புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 
கூட்டமைப்பின் இரட்டை

கூட்டமைப்பின் இரட்டை

வேடத்தை அம்பலப்படுத்திய

கிளிநொச்சி மாநாடு

கடந்த 19 ஆம் திகதி கரைச்சி (கிளிநொச்சி) பிரதேச சபை மண்ட பத்தில் தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் யாழ். மாவட்டப் பாரா ளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் ஏற்பாட்டில் ஜனநாயக அடிப்படை யில் அரசியல் சமூக உரிமைகளை வென் றெடுப்பதற்கான விழிப் புணர்வுக் கருத் தரங்கு நடைபெற் றது. அதில் அதிகாரப் பகிர்வூ டாக இனப்பிரச்சினைக்கான தீர்வு என்னும் தலைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திர னும் தேசியப் பிர ச்சினையும் 13வது அரசியலமைப் புத் திருத்தமும் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையா ளர் குமார வடிவேல் குருபரன் அவர் களும், இனப்பிரச்சினையும் மனித உரிமைகளும் தொடர்பில் கே. தயாபரனும் உரையாற்றியிருந்தனர். அத்துடன் இந்த விடயங்கள் தொடர்பாக அங்கு சமுகமளித் திருந்த தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா சம்பந் தனும் உரையாற்றியிருந்தார்.

இந்த நிகழ்வில் இனப்பிரச் சினைக்கான தீர்வு தொடர்பாகவும் விசேடமாக அதிகாரப் பகிர்வு ஊடாக சுயநிர்ணய உரிமையை அடைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பாகவும் பேச்சாளர்களால் முன்வைக்கப்ப ட்ட வாதப் பிரதிவாதங்கள் பற்றி எமது கவனத்தைச் செலுத்துவதே இப்பத்தியின் நோக்கமாகும்.

இவ்விடயம் தொடர்பாக முத லில் உரையாற்றிய சுமந்திரன் தனது உரையில், தமிழ் இனம் இலங்கைத் தீவில் ஒரு தேசமாக தமக்கென ஒரு நிலப்பரப்பில் காலம் காலமாக வாழ்ந்து வந்தவர் கள் என்ற விடயம் பற்றியும், அவ் வகையானதொரு தமிழ் பாரம் பரியத்திற்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கின்ற அங்கீகாரம் குறிப் பாக இலங்கைத் தீவில் வாழும் தமி ழர் சர்வதேச சட்டத்தின்படி சுயநிர்ணய உரிமைக்கு உரித்தா னவர்கள் என்றதொரு தெளிவான விளக்கத்தையும் கூறியிருந்தார்.

சுயநிர்ணய உரிமையை இன் றைக்கு எப்படி தமிழ் இனம் பிர யோகிக்கலாம் என்பதனைப் பற்றியும் விளக்கினார். குறிப்பாக சுயநிர்ணய உரிமையின் அடி ப்படையில் ஓர் தனி நாடாகவும் இருக்கலாம். அதேபோன்று தமிழர் சிங்களவர்களுடன் சுயநிர்ணய உரிமையை பிரயோகிக்கும் வகையில் ஒரு பொது நாட்டுக்குள் வாழலாம் என்றும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு கருத்துக்களை முன் வைத்து இறுதியில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

சுயநிர்ணய உரிமையை எப்படி அனு பவிப்பது என்று அவர் கேள்வி யெழுப்புகின் றார். தனியாகப் பிரிந்து ஒரு நாடாக உபயோ கிப்பதா? அல்லது இருக்கின்ற ஒரு நாட் டுக்குள்ளேயே ஆட்சி அதிகாரங்களை உப யோகிப்பதா? தனியாகப் பிரிந்து ஒரு நாட்டை உரு வாக்குவதன் மூலம் மட்டுமேதான் சுயநிர்ணயத்தை அடையலாம் என்று சர்வதேச சட்டம் கூறவில்லை.

