புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 
தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருமித்து செயற்படுவதே தீர்வுக்கு ஒரே வழி

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருமித்து செயற்படுவதே தீர்வுக்கு ஒரே வழி

நாவலர் மசூர் மெளலானா அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று நாயகர். ஒப்பற்ற சிறப்பியல்புகள் கொண்ட மாமமனிதர். அரசியலிலே, சமூக சேவையிலே, அவரது பங்கும் பணியும் சிறப்பு மிக்கது. தமது சீரிய கருத்துக்களை செந்தமிழிலே இனிக்கப் பேசும் வல்லமை பெற்றவர். அவர் பேசும் கூட்டங்களிலே மக்கள்  நிரம்பி வழிவர். தமக்கேயுரித்தான கணீரென்ற குரலிலே மேடைகளில் பேசி கேட்போரை வசப்படுத்தும் காந்த சக்தி அவருக்கேயுரிய சிறப்பியல்பு. இப்பெரியார் தமிழ் மொழியிலே தணியாத தாகம் கொண்டவர். சன்மார்க்கம் பேணி வாழ்ந்து வருபவர். தாம் சார்ந்த இனத்துக்கும் தமது பிரதேசத்துக்கும் அளப்பரிய சேவை செய்தவர். அதி உயர்ந்த பதவிகளில் அமர்ந்து அரும்பணி செய்தவர். முஸ்லிம்கள் மீது மட்டுமன்றி தமிழ், சிங்கள மக்கள் மீதும் அன்பும் பெருமதிப்பும் கொண்டு பணியாற்றியவர். தந்தை செல்வா உட்பட தமிழ்த் தலைமைகளோடு இணைந்து இனப் பிரச்சினை தீர்வுக்கு முஸ்லிம்கள் சார்பாக ஈடுபட்டவர். தற்போது இழுத்தடிக்கப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தமிழ்ப் பேசும் மக்களின் பரஸ்பர நல்லெண்ணம், ஒன்றுபட்ட செயல்பாடுகளின் மூலமே சாத்தியமாகும் என்பது அவரது கருத்தாகும்.

பெயர்: செய்யத் ஷெய்ன் முஹம்மட் மசூர் மெளலானா
கல்வித் தகைமை: மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி - ஆங்கில மொழி
இலங்கை சட்டக் கல்லூரியில் இரண்டு வருடம்
(தனிப்பட்ட காரணங்களுக்காக கல்வியைத் தொடர முடியாமற் போனமை)
வகித்த பதவிகள்: மேயர் - கல்முனை மாநகர சபை
உதவி மேயர் கல்முனை மாநகர சபை
பணிப்பாளர் ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபை
ஆங்கில ஆசிரியர் கொழும்பு ஸாஹிரா கல்லூரி
தலைவர் - கரைவாகு வடக்கு கிராம சபை
செனட் சபை உறுப்பினர்
ஹோட்டல் கூட்டுத்தாபன பிரதித் தலைவர்
வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
சதொச பிரிண்டர்ஸ் - பிரதித் தலைவர்
சென்னை இந்திய உயர்ஸ்தானிகராலயம் - முதலாவது செயலர்
தலைவர் - மத்திய கடல்சார் பணியகம்
நிறைவேற்றுப் பணிப்பாளர் - தேசிய வீடமைப்பு அதிகார சபை

கேள்வி: நீங்கள் செனட்டராக இருந்தீர்கள்? அது பற்றி கொஞ்சம் கூறுவீர்களா?

