கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11
SUNDAY MARCH 04, 2012

Print

 
கிளி

கிளி

r எனது செல்லப் பிராணி கிளி
r அதன் பெயர் ஏஞ்சல்
r இது ஒரு பச்சை கிளி
r எனது கிளி மிகவும் அழகானது
r கிளி என்னை பெயர் சொல்லி அழைக்கும்
r கிளி பழங்கள் உண்ணும்
r நான் கிளிக்கு தினமும் பழங்கள்
கொடுப்பேன்

ஏ. ஆர். பாத்திமா ரஸ்மினா

ஆண்டு 3 ஏ

ப/ அல் இர்ஷாட் மகா வித்தியாலயம்

ஹாலிஎல


பலூன் சிறுவன்!

கடற்கரையில் பலூன் விற்கும்
சிறுவன் நானுங்கோ
கவலை எனக்கு நிறைய உண்டு
சொல்லுறேன் கேளுங்கோ!

பள்ளி செல்ல நான் நினைத்தும்
போக முடியல்லே
படிக்க நானும் ஆசைப்பட்டுப்
பலனும் கிடைக்கல்லே!

குடித்து விட்டு எங்களப்பா
ஊரைச் சுற்றுறார்
குடிக்கக் காசு கொண்டா என்று
என்னை அடிக்கிறார்!

தம்பி தங்கை இருவருக்கும்
நானே மூத்தவன்
நம்பி எனது உழைப்பினாலே
அவர்கள் வாழ்கிறார்

அம்மா பாவம் அப்பாவிடம்
அடியை வாங்கியே
அகலாத நோயில் விழுந்து
பாயிற் கிடக்கிறார்

என்ன செய்ய பலூன் விற்றே
எமது சீவியம்
இரண்டு மூன்று பலூனாய் வாங்கி
உதவி செய்யுக்கோ- ஐயா
உதவி செய்யுங்கோ!
- ஷெல்லிதாசன்

சுவாமி விவேகானந்தர்

இந்தியாவிலுள்ள கல்கத்தா நகரில் வாழ்ந்த வழக்கறிஞரான விஸ்வநாத தத்தக்குருவு க்கும் புவனேஸ்வரி தேவியாருக்கும் மகனாக 1863 ஆம் ஆண்டு தைமாதம் 12 ஆந் திகதி நரேந்திரர் பிறந்தார். இவர் இளமையில் துடுக்குத் தனம் மிகுந்தவராகக் காணப்பட்டார். இந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்தமை அவரது முக்கிய பணியாகும்.

இவர் பள்ளிக்கூடத்தில் படித்ததைவிட சொந்த முயற்சியால் கற்றது அதிகம். ஆரம்பத்தில் இராமாயனத்தையும், பாரதத்தையும் அதிகம் கற்றார். அவ்வாறு பண்டைய கிரேக்க தத்துவத்தையும் ஜேர்மன் தத்துவத்தையும் நன்கு கற்று பீ. ஏ. பரீட்சையில் சித்தியடைந்தார். சுவாமிகள் இலங்கை விஜயம் மேற்கொண்டமையினை நன்றியுணர்வோடு நினைவுகூருமுமாக 1997ஆம் ஆண்டு இலங்கை அரசு சுவாமி விவேகானந்தர் இலங்கை விஜயம் நினைவு முத்திரையினை வெளிநாட்டு கெளரவித்தமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
 

ஆர். துஷாந்தினி

புனித தோமையார் பெண்கள் பாடசாலை

மாத்தளை

இலங்கை பற்றிய தகவல்கள்

இலங்கையின் பெரிய மாவட்டம் - அனுராபுரம்

இலங்கையின் சிறிய மாவட்டம் - கொழும்பு

மிக நீளமான ஆறு - மனகாவலி கங்கை

உயரமான மலை - பீதுறுதலாகால

மிகப்பெரிய பூந்தோட்டம் - பேராதனை தாவரவியல் பூங்கா

மிக உயரமான குன்று - கொக்கல

நிலப்பரப்பில் கூடியமாகாணம் - வட மத்திய மாகாணம்

எஸ். டிலக்ஷி

தரம் - 07, கலைமகள் மகாவித்தியாலயம்

மாத்தளை

கண்களைப் பாதுகாப்போம்

* படிக்கும் போது நல்ல வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்வோம்.

* அதிக நேரம் சூரியனையோ, நிறைய வெளிச்சம் உள்ள இடத்தையோ பார்ப்பதைத் தவிர்ப்போம்.

* கணனியை உபயோகிக்கும் போது அதன் ஒளி அளவைக் குறைத்து வைத்துப் பயன்படுத்துவோம்.

* பதினைந்து அடி தூரத்திற்கு அப்பால் அமர்ந்த தொலைக்காட்சி பார்ப்போம்.

* கத்தி, ஊசி போன்ற கூர்மையான பொருட்களை கண்களுக்கு அருகில் வைத்த விளையாடுவதைத் தவிர்ப்போம்.

* வாகனங்களில் செல்லும் போதும் குறைந்த வெளிச்சம் உள்ள போதும் புத்தகங்களைப் படிப்பதைத் தவிர்ப்போம்.

* அப்பா அல்லதுஅம்மா கண்ணாடி அணிந்திருந்தால் நாமும் கண்ணாடி அணிய வேண்டிய வரலாம் என்பதால் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவப்பரிசோதனை செய்து கொள்வோம்.

* கரட், கீரை, அப்பிள், முட்டை, பப்பாசி, மீன் போன்றவை கண்களுக்கு நல்லவை என்பதால் அவற்றை விரும்பி உண்போம்.

ஏ. ஆர். இஸட். எம். பரஹி,

தரம் 06, நாங்கல்ல மு. ம. வித்தியாலயம்

நாங்கல்ல
 


 

 

பாய்க் அஹ்மத்

ரன்தரு பாலர் பாடசாலை, காலி.

எஸ். ஏ. ரஹ்மான்

தரம் 06, கா/ சுலைமானியா ம. வி. காலி.

எ. ஆர். பாத்திமா ரஸ்மினா,

தரம் 03, ப/ அல் இர்ஷாட் ம. வி. ஹாலி-எல

அப்துல் ரஹ்மான்,

தரம் 05 - பி, கரு/ முஸ்லிம் மகளிர் பாடசாலை, தர்காநகர்.

எஸ். கீர்த்திக்கா,

தரம் 05 ஏ, கிங்ஸ்ரன் சர்வதேச பாடசாலை, கொழும்பு - 15

வி. ரினோசன்,

தரம் 06 ஏ, மே. மா/ மது. கலைமகள் த. வி. மத்துகம.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]