புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
பிரபாகரனின் மரணத்தில் மகிழ்வடைந்த ராகுல் காந்தி?

பிரபாகரனின் மரணத்தில் மகிழ்வடைந்த ராகுல் காந்தி?

தந்தையின் படுகொலையால் ஆத்திரமாம்! - விக்கிலீக்ஸ்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்துக்காக காங்கிரஸ் கட்சி தலைமையின் ஒரு பிரிவினர் காத்து இருந்தனர் என்று அமெரிக்காவுக்கு தெரிய வந்துள்ளது.

பிரபாகரனின் மரணத்தைக் காண்கின்றமைக்கு ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைமையின் ஒரு பிரிவினர் காத்து இருந்தனர் என்றும் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்கு பழிவாங்க கறுவிக்கொண்டு இருந்தனர் என்றும் தி. மு. க. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தயாநிதி மாறன் அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்தார் என துணைத் தூதரகத்தில் இருந்து 2008 ஆம் ஆண்டு நவம்பர் 03 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் உள்ளது.

இதனால் இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ¤க்கும் தி. மு. க.வுக்கும் இடையில் பிளவு காணப்படுகின்றது என்றும் மாறன் சொல்லி இருக்கின்றாராம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.