கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04
SUNDAY FEBRUARY 26, 2012

Print

 
நுகேகொட பொலிஸ் நிலையத்துக்கு போக்குவரத்து சைகைக் கோன்கள்

நுகேகொட பொலிஸ் நிலையத்துக்கு போக்குவரத்து சைகைக் கோன்கள்

றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான ஆர்பிகோ பிளாஸ்டிஷெல்ஸ் நிறுவனத்தின் மூலம், நுகேகொட பொலிஸ் நிலையத்துக்கு போக்குவரத்து சைகை கோன் (Traffic Cones) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இப்பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசா லைகளுக்கு அருகாமையில் நாளாந்தம் இடம்பெறும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல்கள் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த சைகை கோன்களை ஆர்பிகோ பிளாஸ்டிஷெல்ஸ் நிறுவனம் மேல் மாகாணத்தின் தென்பகுதிக்கான பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ. எம். கருணாரத்னவிடம் கையளித்திருந்தது. இந்நிகழ்வு சைலியமம் சர்வதேச பாடசாலையில் இடம்பெற்ற பாடசாலை போக்குவரத்து சிராக்கல் பிரிவின் விருது வழங்கல் 2011 நிகழ்வின் போது இடம்பெற்றிருந்தது.

ஆர்பிகோ பிளாஸ்டிஷெல்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டமாக இடம்பெறும் இந்தப் போக்குவரத்து சைகை கோன் அன்பளிப்பு நிறுவனத்தின் விற்பனை பணிப்பாளர் எமில் சேனநாயக்க மூலம் வழங்கப்பட்டிருந்தது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]