கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04
SUNDAY FEBRUARY 26, 2012

Print

 
விசுவமடு சௌந்தரம்மாவின் துயரக்கதை

விசுவமடு சௌந்தரம்மாவின் துயரக்கதை

பயங்கரவாதத்தில் மனிதத் தன்மைக்கு இடம் என எண்ணிக் கொண்டு நான் விசுவமடுவின் எல்.ரீ.ரீ.ஈ.யினரின் சிறைக் கூடத்திற்கருகாமையில் சிறிது நேரம் தாமதமாகி மீண்டும் கடைத்தெருவுக்கு வந்தேன். பிரபாகரன் தங்கியருந்த நிலத்தின் கீழிருந்த பங்கரைப்பற்றி பேச முன் விநாயகர் ஹாட்வெயாரின் துயர் படிந்த கதையை உங்களுக்கு கூற அனுமதி தாருங்கள்.

“விநாயகர் என்ற பெயர் விசுவமடுவில் இரவு, பகலாக காலவலில் இருக்கும் இராணுவத்தினருக்கு பழக்கப்பட்ட பெயராகும். அப்பிரதேசத்திலிருந்து மிகப் பெரிய கட்டடப் பொருட்களுக்கான விற்பனை நிலையம் இதுவாகும். இன்று அது ஒரு பாழடைந்த அம்பலத்தைப் போல் இருக்கின்றது. டொபி, சொக்கலேற்று, கொஞ்சம் போத்தல்கள், சில தண்ணீர் போத்தல்கள் தவிர இன்று அங்கு விற்பனை செய்ய எதுவுமே இல்லை.

“ஐயனார்” என்ற கடவுளின் பெயரைக் கொண்டுள்ள அந்த விற்பனை நிலையத்தினுள்ளே நானும் விமலும் அனுரங்கவும் சென்றோம். நெருப்பினால் எரிந்து போன உட்பக்க சுவர்களுக்கிடையே போகும் போது எமக்கு பெரும் விரக்தியே ஏற்பட்டது. அதற்குப் பின்னுள்ள ஒரு இருட்டறைக்குள் ஒரு அப்பாவி பெண் வாழ்ந்து வந்தாள்.

இன்று சுமார் 20 வயதுடைய வாலிபன் ஒருவன் மாத்திரமே அவளுக்கு எஞ்சியிருந்தது. அந்த மகனும் யுத்த நடவடிக்கைகள் முடிவுற்று விசுவமடுவை அரசு கைப்பற்றும் வரை அத்தோட்டத்திலேயே நிலத்தின் கீழ் இருந்த ஒரு பங்கரிலேயே தான் இருந்தான். இந்த இயக்கத்துக்கு சேர்த்துக் கொள்ள இடைக்கிடை இவனை சிலர் இங்கு வந்ததாக அந்த அம்மா என்னிடம் கூறினாள்.

அவள் மாவத்தகம யட்டியாந்தோட்டையை பிறப்பிடமாகக் கொண்டவள். அவளின் உறவினர்களை விட்டு விட்டு இராசமாணிக்கம் என்ற தமிழ் இளைஞனைத் திருமணம் செய்து பெரும் கனவுகளை சுமந்து கொண்டுதான் இங்கு வந்தாள். விசுவமடுவுக்கு வந்த பின்னர் அவள் சவுந்தரம்மா என்று அழைக்கப்பட்டாள்.

இராசமாணிக்கம் ஒரு வித்தியாசமான மனிதன். பிறந்த வீட்டிலேயே ஊக்கத்தோடு வேலை செய்யும் அவர் எந்த ஒரு தடையினாலும் பின்னிற்காதவர். வெளிப்பார்வைக்குத் தெரியும் கடும் தன்மை அவரின் இதயத்தில் இல்லை. அவர் உண்மையிலேயே நல்ல ஒரு மனிதன்.

குலம், கோத்திரம், இன, மத பேதங்களை அவர் கால் தூசுக்கு சமமாகவே நினைத்தார். அவரின் ஜாதி மனித ஜாதியாகும். அதனால் தான் சவுந்தரம்மா அவர் மேல் ஈர்க்கப்பட்டாள்.