பதில்: கடந்த கால அரசியல் வரலாற்றுக்குச் செல்ல வேண்டியி ருக்கின்றது. சோல்பரி அரசியல் யாப்பின்படி பாராளுமன்றத்துக்கு மேல் சபையாக செனட் சபை ஒன்று உருவாக்கப்பட்டது. அரசியலை வழிநடத்தும் பல்துறை சார்ந்த புத்திஜீவிகள் செனட் சபையில் இடம்பெற்றனர். செனட் சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30இல் 15 பேர் ஆளுநராலும் ஏனையோர் பாராளுமன்றத்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாராளுமன்றம் தேர்ந்தெடுத்த செனட்சபை உறுப் பினராக சென ட்டர் மாணிக்கம் அவர்கள் விலகி யதன் பேரில் நான் தேர்ந்தெடுக்கப் பட்டேன். ஒன்றரை வருட காலம் அதில் நான் அங்கம் வகி த்தேன். அதன் பின் அச்சபை கலைந்து 1972ம் ஆண்டு ஸ்ரீமாவோ வின் அரசாங்கம் கொண்டு வந்த புதிய யாப்பில் செனட் சபை ஒழி க்கப்பட்டது. செனட் சபை உறுப்பினராக நான் இருந்த காலத்தில் என்னால் முடியுமான வரை அரசியலுக்கு பங்களிப்பு செய்ததோடு மக்கள் சேவையில் ஈடுபட்டேன்.

கேள்வி: இனப்பிரச்சினை உருவானதற்கான காரணங்களைக் கூறுவீர்களா?

பதில்:- நாடு சுதந்திரமடைவதற்கு முன்னே மொழிப் பிரச்சினை இருக்கவில்லை. தமிழ்ப் பிரதேசங்க ளிலே தமிழும் சிங்களப் பிரதே சங்களிலே சிங்களமும் கற்பிக் கப்பட்டும் பேசப்பட்டும் வந்தபோ தும் ஆங்கிலமே அரச மொழியாக இருந்தது. சிங்கள மக்களும் தமிழ் மக்களும் அரசியலில் ஈடுபடவும் உத்தியோகங்களைப் பெறவும் ஆங்கில மொழியைக் கற்று வந்த னர்.

அத்தகைய சூழ்நிலையிலே இனப்பிரச்சினை பற்றி யாரும் சிந்திக்கவில்லை. நாட்டின் சுதந் திரத்துக்கு சிங்களத் தலைவர்களுடன் தமிழ், முஸ்லிம் தலைவர்களும் இணைந்தே பாடுபட்டனர். ஆனால் சுதந்திரத்தின் பின் அரசியல் தலைவர்களின் மனப் போக்கில் மாறுதல் ஏற்பட்டது. சுதந்திரத்திலும் பெரும்பான்மையோருக்குத் தான் உரியதென்றவாறாக அரசியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. கடும் போக்காளர்களின் கையிலே அரச அதிகாரிகளும் இருந்த காரணத்தினால் படிப்படியாகத் தமிழ்ப்பேசும் மக்கள் புறக்க ணிக்கப்பட்டனர். சிங்கள மொழி க்குரிய அரசியல் அந்தஸ்து தமிழ் மொழிக்கு அளிக்கப்படவில்லை.

பிரஜாவுரிமை ரீதியாக மலையக மக்கள் பாதிக்கப்பட்டனர். கல் வித்துறையிலும் உத்தியோக வாய்ப்புகளிலும் சிறுபான்மை இனத்தவருக்கு சமசந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அபிவிருத்தி துறையிலேயே தமிழ்ப் பிரதேச ங்கள் இரண்டாந்தரமாக கணி க்கப்பட்டன. இத்தகைய நிலை யிலேதான் சிறுபான்மை இன த்தவர்கள் விழிப்புடன் செயற்படத் தொடங்கினர். செல்வாக்குப் பெற்றி ருந்த தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி.ஜி. பொன்னம்பலம் 50:50 கோரிக்கை முன்வைத்தார். எனினும் பயனளிக்க வில்லை. இன நலன் எனும் அடிப்படையில் தமிழ்க் காங்கிரஸின் தொய்வு நிலை கண்டு தந்தை செல்வா, டாக்டர் நாகநாதன், கு. வன்னியசிங்கம் அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் தமிழ் காங்கிரஸிலிருந்து விலகி தமிழரசுக் கட்சியை அமைத்தனர். சமஷ்டி அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியலுக்கு தீர்வு காணும் கொள்கையுடன் தந்தை செல்வா அந்தரங்க சுத்தியோடு செயற்பட்டார். அத்தகைய சமஷ்டி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கு கிடைக்கும் என உறுதியளித்தார். எனவே தான் அவரது நேர்மையான போக்கால் கவரப்பட்ட நான் தந்தை செல்வாவோடு இணைந்து முஸ்லிம்கள் நலனுக்காக அரசியல் செய்தேன்.

