புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 
தமிழ் கூட்டமைப்பின்

தமிழ் கூட்டமைப்பின்

நிலைப்பாடும் தடுமாற்றங்களும்

இலங்கையின் மீதான வெளி அழுத்தங் களை எதிர்த்து நாடுதழுவிய ரீதியில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தலைமையில் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை எதிர்க்கும் போராட்டங்களே நடந்துள்ளன.

இந்தப் போராட் டங்களுக்கு இலங் கையின் பெரும்பாலான கட்சிகள் ஆதரவளித் துள்ளன. சிங்களக் கட்சிகள் பெரும்பாலும் தேசிய நிலைப்பாட்டு சிந்தனையுடன் இயங்கியுள்ளன.

இலங்கையின் மீதான எத்தகைய அழுத்தங்களும் இலங்கையர் அனை வரையும் பாதிக்கும் என்ற உணர்வு சிங்களக் கட்சிகளிடம் இருந்துள்ளது. ஐ.தே.க. கூட இதனை ஏற்றுக் கொண்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தரப்பிலும் இந்த விசயத்தில் ஓரளவு ஒத்த நிலைமையே காணப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மட்டுமல்ல, முற்றிலும் வேறான ஒரு அரசியல் நிலைப்பாட் டையுடைய தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) கூட இந்த விச யத்தில் அதனுடைய அரசியற் பாரம் பரியத்துக்கும் சிந்தனைப் பாரம்பரியத்துக் கும் அப்பால் ஒரு தீர்மானத்தை எடுத் திருக்கிறது.

தென்பகுதி மக்கள் ஒருமுகப்பட்டு நிற்கும் போது அதற்கெதிராகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்பட முடியாது என்றும் தற்போதுள்ள நிலைமையில் மிகக் கவனமாகவே முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும் இலங்கையில் சமூகங்களுக்கிடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அந்தக் கட்சியின் தலை வர் திரு இரா. சம்பந்தன் அறிவித்திருந்தார்.

வெளிப்படையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளி அழுத்தங்களை எதிர்க்கவில்லை. ஆனால், அது அமெ ரிக்கா கொண்டு வரவிருந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை இலங்கை அரசை எதிர்த்து, ஜெனிவாவில் எதிர்நிலைப்பாட்டோடு திரளவுமில்லை.

புலம்பெயர் நாடுகளில் இருக்கும் கணிசமான தமிழர்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஜெனிவாவில் திரண்டிருந்த சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அப்படியான ஒரு நிலைப்பாட்டுடன் ஜெனிவாவில் நின்றிருக்க வேண்டும் என அவர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வளவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிக அண்மையில் அமெரிக்கப் பிரதிநிதிகள் சந்தித்திருக்கின்றனர். 'தமிழ்ச் சிவில் சமூகப் பிரதிநிதிகள்' என்று கூறப்படும் அணியினர் சந்தித்திருக்கின்றனர். இந்தியப் பிரதிநிதிகள் சந்தித்திருக்கின்றனர்.

இத்தனைக்குப் பிறகும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது என்பது கவனத்திற்குரிய ஒன்று.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளப் போவதில்லை என்று திரு இரா. சம்பந்தன் அறிக்கையை விடுத்திருந்தார்.

இந்த அறிக்கையை அடுத்துப் பல குழப்பங்களும் அறிவிப்புகளும் விமர்சனங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும் அதனைச் சுற்றியும் எழுந்துள்ளன.

குறிப்பாகக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா சம்பந்தனை நோக்கியும் அவருடைய நெருங்கிய சகாவாகவும் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் மூளையா கவும் கருதப்படுகின்ற திரு. சுமந்திரனையும் நோக்கியுமே இந் தக் குற்றச் சாட் டுகளும் விமர் சனங்களும் கிளம்பியுள்ளன. தற்போது திரு சம்பந்தனும் திரு சுமந்திரனும் அறிவித்த இந்த முடிவை, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற, அந்தக் கட்சியின் பேச்சாளராக இருக்கின்ற, அந்த அமை ப்பின் மூத்த உறுப்பினராக இருக்கின்ற திரு சுரேஸ் பிரேமச்சந்திரனே நிராகரித் திருக்கிறார்.

திரு சம்பந்தனின் அறிவிப்புத் தனக்கும் கட்சிக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாகவும் அத்தகைய தீர்மானம் தனிப்பட்ட ரீதி யில் திரு சம்பந்தனுடைய நிலைப்பாடா கத்தான் இருக்கிறது எனவும் திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் பி.பி.ஸி. தமி ழோசையில் 26.02.2012 அன்றிரவு தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த நிலையை உடனடியாகவே மறுத்து மீண்டும் எல்லோரையும் அதிர் ச்சியடைய வைத்தார் திரு . சம்பந்தன், ஜெனிவாவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செல்வதில்லை என்ற முடிவானது பொதுவான தீர்மானமே என்றும் இதைக் குறித்து ஏற்கனவே விளக்க மளிக்கப்பட்டது எனவும் இது தொடர்பாக மேலதிக விளக்கம் கொடுக்கப்படும் எனவும் உடடினயாகவே தனது மறுப்பை வெளியிட்டிருந்தார் திரு சம்பந்தன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் திரு. சம்பந்தனும் திரு. சுமந்திரனும் நிலைமைகளை ஓரளவுக்கு விளங்கிக் கொண்டு யதார்த்தமாகச் சிந்திப்பவர்கள் என்பதை அவதானிக்கலாம். வெளிநாடுகளின் இராஜதந்திரிகளையும் இவர்களே அடிக்கடி சந்திப்பவர்கள் என்ற வகையிலும் அரசியல் அணுகுமுறைகள் குறித்த புரிதல்கள் இவர்களுக்கு ஏனையவர்களை விடவும் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.

இதனாற்தான் திரு சம்பந்தன் தன்னுடைய பதில் அறிக்கையை வெளிப்படுத்தும் போது கூட்டமைப்பின் நேசநாடுகளின் ஆலோசனை செய்தே தாம் இந்த முடிவை எடுத்ததாகச் சொன்னார். அர சாங்கத்தைப் பகைத்துக் கொள்ளாமல், அதனுடன் உறவைப் பேணும் வகையில் திரு சம்பந்தனும் சுமந்திரனும் நிலைமைகளைக் கையாள்கின்றனர்.

அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ள முடியாத ஒரு நிலைவரத்துக்கு இன்று கூட்டமைப்பும் வந்துள்ளது. இதனையடுத்து எழுந்துள்ள சர்ச்சைகளிற்குப் பதிலளிக் கும் போது 'எனது மக்கள் நீதியுடனும் சமத்துவத்துடனும் வாழ வேண்டும் என் பதற்காகவே நான் என்னை அர்ப்பணித் துள்ளேன். ஆகவே நான் எதனைச் செய்ய வேண்டியுள்ளதோ அதனை நிறைவேற்ற வேண்டும்' என்று கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு இணையத் தளத்திற்கு வழங்கிய நேர்காணில் திரு சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இங்கே பிரச்சினை என்னவென்றால், சம்பந்தன் நிலைமைகளை விளங்கிக் கொள் கிறார். அதன்படி முடிவெடுக்க முயற்சிக்கிறார். ஆனால், அதைச் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவர் திணறுகிறார்.

புலம்பெயர் மக்களின் அபிப்பிராயத்தை யும் தமிழ்த் தேசிய அலையையும் தமக்கான பலமாகக் கொண்டு தங்களுடைய அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள கூட்டமைப்பின் பிற உறுப்பினர்கள் சிந்திக்கிறார்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.