புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின்

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின்

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு

கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது 70 ம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இவ்வாண்டு ஜூன் 1ம் 2ம் 3ம் 4ம் திகதிகளில் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு ஒன்றை "தமிழ் இலக்கியமும், சமூகமும்- இன்றும், நாளையும்" என்ற தொனிப் பொருளில் நடத்தவுள்ளது. முதல் மூன்று நாட்களிலும் மாநாட்டுத் தொனிப் பொருளுக்கு அமைவா ஆய்வரங்குகளும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறும். நான்காம் நாள் சென்னை பாரதியார் சங்கமும் கொழும்புத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் "பாரதி விழா" இடம்பெறும்.

மாநாட்டு ஆய்வரங்குகளில் சமர்ப்பிப்பதற்கு சிறுவர் இலக்கியம், புனைகதை, கவிதை, கட்டுரை, ஆவணப்படுத்தல், மொழிபெயர்ப்பு இலக்கியம், விமர்சனம், செவ்விதாக்கம், நிகழ்த்துகலைகள், இலக்கிய கோட்பாடுகள், பெண்ணியம், இதழியல், இணையமும் வலைப்பதிவுகளும் முதலான விடயங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வாளர்களிடம் இருந்து கோரப்படுகின் றன.

ஆய்வரங்குகளில் பங்குபற்ற விரும்பும் ஆய்வாளர்கள், தாம் சமர்ப்பிக்க விரும்பும் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கத்தை 300 சொற்களுக்கு மேற்படாதவாறு கணினியில் தட்டச்சு செய்து 2012 ஏப்ரல் 15ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடிய வகையில் மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். தெரிவு செய்யப்படும் ஆய்வுச் சுருக்கங்களின் முழுவடிவம் 2012 மே 15ம் திகதிக்கு முன்னர் எமக்கு மின்னஞ்சல் செய் யப்பட வேண்டும்.

மாநாட்டு சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்படவுள்ளது. இம்மலருக்கு கட்டுரை சமர்ப்பிக்க விரும்புவோர் மாநாட்டின் தொனிப்பொருளுக்கு அமைய மேற்குறிப்பிடப்பட்ட விடயப் பரப்புகளில் ஏதாவதொன்றைத் தெரிவு செய்து எழுதலாம். 2012 ஏப்ரல் மாதம் 25ம் திகதிக்கு முன்னர் கட்டுரைகள் எமக்குக் கிடைக்கக்கூடியதாக கணினியில் தட் டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

மாநாட்டில் பேராளராகக் கலந்து கொள்ள விரும்புபவர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பேராளர் கட்டணத்தையும் செலுத்தி, அதற்கான பற்றுச்சீட்டையும் இணைத்து 2012 ஏப்பிரல் 15ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

பேராளர் கட்டணமாக இலங்கைப் பேராளர்கள் தலா 1500 ரூபாவும் வெளிநாட்டுப் பேராளர்கள் தலா 25 அமெரிக்க டொலரும் செலுத்த வேண்டும்.

பேராளர்களுக்கு மாநாடு நடைபெறும் நாட்களில் உணவு, தேநீர் போன்றவற்றுடன் மாநாட்டு சிறப்புமலர், ஏனைய வெளியீடுகள், கோப்பு ஆகியவை அடங்கிய பொதியும் வழங்கப்படும். ஆவ்யாளராக கலந்து கொள்ள விரும்புபவர்களும் பேராளர்களாகச் சேர்ந்து கொள்ள வேண்டும்.

பேராளர் விண்ணப்பங்கள், ஆய்வுச் சுருக்கங்கள், கட்டுரைகள் என்பவற்றை அனுப்ப வேண்டிய முகவரி:

இலக்கியக் குழுச் செயலாளர்

கொழும்புத் தமிழ்ச் சங்கம்

7,57 வது ஒழுங்கை,

கொழும்பு 06, ஸ்ரீலங்கா

மின்னஞ்சல் முகவரி :
[email protected] 

மேலதிக தொடர்புகளுக்கு:-

தொலைபேசி இலக்கம் +94 778 956 761

விண்ணப்ப படிவங்களை சுயமுகவரியிட்ட முத்திரை ஒட்டிய (நீண்ட) கடித உறை ஒன்றை அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்களை தமிழ்ச் சங்கத்தின் www.colombotamilsangam.com  என்ற இணையத்தளம் மூலமும் பதிவிறக்கம் செய்யலாம்.

2012 ஜுன் 1, 2, 3, 4 ம் திகதிகளில் நடத்து உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பங்குபற்றுவதற்கான பேராளர் விண்ணப்பப் படிவம்

1. முழுப்பெயர்:

2. ஆண்/பெண்:

3. பிறந்த திகதி:

4. பிறந்த இடம்:

5. தற்போதைய வதிவிடம்:

6. தொடர்பு முகவரி:

7. தொலைபேசி எண்:

8. செல்லிடத் தொலைபேசி எண்:

9. மின்னஞ்சல் முகவரி:

10. ஈடுபாடுள்ள துறைகள்:

11. ஈடுபாடு கொண்ட துறைகளில் பெற்ற அனுபவங்கள்/வெளியிட்ட நூல்கள்/பரிசுகள்/கெளரவங்கள்

* தேவையேற்படின் மேலதிக தாள்களை உபயோகிக்கவும்

12. விழாவில் எவ்வகையில் பங்குபற்ற விரும்புகிaர்கள்? ஆய்வாளர்/பார்வையாளர்

13. விண்ணப்பப் படிவத்துடன் சமீபத்திய புகைப்படம் ஒன்றையும் இணைக்கவும்

14. தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு எண்:

15. கையொப்பம்:

இலங்கை பேராளர் கட்டணம்:

வெளிநாட்டு பேராளர் கட்டணம்:

25 அமெரிக்க டொலர்

கட்டணத்தொகை வங்கியில் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டின் பிரதியை விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும் வங்கிக் கணக்கு இல:

1100014906, கொமர்ஷல் வங்கி,

வெள்ளவத்தை (SWIFT CODE - CCEYLKLX)

மாநாடு சம்பந்தமான தொடர்புகளுக்கு:

இலக்கியக்குழுச் செயலாளர்

கொழும்புத் தமிழ்ச் சங்கம்

7,57 வது ஒழுங்கை, கொழும்பு-06, ஸ்ரீலங்கா

தொலைபேசி இலக்கம் +94 778 956 761

மின்னஞ்சல்முகவரி:
[email protected]

ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன்

பொதுச் செயலாளர்

கொழும்புத் தமிழ்ச் சங்கம்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.