புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 

csr நிதியத்தின் மூலம் அம்பாந்தோட்டை பாடசாலையில்

கொமர்'ல் வங்கி csr நிதியத்தின் மூலம் அம்பாந்தோட்டை பாடசாலையில் தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம்

கொமர்ஷல் வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புத்திட்ட (CSR) நிதியத்தின் மூலம் அம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம றன்மினிதென்ன ஆரம்பப் பாடசாலையில் சகல வசதிகளும் கொண்ட கணனி ஆய்வு கூடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப அறிவை நாடு முழுவதும் பரப்பும் இலக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த கணனி ஆய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நன்கொடை மூலம் 126 மாணவர்களைக் கொண்ட றன்மினிதென்ன ஆரம்பப் பாடசாலை கொமர்ஷல் வங்கியின்விஷிஞி நிதியத்தின் மூலம் இலங்கையில் கணனி ஆய்வு கூடத்தைப் பெற்றுக் கொண்ட 32 வது பாடசாலையாகத் திகழ்கின்றது. வங்கி வருடாந்தம் அதன் வரிக்குப் பிந்திய இலாபத்தில் ஒரு வீதத்தை இந்த நிதியத்தக்கு வழங்கி வருகின்றது.

2011 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதத்தில் மட்டும் கொமர்ஷல் வங்கி 13 கணனி ஆய்வு கூடங்களைத் திறந்து வைத்துள்ளது. இவற்றுள் அநேகமானவை கிராமப்புற பாடசாலைகளில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் சுமார் 7000 மாணவர்கள் நன்மை அடைந்துள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.