கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11
SUNDAY MARCH 04, 2012

Print

 
இலங்கையில் மூன்றாவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் யஸ்மின்

இலங்கையில் மூன்றாவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் யஸ்மின்

பெண்கள் மத்தியில் கருத்தடை உபயோகத்தில் பிரபலம்பெற்று விளங்குகின்ற யஸ்மின் உட்கொள்ளும் கருத்தடை மாத்திரை இலங்கைச் சந்தையில் வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளமையைக் கொண்டாடும் வகையில் பெண்கள் மத்தியில் ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வை ஊக்குவிக்கும் முகமாக கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கை பொது வைத்தியர்கள் சங்கத்தின் வடமேல் மாகாணப் பிரிவின் உறுப்பினர்கள் சமுகமளித்திருந்த இந்நிகழ்வில் கருத்தடை முறைகளை உபயோகிப்பதன் அனுகூலங் தொடர்பில் கவனஞ் செயலுத்தப்பட்டது. கருத்தடை முறைகளை கிரமமாக உபயோகிப்பதன் மூலம் கிடைக்கப்பெறுகின்ற ஆரோக்கியம் மற்றும் சமுதாயம் தொடர்புபட்ட அனுகூலங்கள் மீதும் கவனஞ் செலுத்தப்பட்டது.

முறையான கருத்தடை முறைகளை உபயோகிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஆரோக்கிய மற்றும் சமுதாய அனுகூலங்கள் தொடர்பில் நாடெங்கிலுமுள்ள பொது மருத்துவர்கள் மத்தியில் அறிவூட்டலை மேற்கொள்ளும் நோக்குடன், யஸ்மின் வர்த்தகநாமத்தின் உரித்தாளர்களான கிayலீr சிலீalthணீarலீ ஜிharசீaணீலீutiணீals நிறுவனம் பொது மருத்துவர்களை இலக்காகக் கொண்டு திட்டமிட்டுள்ள பல செயற்பாடுகளில் முதலாவதாக இந்த கருத்தரங்கு அமையப் பெற்றுள்ளது.

2008 ம் ஆண்டில் இலங்கைச் சந்தையில் அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டிருந்த ஒரு உட்கொள்ளும் கருத்தரடை மாத்திரையான யஸ்மின் அதன் தனித்துவமான மருந்து கூட்டும் முறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் மூலம் பொதுவாக ஏற்படக்கூடிய எதிர்மறை பக்கவிளைவுகளை குறைந்தளவில் கொண்டுள்ளமை ஆகியவற்றினால் உலகளாவிய ரீதியில் சிறந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]