ஒரு நாட்டுக்குள் இருக்கும் ஆட் சிய திகாரங்களை உபயோ கிப்பதன் மூல மும், அதற்கான ஓர் முறையை உரு வாக்கு வதன் மூலமும் சுய நிர்ணய உரி மையை அனுபவிக்க முடியும் என்று சர்வதேச சட்டம் கூறுகின்றது. அப்படியாக செய்கின்றபோது அதனை அதிகாரப் பகிர்வு என்று வர்ணிக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றார். ஒரு நாடாக இருக்கின்ற காரணத்தினால் சில அதிகாரங்கள் மத்திக்கு மட்டும் உரியதாக இரு க்கும். அதாவது ஏற் கனவே இருக்கின்ற அதி காரங்களை மத்திக்கும் பிரதேசங் களுக்கும் இடையில் பகிர்ந்துகொள் வது என்ற அடிப்படை யிலான கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஆகை யினாலே, அதிகாரப் பகிர்வு மூலம் சுயநிர்ணய உரிமையை உள்ளகமாக (ஒரு நாட்டுக்குள்) பிர யோகிக்கலாம் என்பது சர்வதேச சட்டத்தின் ஒரு நியதியாக உள்ளது என்றும் குறிப்பிட் டுள்ளார். இவ்விடத்தில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடுமாறுகின்றது.

சுயநிர்ணய உரிமையை நடைமுறையில் தனிநாடு ஒன்றை உருவாக்குவதன் மூலம் மட்டும்தான் அனுபவிக்கலாம் என்று சர்வதேச சட்டங்கள் எதிலும் கூறப்படவில்லை. அதேவேளை ஏற்கனவே நடைமுறையில் உள்ள நாடொன்றினுள் மட்டுமேதான் சுயநிர்ணய உரிமை பிரயோகிக்கப்படல் வேண்டுமென்றும் எந்தவொரு சர்வதேச சட்டத்திலும் கூறப்படவில்லை.

தமிழ் பிரதேசத்தையும் சிங்கள பிரதே சத்தையும் எடுத்துக் கொண்டால் தமிழ்ப் பிரதேசத்துக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இருக்கக் கூடிய அதிகா ரங்களில் சிங்கள மக்களுடன் பேசி என்ன என்ன அதிகாரங்களை நாம் ஒவ்வொருவரும் விட்டுக்கொடுத்து, அதனூடாக ஓர் மத்திய அரசாங்கத்தை உருவாக்கப் போகின்றோம் என்பதே எமக்குரிய ஒரே தெரிவாகும்.

அதிகாரப் பகிர்வு எனக் கூறிக்கொண்டு சுயநிர்ணய உரிமையை அடைய முடியா தென்பது மட்டுமல்ல, சுயநிர்ணய உரிமையை நாமாகவே விரும்பி கைவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம். சிலரைப் பொறுத்துவரையில் ஒரு நாட்டுக்குள் எமது பிர தேசத்தில் எம்மை நாமே நிர் வகிப்பதற்கான அதிகாரம் கிடைத்தால் போதுமென கருதுகின்றனர். ஆனால் அந்த அதிகாரம் கேட்டுப் பெறுகின்ற வழிமுறையூடாக கிடைக்குமாகவிருந்தால், அந்த அதிகாரத்தை வழங் குபவர்கள் தாம் விரும்பும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது சம்மதமின்றியே திரு ம்ப பறித்துக்கொள்ள முடியும். கேட்டுப் பெறும் (அதிகாரப் பகிர்வு) பொறிமுறைக்கு நாம் சம்மதித்தால், அதிகார த்தை பகிர்ந்து தருபவர்கள் அதனை எந்த நேரத்திலும் மீளப் பறித்து கொள்வதற்கான அதிகாரத்தையும் உரிமையை யும் நாமாகவே அங்கீகரிப்ப தாக அமையும்.

