புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 

மலையகக் கல்வியை சீரழிய விடலாமா?

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் அவல நிலை:

மலையகக் கல்வியை சீரழிய விடலாமா?

நுவரெலியா கல்வி வலயத்திற் குட்பட்ட தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தில் அதிபர் ஒருவர் நியமிக்கப்படாமையால் பாட சாலை நிர்வாகம் முறையாக இயங்காத நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரும் பாதிப்புக்குள் ளாகி வருவதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

மத்திய மாகாண கல்வி அமைச்சு மற்றும் நுவரெலியா தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பான கல்வி வலய உயரதிகாரி கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் மாணவர் களின் பெற்றோர் கோரியுள்ளனர்.

தலவாக்கலை பெரும்பாலும் தோட் டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் பிரதேசமாகவும் கல்வியைப் பொறுத்த வரையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிய டைந்து வருகிறது. நகருக்கு அண்மித்த தாக தலவாக்கலை தமிழ் மகா வித்தி யாலயம், பாரதி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இயங்கி வரு கின்றன. கிளனமேறா, ட்றூப், கொaன், புலிகண்டாமலை, பெரிய கட்டுக்கலை, சின்ன கட்டுக்கலை, தலவாக்கலை மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு ஆகிய தோட் டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தல வாக்கலை பாரதி மகா வித்தியாலயத் தில் க.பொ.த. (உ/த) வரையிலான கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.

தோட்டப் பாடசாலையாக இருந்து பின் 1991ம் ஆண்டில் பாரதி மகா வித்தியாலயமாக மாற்றப்பட்டதன் பின்னர் அப்போது அதிபராக இருந்த ஆர். கிருஷ்ணசாமியின் அர்ப்பணிப் பான சேவை இப்பாடசாலை கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

கடந்த காலங்களில் சட்டக் கல்லூரிக் கும், கலைத்துறைக்கும் மற்றும் ஆசிரி யர் கலாசாலைக்கும் பல மாணவர்கள் செல்வதற்கு காரணமாக இப்பாடசாலை இருந்தது. ஒரே தடவையில் எட்டு மாணவர்கள் இத் தோட்டப் பாடசாலை யிலிருந்து பல்கலைக்கழகம் சென்ற வரலாறும் உண்டு. ஆரம்பத்தில் இயற்கை வளங்களை கொண்டு மிகவும் அழகியதொரு பாடசாலை யாகவும், நன்நடத்தையில் சிறந்ததொரு பாடசாலையாகவும் காணப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் இந் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பாடசாலையின் கல்வி நிலைமையை எடுத்துக் கொண்டால் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ள தோடு, க.பொ.த. (சா/த) மற்றும் க.பொ.த. (உ/த) பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களின் பெறுபேறு களும் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்துள்ளது. அது மட்டுமன்றி பாடசாலையின் சூழலும் சுகாதாரமற்ற நிலையிலும், ஒழுங்கற்ற முறையிலும் காணப்படுகின்றது.

பாடசாலை நிர்வாகத்தை உரிய முறையில் கொண்டு நடாத்துவதற்கு கடந்த சில மாதங்களாக அதிபர் ஒருவர் நியமிக்கப்படாமை, உப அதிபர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வருவதன் காரணமாக ஆசிரியர்களின் பொறுப்பற்ற தன்மை, மாணவர்கள் மத்தியில் குழப்பங்களும் அதிகரித்து கற்பதற்கான சூழல் இல்லையென கூறப்படுகிறது.

பாடசாலையில் காணப்படும் பிள்ளை களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதி இன்மை, ஆசிரியர் பற்றாக்குறை, பாடசாலை கட்டடங்களின் தரை உடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. ஆசிரியர்கள் மத்தி யில் காணப்படும் முரண்பாடுகளையும் சண்டை சச்சரவுகளையும் மாணவர் களால் சகித்துக் கொள்ள முடியாதி ருக்கிறது. பாடசாலை விட்டு வீடு திரும்பும் மாணவர்கள் தமது பெற்றோ ரிடம் ஆசிரியர்களின் நடவடிக்கை களையே குறைகூறும் அளவிற்கு பாடசாலை நிர்வாகம் மாறியிருக்கின் றது. ஆசிரியர்களின் நடவடிக்கை களால் அவர்கள் மீது மாணவர்கள் கொண்டுள்ள மரியாதை யும், பயமும் நீங்கி வருவதையும், பெற்றோர் மத்தி யில் இவர்களது செயற்பாடுகள் அதிருப் தியை ஏற்படுத்தி வருவதனையும் காணக்கூடியதாக உள்ளது. ஆசிரியர் தம் கடமையில் கவனத்தை செலுத்து வதில்லை. சிற்றுண்டிச்சாலையிலிருந்து அதிகளவு நேரத்தை அங்கேயே செலவிடுவதாகவும், பாட நேரங்களில் ஆசிரியர்கள் வகுப்புகளுக்கே வருவதில்லை எனவும் மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உயர்தரம் கற்கும் மாணவர்கள் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் நேரத்துடனே பாடசாலை யிலிருந்து வெளியேறிவிடுவதாக கூறப்படுகிறது. உயர்தர வகுப்பு மாணவர்கள் வெளியேறுவதைப் பார்த்து ஏனைய வகுப்பு மாணவர் களும் பாட நேரத்தை வீணடித்து வீதியிலும் பாடசாலைக்கு வெளியிலும் தம் நேரத்தை செலவிடுகின்றனர்.

