புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 
மீலாத் சன்மார்க்க அறிவுப் போட்டி பரிசளிப்பு விழா

களுத்துறை மாவட்ட அஹதியா சம்மேளனம் நடத்திய

மீலாத் சன்மார்க்க அறிவுப் போட்டி பரிசளிப்பு விழா

களுத்துறை மாவட்ட அஹதியா சம்மேளனத்தின் 11வது வருட மீலாத் சன்மார்க்க அறிவுப் போட்டி பரிசளிப்பு விழா பேருவளை சீனன்கோட்டை அல்-ஹ¤மைஸரா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

சீனன்கோட்டை அஹதியா சங்கத்தின் பூரண பங்களிப்புடன் நடைபெற்ற இவ்விழாவுக்கு சீனன்கோட்டை பள்ளிச் சங்க தலைவரும் சவூதி அரேபியாவுக்காகன முன்னாள் இலங்கை தூதுவருமான தேசபந்து நெளபல் எஸ். ஜாபிர் தலைமை வகித்தார்.

இந்த விழாவினை முன்னிட்டு சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில் சுப்ஹான மெளலூத் நாட்டின் சுபீட்சத்திற்காக துஆப் பிரார்த்தனை மஜ்லிஸ் ஜாமியத்துல் பாஸிய்யா கலாபீட உப அதிபர் மெளலவி எம்.அஸ்மிகான் (முஅய்யதி) தலைமையில் நடைபெற்றது.

பள்ளிச் சங்க இணைச் செயலாளர் அரூஸ் அனஸ், சீனன்கோட்டை அஹதியா சங்க தலைவர் கலாநிதி தேசமான்ய எம். இஸட்.எம். நிஸார், மாவட்ட அஹதியா சம்மேளன தலைவர் எம்.எச்.எம். உவைன், செயலாளர் எம்.ஏ.எம். இமாம்தீன் உட்பட பலரும் பங்குபற்றினர்.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள 17 அஹதியா பாடசாலைகளில் கல்வி பயிலும் 4000 சிறுவர்களிடையே தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியீட்டியோருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

ஈரான் தூதரக கலாசாரப் பகுதி கவுன்சலர் மஹ்தி ஜி.ருக்னி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களது நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன. முதலாவது பரிசளிப்பு நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். யூஸ¤ப், எம்.எம்.எம். அம்ஜாத், பிரதேச செயலாளர் தம்மிக்க ராஜபக்ஷ, பேருவளை பெளத்த பாதுகாப்புச் சங்க தலைவர் வலதர சுபூதி தேரோ, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.

வலதர சுபூதி தேரோ பிரதேச செயலாளர் தம்மிக்க ராஜபக்ஷ ஆகியோருக்கு புனித அல்-குர்ஆனின் சிங்கள மொழி பெயர்ப்பினை களுத்துறை மாவட்ட அஹதியா சம்மேளன தலைவர் எம்.எச்.எம். உவைன் வழங்கினார்.

இரண்டாம் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம், பேருவளை நகர பிதா மில்பர் கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதியாகப் பங்கு பற்றிய ஈரான் தூதரக கலாசார கவுன்சலர் மஹ்தி ஜி. ருக்னி உரையாற்றும் போது, உலகில் வாழும் 150 கோடிக்கு மேலான முஸ்லிம்கள் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை ஒரே தலைவராக ஏற்றுள்ளனர்.

இறைத் தூதர் காட்டிய சீரான நேரான வழியை நாம் முழுமையாகப் பின்பற்றி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.