கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18
SUNDAY MARCH 11, 2012

Print

 
படுகொலையில் முடிந்த தேனிலவு!

படுகொலையில் முடிந்த தேனிலவு!

பிரித்தானி யாவில் இருந்து வந்த தமிழ் பெண் ஒருவர் இரண் டாவது கணவனுடன் கொழும்பு ரேணுகா ஹோட்டல் அறையில் தங்கி இருந்த போது இரு வாரங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டமையை தொடர்ந்து திடுக்கிடும் மர்மங்கள் பல வெளியாகி உள்ளன.

பெண்ணின் பெயர் சுதர்சினி சகிலா கனகசபை, ஹோட்டலின் முதலாம் இலக்க அறையில் தேனிலவுக்காக தங்கி இருந்திருக்கின்றார். கடந்த 26ம் திகதி அப்பெண் கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்து விட்டு கணவர் தப்பிச் சென்று விட்டார். அறை இரண்டு நாட்களுக்கு பூட்டப்பட்டு இருந்தது. அறையில் இருந்து துர்நாற் றம் வீசலாயிற்று. மாற்றுச் சாவியை பயன்படுத்தி ஹோட்டல் ஊழியர்கள் கதவைத் திறந்தனர். இறந்தவரின் உடல் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது.

ஹோட்டல் முகாமையாளர்கள் பாதுகாப்புக் கமராவில் காட்சிகளை நோட்டமிட்டனர். அறைக்குள் என்ன நடந்தது? என்பதை கமரா காட்டிக் கொடுத்தது. கொலையை செய்து விட்டு கணவன் ஹோட்டலை விட்டு சென்றிருந்தார் என்பதை கமரா சந் தேகத்துக்கு இடமின்றிக் காட்டியது.

ஹோட்டலில் பதிவு நடவடிக்கை களுக்காக கணவன் உண்மையான தகவல்களை கொடுத்து இருக்கின்றார். பெயர் ஞானச்சந்திரன் என்றும் குறிப்பிட்டு நிரந்தர வதிவிட முகவரி, கையடக்கத் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றையும் பதிவு செய்திருக்கின்றார்.

ஆனால் படுகொலையை தொடர்ந்து கையடக்கத் தொலைபேசியை செயல் இழக்க வைத்துள்ளார்.

பொலிஸார் இவரின் நிரந்தர வதிவிட முகவரிக்கு நேரில் சென்றனர். ஆனால் இவர் அம்முகவரியில் தற்சமயம் இல்லை என்பதை கண்டு கொண்டனர்.

இவரது தகப்பன் புறக்கோட்டையில் பீடி மற்றும் புகையிலை வியாபாரம் செய்தவர். இவர்தான் இக்கடையை இப்போது நடத்தி வருகின்றார். ஆனால் இவ்வியாபாரம் நஷ்டத்திலேயே செல்கின்றது. அதனால் ஏராளமான பிரச்சினைகளுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

கொல்லப்பட்ட பெண்ணின் தொலை பேசியை பொலிஸார் கைப்பற்றினர். இத்தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அழைப்பு மேற்கொண்டு இருந்தவரை ரேணுகா ஹோட்டலுக்கு உடனடியாக வரச் சொல்லி அறிவுறுத்தி னர். வந்தவர்களிடம் ஏராளமான தக வல்களை பொலிஸாரால் பெற முடி ந்தது.

எப்போது திருமணம் நடந்தது? எங்கு நடந்தது? என்பன போன்ற முக்கிய தகவல்களை பொலிஸார் திரட்டினர்.

