கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11
SUNDAY MARCH 04, 2012

Print

 
கோச்சடையானில் நடிக்கிறார் நாகேஷ்

சினி பஜார் கேள்வி - பதில்
 

வர்ஷினி

கே. செல்வா

வத்தளை

கேள்வி: உங்களை அக்கா என்று அழை த்தால் உங்களுக்கு கோபம் வருகிறது அப்போ ஆன்ரி என்று அழைக்கவா?

பதில்: வேணாம்... வேணாம்... நான் அழுதுடுவேன்....!
 

எஸ்.சியாமளா

யாழ்ப்பாணம்

கேள்வி: ரஜினிகாந்த் பாணியில் பஞ்ச் டயலாக் ஒன்று சொல்லுங்களேன்?

பதில்: கண்ணா நான் தப்பானதுக்கு குறி வைக்கிறதில்லை, குறிவச்சா அது தப்புற துமில்லை ஹா...ஹா... ஹா...! இது எப்படி இருக்கு!
 

எம். சிவா

நீர்கொழும்பு

கேள்வி: படங்களுக்கு தலைப்பை எப்படி தேர்வுசெய்கிறார்கள்.

பதில்: ஒரு படத்தின் கதைக்கு ஏற்ப சில சில இயக்குனர்கள் தலைப்பு எளிதில் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தலைப்பு வைப்பார்கள். ஆனால் ஒரு கதைக்கு ஒரு தலைப்பு வைக்க இயக்குநர்கள் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்வார்கள்.

ஓர் உதாரணம், இயக்குநர் பேரரசு தான் இயக்கிய, “திருப்பாச்சி” “சிவகாசி” “திரு ப்பதி” போன்ற படங்களுக்கு பலநூறு தலைப்புகளை யோசித்து வைத்திருந் தாராம் “திருப்பாச்சி” படத்துக்கு “கிரி வலம்”, “வதம்” உட்பட பல தலைப்பு களை யோசித்து அதில் இறுதி வடிவம் பெற்ற தலைப்புதான் “திருப்பாச்சி”
 

எம். எம் பாகக்

தெஹிவளை

கேள்வி: தமிழ் சினிமாவின் முதல் கவர்ச் சிக்கன்னி டி. ஆர். ராஜகுமாரி அவர்கள் எம்.ஜி ஆரை வைத்து படம் தயாரித் துள்ளாராமே! உண்மையா?

பதில்: உண்மைதான் தான் தொடங்கிய நிறுவனம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் , எம். ஜி. ஆர். சிவாஜி இணைந்து நடித்த ஒரே பட மான ‘கூண்டுக்கிளியை தயாரித்தது இவர் கள் தான் ‘குலேபகாவலி’ ‘பாசம்’ ‘பெரிய இடத்துப் பெண்’ ‘பணம் படைத் தவன்’ ‘பறக்கும் பறவை’ ஆகி யவை இவர்கள் தயாரித்த வெற்றிப் படங்களில் சில இவை எல்லாமே எம்.ஜி.ஆர் நடித்த படங்கள்.
 

எஸ்.தேவி

வத்தளை

கேள்வி: த்ரிஷாவின் அம்மா நடிக்க வர மாட்டாரா?

பதில்: நீங்கள் தயாரிப்பாளராக ரெடியா?
 

எம்.எம்.ஜீவா

வெள்ளவத்தை

கேள்வி: ‘மிருகம்’ ஆதி இப்போது நடித் துள்ள ‘அரவான்’ படத்தில் அவருக்கு என்ன கேரக்டர்?

பதில்: ‘வரிப்புலி’ என்ற கேரக்டரில் நடித்துள்ளார். வசந்தபாலன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆதி சிக்ஸ்பேக்
 

எஸ். கண்ணா

நுவரெலியா

கேள்வி: ‘மெளன குரு’ சரத்குமார் நல்ல வரவுதானே?

பதில்: சமுத்திரக்கனி ராதாமோகன், கரு பழனியப்பன், சீந்திரன் உட்பட பல இயக்குநர்கள் ‘மெளனகுரு’ இயக்குநர் சரத்குமாரை பாராட்டியிருக்கிறார்கள். முன்னணி ஹீரோக்கள் சிலபேர் தங்க ளுக்கு ஒரு படம் பண்ணித் தருமாறு கேட்டிருக்கிறார்கள். பாட்டு, சண்டை, காமெடி டிராக் என வழக்கமான மசா லாவை என்னால் அரைக்க முடியாது. புதுமுக ஹீரோவை மாஸ் ஹீரோவா என் பதை கதைதான் முடிவு செய்ய வேண் டும். என்கிற தெளிவான கருத்துள்ள இய க்குநர் அவர்.

இந்தப் பகுதிக்கு கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி

சினிபஜார் கேள்வி-பதில்

தினகரன் வாரமஞ்சரி

லேக்ஹவுஸ்

கொழும்பு-10


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]