கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11
SUNDAY MARCH 04, 2012

Print

 
சரிகிறது மேற்குலகின் கனவு பின்வாங்குகிறது அமெரிக்கா!

இலங்கைக்கு ஆதரவு வழங்க மேலும் பல நாடுகள்;

சரிகிறது மேற்குலகின் கனவு பின்வாங்குகிறது அமெரிக்கா!

நாடு திரும்பிய அமைச்சர்கள் குழு ஜனாதிபதிக்கு விளக்கம்

சகல குற்றச்சாட்டுகளும் வெற்றிகரமாக முறியடிப்பு

ஜெனீவாவிலிருந்து நேற்று காலை நாடு திரும்பிய இலங்கைத் தூதுக்குழு நேற்று நண்பகலளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து நிலைமைகளை விளக்கியது.

இந்த சந் திப்பு தியத்தலாவையில் நடந்தது. ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப் பினர்களுக்கு தியத்த லாவையில் இடம் பெற்ற பயிற்சிப்பட்ட றையில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றிருந்த ஜனாதிபதியை அங்கு சென்று சந்தித்த அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரிசாத் பதியுதீன், அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடு களுடன் தமது பேச்சுக்கள் குறித்து விரிவாக விளக் கினர்.

புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் அவர்களின் சகபாடிகள் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளும் முயற்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் குறித்து தெளிவு படுத்திய அவர்கள், இலங்கையின் நேசநாடுகள் இந்தப் பிரேரணையை தோற்கடிக்க தமக்கு கைகொடுத்து உதவுவதாகவும் குறிப்பிட்டனர்.

ஜெனீவாவில் தாம் தங்கியிருந்த காலங்களில் தாம் மேற்கொண்ட பிர சாரங்கள், உலகத் தலைவர்களுடனும் முக்கியஸ்தர் களுடனான சந்திப்புகள் குறித்து அவர்கள் விபரித்தனர். ஜெனீவா சென்றிருந்த அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா, ரிஷாட் பதியுதீன், பிரதிய அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உட்பட தூதுக் குழுவின் தலைவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் உயர் அதிகாரிகள் நேற்று நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் தமது பயணம் குறித்தும் மேற்கோண்ட சந்திப்புகள் குறித்தும் திருப்தி வெளியிட்டனர்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜெனீவா பயணம் தொடர்பாக தினகரன் வாரமஞ்சரிக்கு கூறியதாவது:

ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கான அமர்வில் மேற்குலக நாடுகளும் புலம்பெயர் தமிழர் அமைப் புக்களின் பிரதிநிதிகளும் பல்வேறு கேள்விக் கணை களைத் தொடுத்தனர். அவற்றுக்கெல்லாம் நாம் உரிய பதில்களை வழங்கினோம். இலங்கை பற்றிய தவ றான அபிப்பிராயங்களையும் நாம் மேற்கொள்ளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்தி னோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமுல்படுத்துவதில் கால அவகாசம் தேவை என்பதைத் தெரிவித்தோம் என்றார். ஜெனீவா பயணம் அமெரிக் காவின் சதிமுயற்சிகளை முறியடிப்பதற்கான களத்தை உருவாக்கியிருப்பதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார். இதேவேளை இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்ட சகல குற்றச்சாட்டுகளும் வெற்றிகரமாக முறியடிக் கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அனைத்துலக மன்னிப்புச் சபை உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங் கள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பல நாடுகள் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]