கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18
SUNDAY MARCH 11, 2012

Print

 
மன்னார் ஆயரை விமர்சிக்க JHU க்கு அருகதை இல்லை!

யுத்தகாலத்தில் மக்களுக்கு உதவிய ஆண்டகை;

மன்னார் ஆயரை விமர்சிக்க JHU க்கு அருகதை இல்லை!

வினோ, செல்வம் கடும் கண்டனம்

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய தெரிவித் திருக்கும் கருத்திற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ். வினோ நோகராதலிங்கம் ஆகியோர் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தெரிவிப்பதற்கு பேரினவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமயவிற்கு அருகதையில்லை. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கும் இறுதியாக முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மனிதப்படுகொலைக்கும் மூலகாரணமாக அமைந்தவர்களே இந்த பேரினவாத என்பதனை சர்வதேச சமூகம் புரிந்து கொண்டுள்ளது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சிப்பதிவுகள் மன்னாரில் இடம்பெற்ற போதும் அதன் முன் பிரசன்னமாகி தமது கருத்துக்களை ஆவணமாக சமர்ப்பித்திருந்தார்.

மக்கள் பற்றியும் அவர்களது உரிமைகள், அன்றாட வாழ்வியல் பற்றியும் சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு மதத்தலைவரான மன்னார் ஆயர் அவர்களை நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கூறுவதை மனசாட்சி உள்ள பெரு ம்பான்மையினர் கூட ஏற்றுக்கொள் ளமாட்டார்கள் என்பதையே நாம் தெரிவித்து நிற்கின்றோம்.

எனவே மன்னார் ஆயர் உட்பட மக்களுக்காக குரல் கொடுக்கும் எந்த தரப்பினர்கள் மீதும் மேற்கொள்ளப்படும் இச்செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இது தொடரும் பட்சத்தில் இதற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வீதியில் இறங்கி போராட்டத்தை நடத்தவும் தயாராகவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பி னர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ். வினோநோகராதலிங் கம் ஆகியோர் இணைந்து வெளியிட் டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]