ஆனால் இராசமாணிக்கம் யட்டியந்தோட்டைக்கு வரும் போது விசுவமடுவில் அவருக்கு மனைவியும் இரு பிள்ளைகளும் இருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

இராசமாணிக்கம் அந்த குடும்பத்தைப் போலவே சவுந்தரம்மாவையும் எவ்வித குறையுமின்றி பராமரித்தார். முதலில் இருந்த குடும்பத்திலிருந்து விலகி அவர் விசுவமடுவில் சவுந்தரம்மாவுடன் தாம்பத்திய வாழ்க்கை நடத்தினார்.

அவர்கள் இருவரும் ஜாடிக்கு மூடி போல் பொருத்தமானவர்கள் என்று சிலர் கூறினர். அதிகாலையில் எழுந்து ஒரு பக்கத்திலுள்ள ஹாட்வெயாரில் வேலை செய்வது இராசமாணிக்கத்தின் வழக்கமாகும். அதன் மறுபக்கத்திலுள்ள மொத்த வியாபார கடையை நடத்தியது சவுந்தரம்மாவாகும். சவுந்தரம்மா கயிற்றுக் கட்டிலில் இருந்து கூறிய கண்ணீர்க் கதையை இதிலிருந்து அவளின் வாய்ச் சொற்களினால் எழுதுகிறேன்.

“நான் விசுவமடுவுக்கு வரும் போது இப்பகுதி மிகவும் செழிப்பாக இருந்தது. இராசமாணிக்கம் அவரது குடும்ப வாழ்க்கையில் மிகவும் விரக்தியடைந்தே இருந்திருக்கிறார்.

அவர் எனக்கு இதுபற்றி பின்னர் தான் கூறினார். ஆனால் அந்த குடும்பத்தினரும் நானும் மிகவும் ஒற்றுமையாகவே, இருந்தோம். நான் இங்கு பல சந்தர்ப்பங்களில் வந்து போனாலும் 1994 இல் தான் இங்கேயே தங்கினேன்.

இப்போது எங்களுக்கு 20 வயதுடைய ஒரு மகன் இருக்கிறார். எமது இரு கண்களும் அவன்தான். வாழ்க்கையில் பெரும்பாலான நாட்களை இம்மகனை நிலத்துக்குள் பங்கரில் வைத்துத் தான் பாதுகாத்தோம். நாங்கள் ஆரம்பத்தில் இங்கு புடவைக் கடையொன்றை தான் ஆரம்பித்தோம். இந்த புடவைக்கடை எமது அயராத உழைப்பினால் சிறிது காலத்தில் முன்னேறியது. கிராமத்திலுள்ள யாவருக்கும் உதவிகளைச் செய்து கொண்டு நாம் வாழ்ந்து வந்தோம். 1994 இல் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி எனக்கு இன்று போல் ஞாபகமிருக்கிறது.

அதிகாலையில் எமது கடையின் கதவை யாரோ பெரிய சப்தத்துடன் தட்டும் சப்தம் கேட்டது. எனது கணவர் அப்போது எழுந்து கடவுளை வணங்கிக் கொண்டு இருந்தார். நாம் இருவரும் சென்று யார் இப்படி தாழ்ப்பள்களை உடைக்க முயற்சி செய்கின்றார்கள் என்று பார்த்தோம். கடுமையான தோற்றத்தையுடைய இரு வாலிபர்கள் இருந்தார்கள். நீயா இராசமாணிக்கம் என்று ஒருவன் தமிழில் கேட்டான்.

எனது கணவர் ஆம் என்றார்.

நீங்களெல்லாம் கடை நடத்தினாலும் இயக்கத்தக்கு ஒரு சொற்ப பணத்தைத்தான் கொடுக்கிaங்க. இன்று 50,000 ரூபா பணமும் அங்கே நிறுத்தியிருக்கும் லொரியும் எமக்குத் தேவை என்று அவன் கர்ச்சித்தான்.

