்சிப்படுத்த ப்பட்டன.

இவ்வருட ஆரம்பத்தில் ஜனவரி 20 முதல் 22 வரை யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற ‘யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை’ கண்காட்சிக்கும் டிமோ பிரதான அனுசரணை வழங்கியிருந்தது. மூன்றாவது தடவையாக இடம்பெற்ற இக்கண்காட்சி யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற மிகப் பெரிய நிகழ்வாகும். மெர்சிடிஸ்-பென்ஸ் பயணிகள் வாகனங்கள் உள்ளடகங்கலாகத் தான் சந்தைப்படுத்தும் உலகப் பிரசித்தி பெற்ற வியாபார நாமங்களை டிமோ இங்கு காட்சிக்கு வைத்தது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காட்சியை ஆரம்பித்து வைக்க, யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் FCCISL தலைவர் குமார மல்லிமாராச்சி மற்றும் இந்தியாவின் கவுன்சில் நாயகம் வி. மகாலிங்கம் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அத்துடன் FCCISL மன்னார் மாவட்ட வர்த்தக சம்மேளனம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் ஒருங்கிணைப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 12, 13 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற ‘முருங்கன் மன்னார் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பில் தொழில்நுட்பம் 2011’ கண்காட்சியும் டிமோவின் பிரதான அனுசரணையில் இடம்பெற்றது.

மேலும் 2011 ஒக்டோபர் 7 முதல் 9 வரை மட்டக்களப்பு பெவர் மைதானத்தில் இடம்பெற்ற ‘மட்டக்களப்பு சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கும்’ டிமோ பிரதான அனுசரணையாளராக பங்களிப்புச் செய்திருந்தது.


 

CDB நிறுவனம் திருகோணமலையில்

சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி CDB நிறுவனம் அண்மையில் இல. 266, சென்ட்ரல் வீதி, திருகோணமலை என்ற முகவரியில் தனது சேவை நிலையத்தினை திறந்து வைத்ததன் மூலம் திருகோணமலை மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்களுக்கு முழுமையான நிதியியல் சேவைகளை அங்குரார்ப்பணம் செய்துள்ளது.

CDB யின் புதிய திருகோணமலை சேவை நிலையம் அனைத்து முன்னேற்றகரமான வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், உயர் தரமான தொழில்நுட்பத்தின் ஊடாக வாடிக்கையாளர்கள் விரைவாக சேவைகளைப் பெறக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. அதேநேரம் பல்வகைப்பட்ட நிதியியல் தீர்வுகளை உடனுக்குடன் வாடிக்கையாளர்கள் அனுபவிப்பதற்கும் வழிவகுக்கின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.