புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 

என்று திருந்துவார்?

என்று திருந்துவார்?

என்று இவர் திருந்துவார்
என்று இவர் திருந்துவார்

தொன்று தொட்டு வந்த மூட
தொடர் பழக்கங்கள் மாற்றார்
குன்று தோறும் குடிவகைகள்
கொண்டு சென்று குடிப்பார்

என்று இவர் திருந்துவார்
என்று இவர் திருந்துவார்

கோயிலுக்கு பாற்குடமெடுப்பார்
கும்பிடும் ஏழைக்கு கடுகடுப்பார்
தேயிலைக்கு உயிரளிப்பார்
தேய்ந்திடும் உடலுக்கு எதையளிப்பார்?

என்று இவர் திருந்துவார்
என்று இவர் திருந்துவார்

காட்டு மாரியம்மன் என்பார்
கோழி ஆடு கொன்றொழிப்பார்
ஓட்டுக்காலம் குதுகலிப்பார்
ஒட்டுக்குப் பின் ஓய்வெடுப்பார்

என்று இவர் திருந்துவார்
என்று இவர் திருந்துவார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.