புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 

மதுராபெ'ன் அன்ட் லைவ் ஸ்டைலுடன்

இலங்கையர்களின் ஆடைத் தெரிவை மேம்படுத்த

மதுராபெ'ன் அன்ட் லைவ் ஸ்டைலுடன்

ஹமீடியா ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையின் ஆண்கள் ஆடைத் துறையில் நிபுணத்து வம் பெற்ற முன்னணி நிறுவனமாகத் திகழும் ஹமீடியா, இந்தியாவின் மிகப் பெரியதும் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதுமான ஆடை உற்பத்தி நிறுவனமான மதுரா பெஷன் அன்ட் லைவ் ஸ்டைல் உடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. Louis Philippe. van Heusen Allen Solly, Peter England போன்ற முன்னணி வர்த்தக குறியீடுகளிலான ஆண்கள் ஆடைகளை இறக்குமதி செய்து, இந்நாட்டில் விநியோகிப்பதற்கு இடமளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மூன்றாண்டுகளுக்கான இந்த ஒப்பந்தமானது மதிப்புமிக்க பிரமுகர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தோர் முன்னிலையில், ஹமீடியா நிறுவனத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் ஹ¤ஸைன் சாதிக் மற்றும் முதுரா பெஷன் அன்ட் லைவ் ஸ்டைல் நிறுவனத்தின் பிரதம தொழிற்பாட்டு அதிகாரி சொஹைப் பரூக்கி ஆகியோரினால் 2012 பெப்ரவரி 14ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

Adidas Lee, Wrangler. Raymond, Park Avenue போன்ற பல்வேறு மிகவுன்னதமான சர்வதேச வர்த்தக குறியீடுகளின் ஏக விநியோக முகவர் அந்தஸ்தினை ஹமீடியா நிறுவனம் தற்போது அனுபவித்து வருகின்றது. இந்நிலையில் மதுரா பெஷன் அன்ட் லைவ் ஸ்டைல் நிறுவனத்துடனான இந்த ஒன்றிணைவானது ஹமீடியாவின் தற்போதைய உற்பத்தி வரிசைகளை மேலும் விஸ்தரிப்பதுடன் அதன்மூலம் இலங்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் ஆடையுற்பத்திகளையும் மேலும் மேம்படுத்துகின்றது.

ஹமீடியா நிறுவனத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்ப்¡ளர் ஹ¤ஸைன் சாதிக் கூறுகையில், “ஆடைகளுக்கான ஈடு இணையற்ற தெரிவு மற்றும் செளகரியம் ஆகிய விடயங்களில் இலங்கையைச் சேர்ந்த ஆண்களுக்கு உண்மையான சர்வதேச சில்லறை வர்த்தக அனுபவத்தை வழங்குவதே எமது நோக்கமாகவுள்ளது. ஹமீடியா- மதுரா பெஷன் அன்ட் லைவ் ஸ்டைல் ஆகிய நவநாகரிக சக்திமிக்க இரு நிறுவனங்களும் கைகோர்த்து செயற்படுவதுடன் Planet Fashion  என்ற வர்த்தக நாமத்தின் கீழ் கருத்திட்ட விற்பனை நிலையம் ஒன்றினையும் திறந்து வைக்கவுள்ளோம். இவ் விற்பனை நிலையமானது Louis Philippe. van Heusen Allen Solly, Peter England ஆகிய நான்கு வர்த்தக குறியீடுகளையும் கொண்ட அனைத்து உற்பத்திகளினதும் பிரத்தியேக சில்லறை விற்பனை நிலையமாகத் தொழிற்படும்” என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.