எனது மேல் மூளை சூடாகியது. மிகக் கஷ்டத்துடன் சேர்த்துக் கொண்ட கொஞ்ச பணத்தையும் எனது நகைகளையும் அடகு வைத்துச் சேர்த்துக் கொண்ட பணத்தினால் தான் லொரியை எடுத்தோம். மிளகாய், வெங்காயம், கஜு போன்ற பயிர்களின் விளைச்சல்களை கொண்டு செல்லும் நோக்கோடு தான் எடுத்தோம். மகனின் எதிர்காலத்தை எண்ணியே அந்த பயிரிடலை நாம் ஆரம்பித்தோம்.

எமக்கு ஒரு சொல் கூட பேச விடாமல் ஒருவன் லொரியில் ஏறி ஓட்டிக் கொண்டு தோட்டத்துக்கு வெளியில் கொண்டு சென்றான். மற்றவன் பணம் கொடு என்று கணவரை தள்ளிவிட்டு கடைக்குள் வந்தான்.

“இந்த இயக்கத்தை உருவாக்கியது. எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண என்று கூறினாலும் நீங்களெல்லாம் நாம் மிகக் கஷ்டத்துடன் சம்பாதித்துக் கொண்டவற்றை கப்பமாகக் கேட்கிaர்கள்.” இப்படி கணவர் கூறும் போது அந்த இளைஞன் கணவரின் கன்னத்தில் ஒரு அடி கொடுத்தார். அவர்கள் லாச்சியை (பெட்டி) உடைத்து தான் பணத்தை கொண்டு சென்றார்கள்.

நான் கணவருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அவரின் மனக் கவலையை சாந்தப் படுத்தினேன். நாங்கள் மொத்த வியாபாரத்தையும் புடவைத் தொழிலையும் செய்த அதேநேரத்தில் ஹாட்வெயார் பொருட்களையும் விற்பனை செய்கிறோம். எமக்கு ஒழுங்கான நித்திரை இருக்கவில்லை. வெடி சப்தங்களும் மோட்டார் சப்தங்களும் கேட்டாலும் நாம் அதைப் பாராது எமது வேலைகளைச் செய்து கொண்டு இருந்தோம்.

மற்றுமொரு நாள் மீண்டும் அவர்கள் இருவரும் வந்தனர். அன்றைக்கும் மீண்டும் 50,000 ரூபா கேட்டார்கள். நாம் சம்பாதித்ததை அவர்களுக்கு கொடுக்க நேரிட்டது. அவர்கள் அதைக் கொண்டு செய்த வேலை நாட்டை அழித்தது மாத்திரமே.

துரதிஷ்டமான அந்த நாள் இன்னும் 10 நாட்களுக்குப் பிறகு வந்தது. அன்றைக்கு வந்தவர்கள் 5 இலட்சம் ரூபா கேட்டார்கள்.

நான் அவர்கள் முன் கும்பிட்டேன். ஐயோ தம்பி எங்களுக்கு இலாபமில்லை. நாங்கள் இப்போதைக்கு 5 இலட்சமளவில் கொடுத்தும் இருக்கிறோம். இன்னும் கொடுக்கப்போனால் எங்களுக்கு சாப்பிடக் கூட இல்லாமல் போகும் என்று நான் கூறினேன்.

அவர்கள் பெரும் சத்தத்தோடு சிரித்து மிகப் பயங்கரமான கதைகள் சிலவற்றையும் கூறினர்.

எங்களுக்குத் தெரியும். உங்கட சின்னவனை எங்கேயாவது ஒழித்திருக்கிaர்கள். எங்களுக்கு அவனும் வேண்டும். பணம் மட்டுமல்ல. நாங்கள் ஈழத்தை அமைத்தால் இராசமாணிக்கம் எங்களுக்கு உதவி செய்த ஒரு வீரராவார். பணம் கொடுக்காவிட்டால் உங்களை நாய்களைப் போல் கொன்று விடுவோம் என்று ஒருவன் பெரும் சத்தத்தோடு சொல்லும் போது பங்கரினுள் இருந்த மகன் பயத்தால் நடுங்கினானாம். பின்னர் அவர்கள் எமன்களைப் போல் நாலா பக்கமும் கூரையின் மேலும் தேடினர். பின்னர் மீண்டும் கணவனிடத்தில் வந்தனர். பின்னர் எங்கே பணம். எங்களுக்கு வேலை இருக்கின்றது. தா என்று ஒருவன் காலை நிலத்தில் அடித்து கூறினான்.