மாணவர்களிடம் சில கூடாத பழக்கங்களும் தோன்றியுள்ளன. மாணவர்கள் மத்தியில் கைத்தொலை பேசி பாவனை அதிகரித்துள்ளதுடன், மாணவர்கள் சிறு வயதிலேயே காதல் வயப்படுவதனையும் அதனால் அவர் களின் கல்வி சீரழிந்து செல்வதனை யும் காண முடிகின்றது. இந்நவீன உலகில் பிள்ளைகள் தீயவிடயங்க ளையே மிக வேகமாக கற்கின்றனர். அவ்வாறான சூழலுக்கு இடமளிக்காது பாதுகாக்க வேண்டியது ஆசிரியரின தும் பெற்றோரினதும் கடமையாகும். எனவே மாணவர்களை நல்வழிப்படுத் தும் சூழலை தோற்றுவிக்கும்படியான செயற்பாடுகளில் ஆசிரியர்கள் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

பெருந்தோட்டப் பாடசாலைகள் மாகாண கல்வியமைச்சின் நிர்வாகத் தின் கீழேயே இயங்கி வருகின்றன. தமிழ் மக்கள் செறிந்து வாழும் மத்திய, ஊவா மாகாணங்களில் தமிழ்க் கல்விக்கென தனியாக அமைச்சு இயங்கி வருகிறது. தோட் டப்புற மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்ட இப் பாடசாலையின் நலன் அவர்களை சென்றடைகின்றதா என்பது கேள்விக் குறியானதாகவே காணப்படுகின்றது.

ஆகவே இதனை மத்திய மாகாண கல்வி அமைச்சர் கவனத்திற் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். உடனே அப்பாட சாலைக்கான அதிபரையும், பாடங்க ளுக்கான ஆசிரியரையும் நியமிப்ப துடன் பாடசாலை சூழலிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஆசிரியர் பற்றாக்குறை, வளப்பற் றாக்குறை, மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கேற்ற சிறந்த சூழல் இல்லாமை, மாணவர்களின் இடை விலகல் வறுமை என பலதரப் பட்ட பிரச்சினைகளுக்குள் சில பாடசாலைகள் சிக்கித் தவிக்கின்றன. சில பாடசாலைகளில் ஆசிரியர்களி டையே ஒற்றுமையின்மை, பதவிப் போட்டாபோட்டிகள், கருத்து முரண் பாடுகள் மாணவர்களின் கல்விக்கு பெரும் தடையாக இருப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர் என்பவர் ஒரு சமூகத்தின் கண்ணாடியாகும். ஆசிரியர்களின் கையில்தான் ஒரு சமூகத்தின் விடிவும், வெற்றியும் தோல்வியும் தங்கியிருக்கிறது. இதனை உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியரும் தனது பணியை செவ்வனே செய்ய வேண்டியது அவசியமாகும். அதிபர் என்ற முறையில் பாடரீதியான வளவாளகர்களையும் ஆசிரிய ஆலோசகர்களையும் நலன் விரும்பிகள், புத்திஜீவிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் இணைத்துக் கொண்டு பாடசாலை நிர்வாகத்தை நடத்திச் செல்ல வேண்டும்.

கல்வி ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. கல்வியும் அபிவிருத்தியும் சம அள வில் இருக்கும் போதுதான் அச்சமூகம் முழுமையாக அபிவிருத்தி நோக்கிய பாதையில் பயணிக்கும். மலையகத் தைப் பொறுத்தவரையில் எதிலும் முழுமையடையாத நிலையே காணப்படுகிறது.

பெருந்தோட்டப் பாடசாலைகள் மாகாண கல்வியமைச்சின் நிர்வாகத் தின் கீழேயே இயங்கி வருகின்றன. தமிழ் மக்கள் செறிந்து வாழும் மத்திய, ஊவா மாகாணங்களில் தமிழ்க் கல்விக்கென தனியாக அமைச்சு இயங்கி வருகிறது.

சமூக நலனில் அக்கறை கொண்ட அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்கள் விசேட வகுப்புக்களை நடத்தி பெருந்தோட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். எனினும் மலையகப் பெருந்தோட்டப் பகுதி களிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வித்தரம் நாம் திருப்தியடையும் அளவிற்கு மாற்றம் ஏற்படவில்லை யென்றே கூறவேண்டும்.

தலாவாக்கலை டி சிவா

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.