புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
வடக்கு, கிழக்கில் மக்களுக்கு தேவை அபிவிருத்தியே; அதிகார பகிர்வு அல்ல

வடக்கு, கிழக்கில் மக்களுக்கு தேவை அபிவிருத்தியே; அதிகார பகிர்வு அல்ல

பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிக்கிறார்

வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு இன்று தேவையாக இருப்பது அபிவிருத்தியே. அதிகாரப் பகிர்வு அல்ல என்று பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

“இன்று சில கட்சிகள் வடக்கு கிழக்கின் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுகின்றன. வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு இன்று தேவையாக இருப்பவை நல்ல வீட்டு வசதி பாடசாலைகள் சுகாதார வசதிகள் போன்றவற்றுடனான சிறந்த வாழ்க்கையே. இந்த வசதிகளை அவர்கள் பெறும் போது அதிகார பரவல் உட்பட எல்லாவற்றையும் அவர்கள் தேசிய ரீதியிலேயே சிந்திப்பார்கள்.

மக்களைச் சார்ந்து வாழும் அரசியல்வாதிகள் வறுமையில் வாழும் மக்கள் மத்தியில் வறுமையையே ஆயுதமாகப் பயன்படுத்தி அரசியல் ஆதாயங்களைப் பெற முனைகின்றனர். அதிகாரப் பகிர்வு இருந்தால் வறுமை மறைந்துவிடுமென்று அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு தேவை அபிவிருத்திக்கான அதிகாரப் பகிர்வு அல்ல. அரசியல்வாதிகள் இனவாதத்தை தமது அரசியல் மேடையாகப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலைமை பற்றி தமிழ் கூட்ட மைப்பு சிந்திக்க வேண்டும். அரசியல் தலைமைத்துவம் உட்பட அனைத்து நலன்களையும் எல். ரி. ரி. ஈ. அழிந்துவிட்டது.

தமிழ் கூட்டமைப்பு அரசுடன் இணை ந்து வடக்கு, கிழக்கை கட்டியெழுப்ப வேண்டும். அமெரிக்கா ஒரு கறுப்பு இனத்தவரை ஜனாதிபதியாக்கியுள்ளது. ஆனால் அமெரிக்காவில் எவரும் ஒருவரின் நிறத்தைப் பற்றியோ சமயத்தைப் பற்றியோ இனத்தைப் பற்றியோ பேசுவதில்லை. அதனால் தான் அவர்கள் எல்லா நலன்களுடனும் சிறப்பாக வாழ்கின்றனர்.

ஆனால், ஆபிரிக்காவின் நிலைமை வித்தியாசமானது. அவர்கள் மிகுந்த வறுமையில் வாடுகின்றனர். அங்கு இந்த நிலைமை ஏனெனில் நிறம், சமயம், இனம் போன்ற வேறுபாடுகள் காரணமாகவே அரசியல்வாதிகள் இவற்றை தமது அரசியல் மேடையாகப் பயன்படுத்துவதாலேயே மக்களின் வாழ்க்கை மேலும் சீரழிகிறது.

ஆதலால் வடக்கு, கிழக்கு மக்களும் தேசிய ரீதியில் சிந்திக்கும் நிலைமையை உருவாக்க வேண்டும்.” இவ்வாறு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.