எனது கணவனும் சொல் பேச்சு கேளாதவர். அவர் பாய்ந்து அவனுக்கு அடித்தான். பின்னர் அவர்கள் எல்லோரும் சேர்ந்து கணவனுக்கு அடித்து எல்.ரீ.ரீ.ஈ. சிறைக்கூடத்தின் பக்கம் இழுத்துச் சென்றார்கள். நான் அவரைக் கட்டிப் பிடித்து புலம்பினேன். கணவருக்கு அடித்தடித்து இழுத்துக் கொண்டு சென்றார்கள். நான் சின்னவனைப் பற்றி நினைத்து மீண்டும் பங்கர் பக்கம் போனேன். அவர்களிடம் அனுதாபத்தை எதிர்பார்ப்பது பெரிய ஒரு மடத்தனம்.

அது ஒரு வாழை மரக் காடொன்றில் காம்புகளைத் தேடுவதைப் போல ஒரு வேலை என்று நான் நினைத்தேன். இந்த தமிழ் மக்களிடையே இருந்த ஒற்றுமையானது மிகவும் புதினமானது. சவுந்தரம்மாவினதும் மகனினதும் பாதுகாப்புக்கு அதன் பின் வந்தது இராசமாணிக்கத்தின் முதல் மனைவியும் பிள்ளைகளுமாவர். அவர்கள் இந்த மகனைப் பாதுகாத்து பாதுகாப்பான ஒரு இடத்துக்குக் கொண்டு சென்றனர். சவுந்தரம்மாவுக்கும் அங்கேயே தங்கும்படி கூறினர்.

ஆனால் இந்த கடையை விட்டு செல்வது அவளால் முடியாத காரியமாகும். இங்கு அமைக்கப்பட்டுள்ள அனைத்திலும் தனது கனவனினதும் தனதும் வியர்வையும் கண்ணீரும் சேர்ந்துள்ளமையால் அவள் தனியாக “விநாயகர்” கடையிலேயே தங்கினாள். அக்காலத்தில் இக்கடை கே. எஸ். கே. ஸ்டோர்ஸ் என்று அழைக்கப்பட்டது.

இராசமணிக்கத்தின் அலரலின் ஒலி அந்த பெரும் இருளின் மத்தியில் அவளுக்குக் கேட்டது. அவள் வெறுமையான வனத்தை நோக்கி சமாதானத்தை வேண்டினாள். இந்த போரளிக் கூட்டம் ஒழிந்து போக வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

இருளில் நடமாடும் மிருகங்களின் சத்தத்துக்கு மத்தியில் இரவு 12.30 மணியளவில் கடையின் முன்னால் பிக்கப் வாகனமொன்று நிறுத்தம் சப்தம் கேட்டது. மீண்டும் அவர்கள் வந்திருந்தனர். ஆனால் இந்த இரவில் இனிமையான குரலிலே கதைத்தார்கள். அவர்கள் கடையின் முன்னால் தட்டினார்கள். அவர்களுக்கு மிச்சம் வைத்துக் கொள்ள எதுவுமே மிஞ்சியிருக்க வில்லை. மகனும் உறவினர்களின் பாதுகாப்பில் இருந்தான். அவள் கதவைத் திறந்தாள்.