திருமலையில் நடந்த தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிலே தமிழ் மக்களுக்கு எவ்வாறான சுயநிர்ணய உரிமை அமையுமோ அவ்வாறான உரிமை முஸ்லிம் மக்களுக்கும், சமமாக அமையும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் காலப் போக்கில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் மாற்றங்கள் அத்தீர் மானத்தை சிதறடித்த போதும் பேரினவாத நடவடிக்கைகள் இனப்பிரச்சினையைப் பூதாகரமாக வன் முறையளவுக்கு கொண்டு வரக் கார ணமாயிற்று. தீர்க்க தரிசனத்தோடு சிறுபான்மையினரின் பிரச்சினை மனிதாபிமானத்தோடு கவனிக்கப்பட்டி ருந்தால் சமாதான மாகத் தீர்க்கப்பட்டிருந்தால் 30 ஆண்டு கால அழிவை நம் நாடு எதிர்நோக்கி இருக்காது. அன்றைய பிழையை இன்றைய ஜனாதிபதி காத்திரமாக உணர்ந்துள்ளார். அத னாலே தான் அவர் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து அளிக்க ஆவன செய்தார். எதிர்காலத்திலே நம்நாட்டு மக்கள் அனைவரும் மும்மொழி தெரிந்தவராக ஆகவேண்டுமென்ற இலட்சியத்தோடு, இலக்கோடு அரச நடவடிக்கைகள் அமைந்துள்ளன. சுய மொழி பற்றால் ஆங்கிலத்தைப் புறக்கணிப்போமானால் உலகில் நாம் தலை நிமிர்ந்து வாழ முடியாது. விஞ்ஞான தொழில்நுட்ப, அறிவியல் துறைகள் அனைத்தும் ஆங்கி லத்திலேயே உள்ளன. நம் எதிர்காலப் பிரஜைகள் அறிவியல் மேதைகளாக உருவாக ஆங்கிலம் கற்க வேண்டும். அதேவேளை அடுத்த வீட்டு மொழியாக தமிழ் பேசும் மக்கள் சிங்களத்தையும், சிங்கள மக்கள் தமிழையும் கற்க வேண்டும். பழை யவற்றை மாற்றி புதிய பாதையில் பல்துறை சார்ந்த அபிவிருத்திப் பாதையில் நாம் பயணிக்க வேண்டியது காலத்தின் தேவை.

கேள்வி: இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்புக்கும் மு.காவுக்குமிடையில் அடிக்கடி சந்திப்புகள் இடம்பெறுகின்றதே? இது தொடர்பாக நீங்கள் கருது வதென்ன?

பதில்: இது ஒரு நல்ல சகுனம். தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற, உரிமைகள் பெற அவர்கள் பாடுபட்டு வருகின்றனர். பல் வேறு காலகட்டங்களில் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண் டனர். தமிழ் மக்களைப் போன்று முஸ் லிம்களும் சிறுபான்மை மக்களே. சிறுபான்மையினரான முஸ்லிம்களும் தமது உரி மைக்காக செயல்பட வேண் டியவர்களே கொள்கையளவில் எமக்கும் உரிமை வேண்டும் என்று வாளாவிருப்பது பொரு த்தமற்றது.

மேலும் சிறுபான்மையினரான இரு சமூகங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்காமல், அதற்கான கொள்கைத் திட்டங்களை வகுக்காமல் வெவ்வேறாகச் செயற்படுவதால் பெற பெறவேண்டியவற்றைப் பெறுவதில் அசாத்தியமான நிலையே தோன்றும். எனவே தமிழ்த் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் தமது நிலைப்பாட்டை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு ஒன்றிணைந்த நல்லிணக்கத்துடன் செயற்படும் போது அது புத்திசாதுரியமாக அமையும்; பிரயோசனமுள்ளதாகவிருக்கும். ஆகவே தமிழ் முஸ்லிம் தலைவர்கள் இதய சுத்தியோடு ஒன்றிணைந்து இனப்பிரச்சினை தொடர்பாக செயற்பட வேண்டுமென்பதே என் தாழ்மையான கருத்தாகும்.