சுயநிர்ணய உரிமையின் அடிப்ப டையில் எட்டப்படும் தீர்வானது சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எட்டப்படும் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே அமையும். அவ்வாறு எட்டப்படும் இணக் கப்பாடானது சர்வதேச சமூகத் தின் அங்கீ காரத்துடன் எட்டப் படல் வேண்டும். இவ்விணக்கப் பாட்டினை சிங்கள மக்கள் ஒரு தலைப்பட்சமாகவும் தமிழ் மக்க ளின் நலன்களை நசுக்கும் வித மாகவும் மீறினால் தமிழ் மக்கள் தமது பிறப்புரிமையான சுயநிர் ணய உரிமை அடிப்படையில் தனியாக பிரிந்து செல்ல முடியும் என்பதை சர்வதேச ஒழுங்குகள் அங்கீகரிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினர் கிளிநொச்சியில் தாம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் தமது கருத்துக்களூடாக தமிழ் மக்களை திசை திருப்ப முற்பட் டனர். எனினும் அந்த கருத்தரங் கில் கருத்துரை வழங்கிய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளரும் சட்டத்தரணி யுமான குமாரவடிவேல் குருபரன் மேற்படி கூட் டமைப்பினரது உரையில் காணப்பட்ட தவ றான கருத்துக்களையும் கொள்கை விளக்கங்களையும் சுட்டிக்காட்டி சரியான கருத்துக் களை மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் ஆணித்தரமாக வும் விளக்கியிருந்தமை வர வேற்கத்தக்கது.

அதற்கும் மேலதிகமாக குருபரன் அவர்களுக்கு கருத் துரை வழங்குவதற்காக வழங்கப்பட்டிருந்த தலைப்பின் கீழ் அரசியலமைப்பின் 13வது திருத்தத் தினடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் தொடர்பாக அவருடைய கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 13வது திருத்தச் சட்டத்தினை நியாயப்படுத்த முற்பட்டனர். அதிகாரப் பகிர்வைவிடவும் மிகவும் குறைந்ததான அதிகாரப் பரவலாக்கல் அடிப்படையில் உருவான 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை குருபரன் நிராகரித்து கருத்துரையாற்றிய போது கூட்டமைப்பினர் ஏற்க மறுத்தனர்.

அதாவது நாங்கள் 13வது திருத்தச் சட்டத்தினை 1987 ஆம் ஆண்டிலிருந்தே நிராகரித்து வருகின்றோம். இது சம்பந்தமாக ராஜீவ் காந்திக்கு அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் ஆகியோருடன் நானும் கையொப்பமிட்டு எழுதிய கடிதத்தில் 13வது திருத்தச் சட்டத்தினை நாம் ஏன் நிராகரிக்கின்றோம் என்பதனை தெளிவாக விளக்கியிருந்தோம் என்று திரு. சம்பந்தன் கூறினார். மறுபுறத்தில் அவர் கூறுகின்றார் நாம் ஒரு விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதாவது குழந்தையை குளிப்பாட்டிய தண்ணீரை வீசும்போது தண்ணீருடன் குழந்தையையும் சேர்த்து வீசக்கூடாது என்றும் கூறியுள்ளார். அதாவது 13 வது திருத்தத்தில் குறைபாடுகள் இருக்கலாம். அதில் எமது அபிலாஷைகள் அங்கீகரிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக அதை நாம் முற்றுமுழுதாக நிராகரிக்க கூடாதென்றும் நியாயப்படுத்த முற்பட்டார். 13வது திருத்தத்தை நிராகரிக்கின்றோம். ஆனால் தந்திரோபாயக் காரணங்களுக்காக அதனை நிறைவேற்றக் கோருகின்றோம் எனக் கூறும் கூட்டமைப்பினர் 13வது திருத்தத்தின் நன்மைகளை மெச்சிப் பேச வேண்டிய அவசியம் என்ன?

13வது திருத்தம் தொடர்பாக கூட்டமைப்பினர் கொண்டுள்ள நிலைப்பாட்டின் இரட்டைத்தன்மையையே இது காட்டுகின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.