புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 

தரமான அவுஸ்திரேலிய கல்விக்கான நுழைவாயில்: யுஊடீவு கண்டிக்கிளை வழங்குகிறது

தரமான அவுஸ்திரேலிய கல்விக்கான நுழைவாயில்: ACBT கண்டிக்கிளை வழங்குகிறது

இலங்கையில் தரமான உயர்ந்த அவுஸ்திரேலிய கல்வியை வழங்க ACBT உறுதி பூண்டுள்ளது. இதன்படி அதன் பட்டதாரிகளின் உயர்வான பெறுபேற்றினால் இது முனைவுபடுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அனுமதிகளின் அதிகரிக்கின்ற எண்ணிக்கைகளுடன் முதல் தரத்துடன் பட்டதாரிகளின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

பொருத்தமான திட்டங்களைத் தெரிவு செய்தல், பயனுறுதி வாய்ந்த கற்பித்தல், முனைப்பான வளங்களின் ஏற்பாடு, ஆதரவளிப்பிலான நூற்கல்விச் சூழலொன்றினை உருவாக்குதல் மற்றும் பெறுமதி முறைமை மற்றும் செயற்றிறனான முகாமைத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கும் சர்வதேச நியமங்களுக்கு இணங்குகின்ற உயர் கல்வித் திட்டங்களின் தரத்திலும், நியமங்களிலும் முதன்மை நிலையை அடைவதற்காக அதன் இணங்கிப் போகாத அர்ப்பணிப்பே ACBT இன் வெற்றியின் ஆதாரங்களாகும்.

கண்டியில் வாழும் மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் குறிக்கோளுடன், மாணவர்கள் தற்போது கண்டியில் தமது கற்கைகளை ஆரம்பிக்க முடியும். பின்னர் ACBT இன் கொழும்பு வளாகத்தில் பட்டத்தின் எஞ்சிய பகுதிகளை முடிக்கலாம் அல்லது வெளிநாடு ஒன்றில் தமது கற்கைகளை முடிக்கலாம். வியாபார மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளினுள் கற்கையில் பெருமளவு சாத்தியமான பிரிவுகளை ACBT வழங்குகின்றது. ACBT இல் தமது பட்டத்தின் பகுதியை மாணவர்கள் முடித்துவிட்டு அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகங்களுக்கு இடமாறலாம்.

பொதுநலவாய பல்கலைக்கழகங்கள் ஆண்டு நூலிலும், சர்வதேச பல்கலைக்கழகங்கள் கையேட்டிலும் பட்டியல்படுத்தப்பட்டுள்ள எடித் கொவன் பல்கலைக்கழகத்துடன்(ECU) இணைந்து ACBT பணியாற்றுகின்றது. ACBT இல் பட்டங்களின் உள்ளடக்கமும், கட்டமைப்பும் ECU உடன் இணைந்து வகுத்தமைக்கப்படுகின்றது. இதன்படி முழுமையானதும், உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதுமான ECU பட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

பல்கலைக்கழக அடிப்படை மட்டத்தை (UFL) மேற்கொள்வதன் மூலம் தமது சாதாரண தர பரீட்சைகளை முடித்த பின்னர் உடனடியாகவே ACBT பட்டப்படிப்பை மாணவர்கள் ஆரம்பிக்க முடியும். உயர் தர மட்டத்திற்கு சமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக அடிப்படை மட்டத்தை உயர் தரத்தினால் எடுக்கப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 8 - 12 மாதங்களில் முடிக்க லாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.