முஸ்லிம்களுக்கான ஒரு தனியலகுக் கோரிக்கை மர்ஹும் அஷ்ரப் காலத்திலிருந்தே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு- கிழக்கு ஒன்றிணைந்து இருந்த போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள தென்கிழக்குப் பிராந்தியத்தோடு வடபுலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சில பிரதேசங்களையும் உள்ளடக்கிய தனியலகுக் கோரிக்கை ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டது. இன்று நிலைமை மாறிவிட்டது. வடக்கும் கிழக்கும் பிரிந்துவிட்டன. இருந்த போதும் தீர்வென்று ஒன்று வரும் போது முஸ்லிம்களுக்கான தனியலகு ஒன்று சிறிதாகவோ பெரியதாகவோ அமையாவிட்டால் அது பின்னர் உருவாகப் போவதில்லை. அதிலே பல கஷ்டங்கள் இருக்கின்றன. எனவே தீர்வு அமையும் போது அம்பாறை முஸ்லிம் பிரதேசத்தை மையமாகக் கொண்ட முஸ்லிம்களுக்கான ஒரு தனியலகு அவசியமானதென்றே நான் கருதுகின்றேன். நாட்டின் நாலாபுறக்களிலும் வாழும் முஸ்லிம்கள் அரசியல் சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் போது அவற்றுக்கு நிவாரணம் பெற அதிகாரமுள்ள அரசியல் நிறுவனம் இருப்பது ஆரோக்கியமாகின்றது. அந்த வகையில் முஸ்லிம்களின் தனியலகுக் கோரிக்கை தீர்வுத் திட்டத்தின் போது கருத்திற் கொள்ளப்பட வேண்டியது.

கேள்வி: பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கு கெளரவமான ஒரு தீர்வை பெற்றுத்தருவேன் என்று ஜனாதிபதி கூறிவருகின்றார். அரசின் நிலைப்பாடும் அதுவாகத்தானிருக்கின்றது. கடும் போக்காளர்களின் குளறுபடிகளுக்கு மத்தியிலே ஜனாதிபதி இனப் பிரச்சினையை தீர்ப்பார் என்று நீங்கள் கருதுகின்aர்களா?

பதில்: சிங்கள தேசியம், தமிழ்த் தேசியம், முஸ்லிம் தேசியம் என்ற பாகுபாடு ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் இல்லை. மக்கள் அனைவரும் இலங்கையர் என்ற தேசியத்தின் கீழ் வாழவேண்டியவர்கள் - வாழ வேண்டும் என்பதே ஜனாதிபதியின் உயர்ந்த கருத்தாகும்.

இத்தகைய பொதுமைக் கருத்தும் கொள்கைகளும் சிலருக்கு அங்கீகரிக்க முடியாதவைகளாயி ருக்கலாம். ஆனாலும் அத்தகைய பொதுமை எண்ணம் தான் நாட்டில் சமாதானம் நிலைக்கவும் அபிவிருத்தி பெருகவும் நாடு செழிக்கவும் தேவை என்பதை ஜனாதிபதி காலத்துக்குக் காலம் வலியுறுத்தி வருகின்றார். கடும் போக்காளர்கள் சிலரின் குளறுபடிகளுக்கு மத்தியிலும் சிறுபான்மையின மக்கள் திருப்தி காணக்கூடிய மகிழ்ச்சியடையக் கூடிய பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை தன் பதவிக்காலத்தில் எடுத்துள்ளார். எனவே எத்தகைய முட்டுக்கட்டைகள் இருப்பினும் இனப்பிரச்சினைக்கு கெளரவமான தீர்வுத் திட்டத்தை ஆக்கவும் அமுல் நடத்தவும் ஜனாதிபதி தகைமை பெற்றவர் என்றே நான் கருதுகின்றேன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.