புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 

முனி 3ஆம் பாகத்திற்கு தயாராகி வரும் ராகவா லாரன்ஸ்

முனி 3ஆம் பாகத்திற்கு தயாராகி வரும் ராகவா லாரன்ஸ்

கொலிவுட்டில் முனி 2ம் பாகம் வெற்றி பெற்றதையடுத்து முனி 3ம் பாகத்தை இயக்க ராகவா லாரான்ஸ் தயாராகி வருகிறார்.

ராகவா லாரன்ஸ், ராஜ் கிரண் நடித்த முனி திரைப்படம் கொலிவுட்டில் வெற்றி பெற்றது.

இதையடுத்து ராகவா லாரான்ஸ், காஞ்சனா என்ற பெயரில் முனி 2ம் பாகத்தை இயக்கினார். காஞ்சனாவில் கோவை சரளா, லட்சுமி ராய், சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

காஞ்சனா திரைப்படமும் ரசிகர்களிடையே பலமான வெற்றியடைந்ததை அடுத்து முனி 3ம் பாகத்தை இயக்க உள்ளார்.

முனி 3ம் பாகத்தில் தனது தம்பியை அறிமுகப்படுத்த உள்ளார். ராசியான நடிகை என்பதால் மீண்டும் லட்சுமி ராயை முனி 3 ல் நடிக்க ஒப்பந்தம் செய்ய உள்ளார்.

முனி 3 குறித்து லாரன்ஸ் கூறுகையில், காஞ்சனா மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது ராகவேந்திரர் அருளாள் தான். ராகவேந்திரர் கோயிலைக் கட்டிய பிறகு என் வாழ்க்கை நல்ல விதமாக போய்க்கொண்டிருக்கிறது. என் வெற்றிகளை ராகவேந்திரருக்கு அர்ப்பணிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.