கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18
SUNDAY MARCH 11, 2012

Print

 
நிர்மாணத்துறைக்கு ஆதரவளிக்கும்

நிர்மாணத்துறைக்கு ஆதரவளிக்கும்

கொமர்ஷல் வங்கி

உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற KOBELCO அகழ்வு இயந்திரங்கள் மற்றும் KOMAC கனரக இயந்திரங்களை கொள்வனவு செய்பவர்கள் இனிமேல் கழிவு விலை உட்பட பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். கொமர்ஷல் வங்கியின் லீசிங் திட்டத்தின் கீழ் இவற்றைக் கொள்வனவு செய்வதற்கு விசேட குத்தகை கொடுப்பனவு முறைகளும் காப்புறுதித் திட்டங்களும் வழங்கப்படவுள்ளன.

2012 பெப்ரவரி முதல் இந்தத் திட்டம் அமுலுக்கு வருகின்றது. சர்வதேச ரீதியாக இலங்கையின் தலைசிறந்த வங்கியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கொமர்ஷல் வங்கிக்கும் நிர்மாணத்துறை இயந்திரங்களை விநியோகிக்கும் முக்கிய நிறுவனம் என்பனவற்றுக்கிடையில் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட விஷேட ஒப்பந்தமொன்றின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் KOBELCO அகழ்வு இயந்திரங்கள் மற்றும KOMAC கனரக இயந்திரங்களையும் மற்றும் உதிரிப் பாகங்களையும் கொமர்ஷல் வங்கியின் லீசிங் திட்டத்தின் கீழ் வாங்குபவர்களுக்கு செனொக் நிறுவனம் விஷேட கழிவுகளை வழங்கும்.

இந்த அனுகூலுங்களுக்கு இலவசமாக கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு போட்டித் தன்மைக்கு ஈடுகொடுக்கக் கூடிய வாடகை முறையில் வழங்குவதோடு வங்கியின் இணை நிறுவனமான கொமர்ஷல் இன்ஷ¥ரன்ஸ் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட KOBELCO அகழ்வு இயந்திரங்களுக்கு விஷேட காப்புறுதித் திட்டத்தையும் வழங்கும். இது வாடிக்கையாளர்களுக்கு மேலும் அனுகூலமாக அமையும் என்று வங்கி தெரிவித்துள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]