புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
அரசுக்கு ஆதரவான முஸ்லிம் கட்சிகளில் மு. கா. வுக்கே கூடுதல் சலுகையாம்!

அரசுக்கு ஆதரவான முஸ்லிம் கட்சிகளில் மு. கா. வுக்கே கூடுதல் சலுகையாம்!

ஒன்றுமில்லை எனக் கூறுவது பொய்க் குற்றச்சாட்டென

மனம் குமுறுகிறார் முபாறக் மெளலவி

அரசாங்கத்தின் மூலம் பல சுகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தமக்கு அபிவிருத்தியில் பங்கு தர அரசாங்கம் மறுப்பதாக குற்றம் சாட்டுவது அக்கட்சியினரின் இயலாமையை மறைப்பதற்காகும் என உலமா கட்சித் தலைவர் முபாறக் மெளலவி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

முஸ்லிம் கட்சிகளில் முஸ்லிம்களின் அதிக ஆணையை பெற்ற முஸ்லிம் காங்கிரஸ¤க்கு அபிவிருத்தியில் பங்கு தர அரசாங்கம் மறுப்பதாக அண்மையில் அதன் தவிசாளர் பிரதியமைச்சர் பiர் சேகு தாவூத் தெரிவித்திருந்தார். ஸ்ரீல. மு. கா அரசுடன் இணைந்து கொண்டதானது இந்த அரசாங்கத்தை உளமாற ஏற்றுக் கொண்டதனால் அல்ல என்பதை முழு உலகும் அறியும். முஸ்லிம் கட்சிகளில் முஸ்லிம்களின் ஆணையை பெற்ற பெரிய கட்சி மு. கா. என்று மிகைப்படுத்தி கூறிக் கொண்டாலும் முஸ்லிம் கட்சிகளுள் இந்த அரசாங்கத்தை மிக மோசமாக எதிர்த்த கட்சியும் மு. கா. மட்டும் தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மு. கா. பெரிய கட்சி என்ற மாயை தற்போது மாறி மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி மாவட்டங்களில் முஸ்லிம்களின் முதன்மை கட்சியாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸே உள்ளது என்பதை புள்ளி விபரம் தெரிந்தவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருப்பவர்கள் தமது அமைச்சுக்குரிய அரசாங்கத்தின் நேரடி ஒதுக்கீடுகளை மட்டும் நம்பியிராமல் ஏனைய அமைச்சர்களை நட்புடன் அணுகி காரியம் சாதிப்பதையே அதிகம் காண்கிறோம். ஆனால் இவர்கள் அரசாங்கத்தை குற்றம் சொல்வது தவறானதாகும்.

அதே போல் அரசுக்கு பூரண ஆதரவு என சொல்லிக் கொள்ளும் மு. கா, அரசுக்கெதிரான நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைக்கும் இரட்டை வேடம் போடுவதையும் முழு உலகும் அறியும். இது பற்றி அரசாங்கம் நன்கு தெரிந்திருந்தும் அரசு நிறையவே இவர்களுக்கு கைமாறு செய்து வருகிறது. உண்மையில் அரசுக்கு ஆதரவான ஏனைய முஸ்லிம் கட்சிகளை விட மு. கா.வுக்கே அரசாங்கம் பல வளங்களை அளித்துள்ளது என்பதே உண்மையானதாகும் எனவும் முபாறக் மெளலவி தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.