திருமணம் சுதர்சினியின் விருப்பத் துக்கு இணங்கவே நடந்து இருந்தது என்றும் ஞானச்சந்திரனின் உறவுகள் இத்திருமணத்தை விரும்பவில்லை என்றும் பொலிஸார் அறிந்து கொண்டனர். ஆனால் ஞானச்சந்திரன் எங்கே மறைந்திருக்கின்றார் என்பது தகவல்கள் சொன்னவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

கையடக்கத் தொலைபேசியை செயல் இழக்க வைத்திருந்த போதும் மறைந்து இருந்த ஞானதாசன் இடை யிடையே தொலைபேசியை பயன்படுத்தி இருக்கின்றார். சிம் கார்ட்டில் இருந்து கிடைக்கப் பெற்ற சிக்னலை வைத்து பொலிஸார் இவரை கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

இவர் கொள்ளுப்பிட்டி பகுதியில்தான் நடமாடுகின்றார் என்பதை சிம் கார்ட்டின் சிக்னலை வைத்து பொலிஸார் ஊகித்துக் கொண்டனர். இவரின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

அவர் வைத்தியசாலை ஒன்றில் உள்ளார் என்பதை மிகச் சரியாக அறி ந்து கொள்ள பொலிஸாருக்கு முடிந் திருக்கின்றது.

அவர் பொலிஸாருக்கு மிக நீண்ட ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழ ங்கி இருக்கின்றார். யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டவர் என்றும் சிறுவயது முதலே சுதர்சினியை அறிந்து வைத்திருந்தார் என்றும் உள்நாட்டு போரை அடுத்து இருவரது குடும் பங்களும் அங்கும் இங்குமாக இடம் பெயர்ந்தன என்றும் தனது வாக்கு மூலத்தில் சொல்லியிருக்கிறார்.

சுதர்சினி திருமணம் செய்து பிரிட்டனில் குடியேறினார் என்றும் சுதர்சினிக்கு மூன்று பிள்ளைகள் என்றும் மூவரும் படித்து முடித்து கன டாவில் வேலை பார்க்கின்றனர் என் றும் ஞானசந்திரன் கூறி இருக்கின்றார்.

வியாபாரத்தில் தோல்வி அடைந்த மையால் ஞானச்சந்திரன் குடும்பத்து டன் அவுஸ்திரேலியா சென்றார். அவுஸ்திரேலிய வாழ்வு ஏமாற்றத்தைக் கொடுத்து இருக்கின்றது. பின்பு சென்னையில் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளு டன் ஆடம்பர வீடொன்றில் தங்கி இருக்கிறார்.

கடந்த வருடம் ஜூன் மாதம் இவரது மனைவியும் குழந்தைகளும் அவ்வீட்டில் தீயில் சிக்கி இறந் திருக்கின்றனர். (ஞானச்சந்திரன் மீது படுகொலைச் சந்தேகம் உள்ளது)

வேறு மார்க்கம் இல்லாமையால் நாடு திரும்பி இருக்கின்றார் ஞானச்சந்திரன். ஆனால் விடுமுறைக்காக ஞானச்சந் திரன் குடும்ப சகிதம் முன்பு பிரிட் டன் ஒருமுறை சென்றிருந்த போது அங்கு சுதர்சினியை சந்தித்திருக்கின் றார். அதற்கு பின் கடந்த மாதம்தான் சுதர்சினியை மீண்டும் சந்தித்து இருக்கின்றார்.

திருமண யோசனை முதலில் சுதர் சினியால் முன்வைக்கப்பட்டு இருக்கின் றது. ஞானச்சந்திரனும் திருமணத்து க்கு ஒப்புக் கொண்டார். பிள்ளைகள் கனடாவில் வேலை பார்க்கின்ற நிலையில் முதல் கணவனிடம் இருந்து இலகுவாக விவாகரத்து பெற சுதர் சினியால் முடிந்தது.

திருமணத்தை விரைந்து மேற் கொண்டனர். தேனிலவுக்காக ஹோட்டலில் தங்கி னர். பிரித்தானியாவில் தான் இருவரும் வாழ வேண்டும் என்று முன்பே சுதர்சினி சொல்லி இருந்தார். ஆனால் ஞானச்சந்திரன் அதற்கு சம்மதித்திருக்க வில்லை.