அக்கா இராசமாணிக்கம் எவ்விப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறார். அக்கா இங்கு தனியாக இருப்பது நல்லதல்ல. அது இயக்கம் என்ற ரீதியில் நாம் விருப்பாததொன்று. தலைவன் அக்காவை கூட்டிக் கொண்டு வரச் சொன்னார். கடையை மூட எங்களால் முடியும். அக்கா ஏறுங்க. செளந்தரம்மாவுக்கு ஒன்றும் செய்துகொள்ள முடியாத நிலையில் அமைதியாக பிக்கப் வாகனத்தில் சென்று ஏறினாள். ஒரு ஆற்றுக்கருகில் வந்த அவர்கள் செளந்தரம்மாவின் கண்களை ஒரு துணித்துண்டினால் இறுக்கமாகக் கட்டினார்கள். ஒரு படகொன்றின் மூலம் அவளைக் கொண்டு செல்வதை உணர்ந்தாள்.

ஐயோ தம்பி என்னை எங்கு கூட்டிக் கொண்டு செல்கிaர்கள் என்று அழுது கண்ணீரோடு கேட்டாள். பயப்பட வேண்டாம். உங்களைப் போன்ற நிறைய பேர் இருக்கும் இடத்துக்குத்தான் போகிறோம்.... என்று அவர்கள் கூறினர்.

இந்த பாழடைந்த இரவு வேளையில் இனந்தெரியாத மனிதக் கூட்டத்துக்கு மத்தியில் அவளுக்குக் கேட்பதெல்லாம் படகின் சுக்கான் தண்ணீரில் அடிபடும் சப்தம் மாத்திரமே. அவர்கள் மிகவும் குறைவாகவே பேசினார்கள்.

இன்னும் சிறிது நேரத்தில் அவளை தென்னந்தோட்டம் போன்ற ஒரு இடத்துக்குக் கொண்டு சென்றார்கள் என்று சவுந்தரம்மா கூறினாள். அவ்விடத்தை அவள் எவ்வாறு கண்டுபிடித்தாள் என்றால் இதுவரை கண்களைக் கட்டியிருந்த துணித்துண்டை அவ்விடத்தில் அவிழ்த்திருந்தார்கள்.

அவளை சிறியதோர் குடிசை போன்ற ஒரு இடத்தில் நிறுத்தி அவர்கள் அங்கிருந்த புலிப்படை பெண்களிடம் சவுந்தரம்மாவை ஒப்படைத்தனர்.

இன்னும் சில நிமிடங்களில் அவளுக்கு உண்மை தெரிந்தது. அது கால்களுக்கு பூட்டுகளைப் போட்டு ஒரே நேருக்கு சங்கிலியொன்றால் கட்டப்பட்டிருந்த பெண்களின் வரிசையாகும். அவர்களின் தலை மயிர் அலங்கோலமாக சிதறி இருந்ததோடு உடுத்தியிருந்த உடைகளும் கிழிக்கப்பட்டிருந்து முகங்களில் கடுமையாக அடிபட்ட காயங்களின் அடையாளங்கள். சிலரின் கால்கள் வீங்கி அதிலிருந்து சலம் வடிந்து கொண்டிருப்பதைக் கண்ட சவுந்தரம்மாவின் இதயத்தின் துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

அம்மா நீங்க பயப்பட வேண்டாம். இராணுவத்துக்கு உளவு கொடுத்தவர்கள், தலைவருக்கு எதிரானவர்கள், தான் இவர்கள், நீங்கள் எங்களுக்குப் பணம் கொடுத்தீர்கள். பின்னர் முடியாது என்று சொன்னீர்கள் உங்களை கொலை செய்ய மாட்டோம். இப்படியான தண்டனை கொடுக்கவும் மாட்டோம். கேள்விகளைக் கேட்க மாத்திரமே கொண்டு வந்தோம். புலிப்படையின் முக்கிய ஒரு பெண் செளந்தரம்மாவின் பயத்துடன் கூடிய கண்களைப் பார்த்து அப்படி கூறினாள்.

