கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18
SUNDAY MARCH 11, 2012

Print

 
பொருளாதாரத்துக்கு வலுவ+ட்டும்

பொருளாதாரத்துக்கு வலுவ+ட்டும்

வெளிநாட்டு தொழில் முகவர்களுக்கு விருதுகள்

தேசத்தின் பொருளாதாரத்தை வலுவூட்டி பாரம்பரிய அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் தேயிலை, இறப்பர், தெங்கு உட்பட ஆடை ஏற்றுமதிகளையும் கடந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை முன்னிணியில் நிற்கிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் நலன்புரி அமைச்சின் நிர்வாகத்தின் கீழ்வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு தொழில் முகவர்களை தரப்படுத்துகிறது. அந்தத் தரப்படுத்தலின் ஊடாக Excellence Award என்ற திறமை விருதுகள் 308 தொழில் முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது வரலாற்றில் முக்கிய நிகழ்வாகும்.

இந்த திறமை விருதுகளுக்காக 2009, 2010 ஆண்டுகளில் முகவர்களின் வேலைத் திட்டங்கள் கருத்திற் கொள்ளப்பட்டன.

ஐந்து நட்சத்திர தரத்தை வழங்க வேண்டுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கொள்கையளவில் தீர்மானித்த போதும் இந்த முறை அந்த மட்டத்தை எந்த தொழில் முகவரும் பெறவில்லை, அடையவில்லை.

இவ்வாறான விசேட விருதுகள் வழங்கப்பட்டவர்களை இந்தத் துறைக்கு அறிமுகப்படுத்தி அவர்களை ஊக்குவித்து இத்துறையில் நீண்ட கால அபிவிருத்தி எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு விசேட திறமையாளர்களாக அறிமுகம் செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் நம்பிக்கையுடன் நெருக்கமாகி சேவைகளை மேற்கொள்ளவும் வாய்ப்பு உருவாகிறது.

திறன் விருதுகள் வைபவம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதிகாரவின் அழைப்பின் பேரில் அமைச்சர் பவித்திரா வன்னி ஆராச்சி, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரின் பங்குபற்றுதலோடு பத்தரமுல்ல வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றுது.

திறன் விருது பெற்ற தொழில் முகவர்கள் மட்டுமன்றி தொழில் முகவர் நிறுவனங்களைச் சேர்ந்தோரும் பெரும் எண்ணிக்கையில் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]