கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11
SUNDAY MARCH 04, 2012

Print

 
உருத்திரகுமாரனை அமெரிக்கா கைது செய்யாமலிருப்பது ஏன்?

உருத்திரகுமாரனை அமெரிக்கா கைது செய்யாமலிருப்பது ஏன்?

அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வி

புலிகளின் சர்வதேச வலையமைப்பின் தலைவராக உருத்திரக்குமாரன் செயல்பட்டு வருகின்றார். அமெ ரிக்கா உருத்திரக்குமாரனை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் இருப்பது ஏன்? அவர் பல பயங்கரவாதச் செயல்களில் ஈடு பட்ட ஒரு சர்வதேச குற்றவாளி. அவரின் நிகழ்ச்சி நிரலுக்கே அமெரிக்கா இயங்கி வருகின்றது. அத்துடன் அவருக்கு அமெரிக்கா பாதுகாப்பும் வழங்கி வருகின்றது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அமெரிக்கா, விடுதலைப் புலிகளை மீண்டும் சக்தியூட்டி இலங்கைக்குள் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கே முயற்சிக்கின்றது.

வடக்கில் யுத்தம் நடைபெற்ற போது 3 இலட்சம் தமிழ் மக் களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாக வைத் திருந்த போது இலங்கை இராணுவமே அம்மக்களை மீட்டு பராமரித்து பாதுகாத்தது. அதற்காகவே அமெரிக்கா மனித உரிமை மீறலை இலங்கைக்கு எதிராக கொண்டு வந்துள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தம்புள்ளையில் நிர்மாணிக் கப்பட்ட வீடமைப்புத் திட்ட மொன்றை திறந்து வைத்த பின்னர் உரையாற்றுகையி லேயே மேற்கண்டவாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]