அடுத்த நாள் அவளுக்கு சாப்பிட ஒரு சிறிய ரொட்டி கிடைத்தது. ஆனால் அவள் அதை சாப்பிடவில்லை. அதை அந்த பெண் போராளிகள் விரும்பவில்லை. அவர்கள் கோபத்துடன் கர்ச்சித்தனர். “எங்களுக்குக் கிடைப்பதை தான் நாங்கள் சாப்பிட கொடுக்கிறோம். சாப்பிடாவிட்டால் உன்னை கொன்று விடுவோம். என்று ஒருத்தி கூறினாள். எதிரிலிருந்த சிறிய ஒரு குடிசை போன்றிருந்த வீடானது தென்னை ஓலைகளினால் சுற்றிலும் மறைக்கப்பட்டு இருந்தது. அங்கு அவர்களின் ஒரு தலைவன் இருக்கிறான் என்று புலிப்படை பெண்கள் கூறினர்.

சிறிது நேரத்தில் அங்கு சவுந்தரம்மா அழைக்கப்பட்டாள். இராசமாணிக்கத்தின் வங்கிக் கணக்கு வழக்குகள், தங்க ஆபரணங்கள், ஏனைய சொத்துக்கள் பற்றி அவன் கேட்டான். அடுத்து விசுவமடுவிலிருந்து புதுக்குடியிருப்பு வரை வாழும் மக்களின் தகவல்களைப் பற்றி கேட்டான். அவர்கள் இராணுவத்துக்கு தகவல் கொடுப்பவர்களா? என்று கேட்டான்.

முடிவின்றி கேட்கும் இந்த கேள்விகள் சவுந்தரம்மாவுக்கு ஒரு தொல்லையாகவே இருந்தது. பொய்யாக அப்பாவி காட்டிக் கொடுக்க அவள் விரும்பவில்லை. அவர்கள் கேட்கும் சிலரைப் பற்றி அவள் நன்றாக அறிந்திருந்தாலும் அது பற்றி ஏதாவது கூறுவது தவறாகவே முடியும் என்று அவள் நினைத்தாள்.

“இவ்வாறு பல தொல்லைகளைக் கொடுத்து சரியாக சாப்பிடக் கூட கொடுக்காமல் என்னை 15 நாட்கள் அவர்கள் வைத்திருந்தார்கள். என் கணவரைப் பற்றி கேட்ட போது எதுவும் கூறவில்லை. அவர்கள் மகன் எங்கே இருக்கிறான் என்று தான் கேட்டார்கள். சிவராத்திரி தினத்தன்று எங்களுக்கு கொஞ்சம் கடலை கிடைத்தது. இல்லாவிட்டால் சாப்பிட்டது ரொட்டி மாத்திரமே.

அதன் பின்னர் என்னிடமிருந்து இதைவிட எந்தத் தகவலும் கிடைக்காது என்று தெரிந்து கொண்டு கடைக்கருகில் கொண்டு வந்து போட்டார்கள்.

ஆனால் இந்த இயக்கம் பெண்களைக் கற்பழித்தல், மற்றும் துஷ்பிரயோகங்களையென்றால் செய்யவில்லை. ஆனால் நான் மீண்டும் வரும் போது இந்தக் கடையில் இருந்த பொருட்கள் எதுவுமே இருக்கவில்லை. புடவைக் கடையில், ஹாட்வெயாரில் ஒன்றுமே இல்லை. இருந்தது சுவர்கள் மாத்திரமே. அவர்கள் உட்பகுதிக்கு நெருப்பு வைத்துத்தான் போயிருக்கிறார்கள்.

ஐயோ, இந்த பெயர் சொல்ல முடியாத வழக்கை யாரிடம் சொல்ல?

இராணுவம் விசுவமடுவை சுற்றி வளைக்கும் போது எங்கள் தலைகளில் பூக்கள் பூத்தன. நாட்டுக்கு அன்பு செலுத்திய மக்கள் சந்தோஷப்பட்டார்கள். எனது மகன் பாதுகாக்கப்பட்டான். அவன் பங்கரிலிருந்து வெளியில் வந்தான். இன்று அய்யனார் கடவுளின் துணையால் சிறியளவில் டொபி, சொக்கலேட் என்பவற்றை விற்பனை செய்து கொண்டு பயமின்றி வாழ்ந்து வருகிறோம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]