இருவரும் ஹோட் டல் அறையில் நன் றாக குடித்தனர். பிரித்தானிய விவகா ரம் தொடர்பாக இருவருக்கும் இடையிலான அபிப்பிராய பேதம் முற்றியது. ஞானச்சந்திரனால் கோப த்தை அடக்க முடியவில்லை. பழங் களை வெட்ட ஹோட்டல் சிப்பந்திக ளால் கொடுக்கப்பட்ட கத்தியைப் பயன்படுத்தி சுதர்சினியின் கழுத்தில் வெட்டி இருக்கின்றார். காயமடைந்த சுதர்சினி இறந்து விட்டார்.

சென்னையில் முதன் மனைவி மற்றும் பிள்ளைகள் இறந்ததைத் தொடர்ந்து மன நிலை பாதிப்பு அடைந்துள்ளதால் சுருக்கென்று கோபம் வந்து விடுவதாகவும் பொலி ஸாருக்கு ஞானச்சந்திரன் சொன்னார்.

இவர் உண்மையிலேயே மனநிலை குழம்பியவரா? என்பதை பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வைத்திய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானச்சந்திரனின் முதல் மனைவி, மற்றும் குழந்தைகள் இறந்தமையும் அந்நாட்களில் பரபரப்பாகப் போசப்பட்டது.

“சென்னை சேத்துப்பட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை தொழிலதிபரின் மனைவியும், 2 மகள்களும் தீயில் கருதி பரிதாபமாக உயிரிழந்தனர். இலங்கை தொழிலதிபரும் அவருடைய இன்னொரு மகளும் பலத்த தீக்கா யங்களுடன் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர்.

தீப்பிடித்து எரிந்த தொழிலதிபர் ஞான ச்சந்திரனின் வீட்டுக் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. தீயனைப்பு வீரர் கள் அந்தக் கதவை உடைத்து வீட் டுக்குள் போக முயன்றனர். ஆனால், வீடு முழுவதும் தீப் பிடித்து எரிந்ததால் ஒரே புகைமூட்டமாக இருந்தது. பயங்கர அனல் அடித்ததால் யாரும் உள்ளேபுக முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

தொழிலதிபர் ஞானச்சந்திரன் தீக்காயங்களுடன் வெளியே வந்தார். அவரது மகள் செளமியா உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் வெளியே ஓடிவந்தார். என்ன நடந்தது? எதனால் தீப்பிடித்தது? என்ற விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை.

வீட்டுக்குள் 3 படுக்கை அறைகள், பெரிய வரவேற்பு அறை, சமையலறை, பூஜை அறை என பல அறைகள் இருந்தன. ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தபோது, ஒரு படுக்கை அறைக்குள் அவர் மனைவியும் ஒரு மகளும் தீயில் எரிந்து கரிக்கட்டைகளாக பிணமாக கிடந்தனர். இன்னொரு மகள் குளியலறைக்குள் உடல் முழு வதும் எரிந்து பிணமாகக் கிடந்தார்.

அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்த போது இவர்களைப் பற்றிய பெயர், விவரங்கள்கூட தெரியவில்லை. அவர் கள் வீட்டில் வேலை செய்த பாப்பாத்தி என்ற பெண் மட்டும் ஒரு சில விவரங்களை மட்டும் கூறினார். பின்னர் படிப்படியாக பொலிஸார் தகவல்களை சேகரித்தனர். இவர்கள் குடும்பத்தோடு தீக்குளித்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணை மூலம் கருதுவதாக தீயணைப்பு படை யினரும் பொலிஸாரும் கூறினார்கள்.

தொழிலதிபர் ஞானச்சந்திரனே மனைவி, மகள்களை தீவைத்து எரித்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது. ஏனென்றால், அவருக்கு தீயினால் அதிக காயம் ஏற்படவில்லை.” என்று வெளியான செய்தி நினைவிருக்கலாம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]