கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18
SUNDAY MARCH 11, 2012

Print

 
தமிழர்களின் உரிமை பேசும் புளித்துப்போன தலைமையை வெறுக்கும் வன்னி மக்கள் !

இறுதி யுத்த காலத்தில் மக்களை அநாதரவாக கைவிட்டு ஓடிய சீமான்கள் ;

தமிழர்களின் உரிமை பேசும் புளித்துப்போன தலைமையை வெறுக்கும் வன்னி மக்கள் !

தள்ளாதவயதில் அரசியல் இருப்பிற்காக அலைகிறார் சங்கரி

என்னைக் கத்துக்குட்டி என்று கூற ஐயாவால் எப்படி முடிகிறது என்கிறார் SLFP கிளிநொச்சி அமைப்பாளர் கீதாஞ்சலி

வன்னித் தமிழினம் இன்னமும் புளித்துப் போன பழம் அரசியல் தலைமைகளின் பின்னால் செல்லத் தயாராக இல்லையென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் மீள்குடியேற்ற இணைப்பாளருமான திருமதி ந. கீதாஞ்சலி தெரிவித்தார்.

“நெருக்கடியான காலகட்டத்தில் தமிழ் மக்களை அநாதரவாக விட்டு கொழும்பிலும் வெளிநாடுகளிலும் உல்லாசமாய் இருந்துவிட்டு இன்று தமிழர் உரிமை பேசும் கோமாளி அரசியலை தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலோடு ஓரங்கட்டிவிட்டார்கள் என்றும் அவர் கூறினார். என்னைக் கத்துக் குட்டி என்று கூறும் பழுத்த அரசியல்வாதி சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதால் தமிழ் மக்களை வென்று விடலாம் என்பது விவேகமற்ற சிந்தனையாகும்” என்று தெரிவித்த கீதாஞ்சலி, “வன்னி மக்களுக்குக் கல்விக் கண்ணைத் திறக்கும் பணியை முழு மூச்சாக மேற்கொண்டிருக்கிறேன்.

குருட்டுத் தனமான அரசியலை கடந்த 50 ஆண்டுகளாக நடத்தி மக்களையும் தவறாக வழி நடத்தினார்கள். ஆகவே அந்த மக்களுக்கு நல்ல கல்வியைப் புகட்டி அரசியலிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும். இதனைச் சகித்துக் கொள்ளாத முதியவர்கள் தமது இறுதி வாழ்வாதார அரசியல் இருப்பு ஆட்டங் கண்டுவடுமென அஞ்சுகிறார்கள். எவர் எதைச் சொன்னாலும் என் சமூகப் பணியில் எந்தப் பின்வாங்கலும் கிடையாது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]