புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

* “வித்தி”யாசமான காய்நகர்த்தல்!

ஆங்கிலத்தில் கண்ணாடியை வைத்திருக்கும் ஒரு பத்திரிகை நிறுவனம் தமிழிலும் ஒரு பத்திரிகையை வெளியிட வேண்டுமென்று ஒற்றைக்காலில் நிற்கிறது. நல்ல ஆசிரிய குழாம் இல்லாமையால் காலம் தள்ளித் தள்ளிப் போகிறது. இப்ப தமிழுக்கு “குரல்” கொடுத்து வந்த குழாம் கூட்டத்தோட கிளம்பிச் செல்லத் தயார் எண்டு பச்சைக் கொடி “காட்டியுள்ளதால் ஆரம்பிக்கும் பணிகளில் தீவிரம் ஏற்பட்டுள்ளது. “குரல்” காரரை போக விடாமல் தடுக்க “வித்தி” யாசமான முறையில் “வித்தி” யாசமான காய்களும் நகர்த்தப்படுகிறதாம். “இரண்டு” பேரை மட்டும் வைத்து பேப்பர் செய்ய முடியாது எண்டு தெரிய வந்ததால “குரல்”காரருக்கு இப்ப இரண்டு பக்கத்திலயும் டிமாண்ட் தேடி வருகுதாம். பொறுத்திருந்து பார்ப்பம் “இரண்டு” பேரா, கூட்டமாகச் செல்வோரா அல்லது தேவையில்லாது மூக்கை நுழைக்கும் “வித்தி” யாசமானவரா வெல்வது எண்டு!

* சர்வதேசத்தை திரும்பிப் பார்க்கவைக்க வேண்டும்!

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அனைத்துமே பொய் என்பதை அரசாங்கம் ஜெனீவாவில் நிரூபிக்கும் அதேவேளை, அதனைப் பொய், வேண்டுமென்று சோடிக்கப்பட்ட செயல் என்பதை பறைசாற்றும் வகையில் மக்கள் நாளை நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். உள்நாட்டிலுள்ள சிலர் இனியாவது எட்டப்பன் வேலையைச் செய்யாது இந்த மக்கள் பேரணியில் நாட்டுப்பற்றுடன் இணைந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஒருசில தமிழ் அரசியல்வாதிகளுக்கும், ஒரு சில ஊடகவியலாளர்க ளுக்குமே இந்த வேண்டுகோள்!

* குருவிச்சைகளை வெட்டி அகற்றி விட வேண்டும்!

முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டால் சந்தோசப்பட பலர் காத்திருக்கின்றனர். ஆனால் அது ஒரு அசைக்க முடியாத மரம் என்பதில் தலைமை உறுதியாக உள்ளது. அதனால்தான் வாடிய கிளைகள் காற்றடிக்கும் போது விழுந்து வருவதாக அவர்கள் துணிவுடன் தெரிவிக்கிறார்கள். உண்மைதான், ஆனால் மரம் வாடிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மரத்தில் குருவிச்சைகள் படர்வது தெரிந்தால் உடனேயே வெட்டி அகற்றிவிட வேண்டும். தானாக வாடி விழட்டும் என எல்லாத்தையும் நினைத்தால் அது ஒரு நாளைக்கு மரத்தையே வாடிக்காய்ந்து போக வைத்துவிடும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.