கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04
SUNDAY FEBRUARY 26, 2012

Print

 
அபிவிருத்தி திட்ட உதவியாளர்களாக நியமனம்

வேலையற்ற பட்டதாரிகள்:

அபிவிருத்தி திட்ட உதவியாளர்களாக நியமனம்

மலையகத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் வைபவம் கால்;நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இ.தொ.கா. வின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி யுடன் பேச்சுவார்தை நடாத்தி வேலை யற்ற மலையக பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை பெற்று கொடுக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 250 மலை யக வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

அபிவிருத்தித்திட்ட முகாமையாளர்கள் நியமனம் பெற்ற பட்டதாரிகள் நுவரெலியா கச்சேரி, மற்றும் நுவரெலியா, கொத் மலை, அம்பகமுவ, வலப்பனை, ஹங்கு ராங்கெத்த ஆகிய பிரதேச செயலாளர் அலுவலகங்களில் பணியில் அமர்த்தப் படவுள்ளதுடன், நுவரெலியா மாவட்ட மற்றும் பிரதேச முகாமைத்துவ செயற் திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் ஆய்வு தரவுகள் சேகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இந் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இந்த வேலை வாய்ப்பு சமூக நலன் கருதி பெற்றுக் கொள்ளப்படும் ஒன்றாகும். இதனை யாரும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. சமூக நலன் கருதி செயல்பட வேண்டும். வேறு வேலை கிடைத்தவுடன் அதற்;கு தாவி விடக்கூடாது. இதனால் மலையகத்தில் படித்த இளைஞர் யுவதிகளே பாதிக்கப்படுவர்.

ஆசிரியர் நியமனம் பெற்ற பலர் பல அரசாங்க தொழிலிருந்து வெளியேறி யுள்ளனர். இதனால் 300க்கு மேற்பட்ட அரச நியமனங்கள் வீண்விரயம் செய்யப்;பட்டுள்ளன. உங்களுக்கு கிடை க்கும் தொழிலைக் கொண்டு மேலும் பல உயர் பதவிகளை வகிக்க முடியும். அதற்கு உங்கள் தகைமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மலையகத்தில் படித்த அனைவரும் இதனைக் கடைபிடிக்க வேண்டும். அப் போதுதான் மலையகம் உயரும். அதன் கல்வி நிலையும் மாறும். இன்று மலை யகத்தில் எத்தனையோ பேர் பல அரச தனியார் நிறுவனங்களில் நிறைவேற்று அதிகாரிகளாக காணப்படுகின்றனர். அதற்கு அவர்களின் விடாமுயற்சியே காரணம். சிலர் வெளிநாட்டு புலமைப் ;பரிசில் பெற்று மேற்படிப்பிற்காக சென்று ள்ளனர். அதற்கு உங்கள் கல்வி தகைமை மாத்திரமல்லாது அரச சேவை பரீட்சைகளில் சித்தியெய்து உயர் பதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இன்று அமைச்சுகளில் தமிழ் மொழி மூலமான செயலாளர் பதவியில் மலை யக வரலாற்றில் கலாநிதி பிரதாப் இரா மானுஜம், சட்டத்தரணி கா. மாரிமுத்து போன்றோரைத் தவிர வேறு எவரும் இல்லாத நிலையில் பாரிய வெற்றிட மொன்று காணப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும். அதனை பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் என்னால் செய்ய முடியும்.

எனவே அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு இச்சந்தர்ப்பத்தில் திடசங்கற்பம் கொள்ள வேண்டும். நீங்கள் நியமனம் பெற்ற பிறகு காரி யாலயங்களில் தகைமையான வேலைகளை மாத்திரம் செய்யவும். தகைமை யற்ற வேலைகளை செய்ய வேண்டாம். அப்படி நிர்ப்பந்திக்கப்பட்டால் என்னிடம் கூறவும். அதே போல் தோட்டத் துறையைச் சார்ந்தவர்கள் சேவைகளை பெறுவதற்கு உங்களிடம் வந்தால் அவர்களை உயர்வாக கவனிக்க வேண்டியது உங்களது கடமையாகும்.

நிகழ்வில் பொருளாதார பிரதி அமை ச்சர் முத்துசிவலிங்கம் உட்பட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டதரணியுமான பெ. ராஜதுரை, மத்திய மாகாண உறுப ;பினர் எம். உதயகுமார் ஆகியோர் பட்ட தாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]