புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்ற பொதுக்கூட்டம்

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்ற பொதுக்கூட்டம்

மலையகப் பாடசாலை மாணவர் களின் கல்வித்தரத்தை மேம் படுத்தவும் பல்கலைக்கழகத் தில் கல்வி பயிலும் மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவி வரும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம், கொழும்பு செட்டியார் தெருவில் இயங்கி வருகிறது. இம்மன்றம் ‘கல்விக் கண் திறப்போம்.... கற்போருக்கு கரம் கொடுப்போம்’ என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் பாடசாலைகளுக்கு உதவி வழங்கும் வைபவமும் இன்று 11ம் திகதி காலை 10.30 மணி முதல் கொழும்பு- 13 ஸ்ரீ கதிரேசன் கல்யாண மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பண்டாரவளை, லியங்காவெல ப/க்ரேக் ஸ்ரீ காயத்ரி வித்தியாலயம், நாவலப்பிட்டி கே/தெஹி/கந்தலோயா தமிழ் வித்தியாலயம், அக்கரப்பத்தனை நு/ஆக்ரஊவா தமிழ் வித்தியாலயம், தலவாக்கலை நு/பெயார்வெல் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு இங்கு உதவிகள் வழங்கப்படும். தேசகீர்த்தி அதிகெளரவ சிவஸ்ரீ பாலரவி சங்கர சிவாச்சாரியாரின் ஆசியுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகும். மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்வில் வரவேற்புரை, தலைமையுரை, போஷகர் உரை, செயலாளரின் அறிக்கை உரை, நிதிச் செயலாளரின் அறிக்கை உரை நன்றியுரை, என்பன இடம்பெறும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.